யூடியூப் மூலம் பணக்காரர் ஆவது எப்படி?- சேனல் தொடங்கி பிரபலமடைய எளிய வழிமுறைகள்- இனி ஒரே வருமானம் தான்!

|

கூகுளுக்கு சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் ஆனது ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருக்கிறது. இது இணையதளத்தில் உள்ள மொத்த பயனர்களில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். சமூகவலைதளங்களில் யூடியூப் என்பது பிரதான பயன்பாடாக இருக்கிறது. ஒரு விஷயம் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்படுவதை விட யூடியூப் போன்ற சமூகவலைதளங்களில் பதிவிட்டால் அது அதிக பார்வையாளர்களை சென்றடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. யூடியூப் சேனல் மூலம் பணம் ஈட்டி பிரபலமடைந்தவர்கள் ஏராளம்.

பிரதானமாக இருக்கும் யூடியூப்

பிரதானமாக இருக்கும் யூடியூப்

இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க இடம் இருக்கிறது. சமூகவலைதள பயன்பாட்டில் பிரதானமாக இருப்பது யூடியூப் தான். யூடியூப்பில் வீடியோ பார்க்கும் போது இதை சப்ஸ்க்ரைம் செய்யவும் பெல் பட்டனை கிளிக் செய்யவும் என்ற வார்த்தை பொதுவாக இடம்பெறும். இதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. யூடியூப்-ல் சேனல் தொடங்கி அதை மக்களிடம் சென்றடைய வைப்பது, பணம் ஈட்டுவது உள்ளிட்ட வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.

சேனல் உருவாக்கும் வழிமுறைகள்

சேனல் உருவாக்கும் வழிமுறைகள்

யூடியூப்பில் சேனல் தொடங்குவதற்கு பணம் எதுவும் தேவையில்லை. உங்கள் மெயில் ஐடி மூலமாகவே சேனல் தொடங்கலாம். யூடியூப்பில் உங்கள் மெயில் ஐடி கொண்டு முதலில் லாக்-இன் செய்ய வேண்டும். பின் உங்கள் மெயில்ஐடி ஐகானுக்கு அருகில் மெயில் ஐடி புகைப்படத்தோடு இருக்கும் வட்ட வடிவ ஐகானை கிளிக் செய்யவும். இதில் Create Your Channel என்று காண்பிக்கும்.

சேனலுக்கு ஏற்ற பெயர் என்பது அவசியம்

சேனலுக்கு ஏற்ற பெயர் என்பது அவசியம்

சேனல் உருவாக்கும் வழிமுறை- 2

இதை கிளிக் செய்தவுடன் உங்கள் சேனலுக்கு பெயரை வைக்க வேண்டும். நீங்கள் எந்த மாதிரியான வீடியோ பதிவேற்ற திட்டமிட்டுள்ளீர்களோ அதற்கு ஏற்ப பெயரை வைப்பது சிறந்தது.

சேனல் உருவாக்கும் வழிமுறை- 3

பின் மொபைல் எண்ணை பதிவிடவும். அந்த எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். இதன் கீழே காட்டப்பட்டும் டெக்ஸ்ட் மெசேஜ் என்ற ஆப்ஷனை டிக் செய்து கொள்வது சிறந்தது. பின் கிரியேட் என்று கொடுத்த உடன் சேனல் கிரியேட் ஆகி விடும்.

பிரபலமடைய வழிமுறைகள்

பிரபலமடைய வழிமுறைகள்

யூடியூப்பில் சேனலை உருவாக்கும் வழிமுறை இவ்வளவுதானா என்று சிந்திக்கலாம். சேனலை உருவாக்குவது என்பது எளிது அதை பிரபலமடைய வைப்பது தான் சற்று சிரமம். பொதுவாக யூடியூப்பில் பணம் ஈட்டும் நோக்கத்தோடு சேனலை உருவாக்கி வளர்ந்தவர்களை விட பிரபலமடைய வேண்டும் என்று சேனலை உருவாக்கி வளர்ந்தவர்களே அதிகம். பிரபலமடைவதற்கான முழு விவரங்களை பார்க்கலாம்.

வீடியோ தரம் அவசியம்

Step 1:

யூடியூப் சேனலின் பெயர் பயனர்களை ஈர்க்கும் விதமாக வைக்க வேண்டும். அதேசமயத்தில் நீங்கள் பதிவிடும் வீடியோவுக்கு தொடர்புடையதாக இந்த பெயர் இருக்க வேண்டும்.

Step 2:

சேனலில் பதிவேற்றும் வீடியோ கிரீன் மேட் போட்டு, 4கே தொழில்நுட்பத்துடன், பல்வேறு வகை எடிட் செய்து அப்லோட் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. இருப்பினும் வீடியோ தரம் பார்வையாளர்களை கவரும் வகையில் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

Step 3:

ஒரு சேனலில் ஒரே விஷயம் தொடர்பான பல்வேறு வீடியோக்களை பதிவு செய்வது உங்கள் சேனலின் தரத்தை உயர்த்தும். எடுத்துக்காட்டாக, திரைப்பட ரிவ்யூ, சமையல், சுற்றுலா தளம் உள்ளிட்டவைகளில் ஏதேனும் ஒன்று.

Step 4:

வீடியோ முழுக்க முழுக்க உங்களுடையதாக இருத்தல் என்பது மிக அவசியம். பிற வீடியோவை எடிட் செய்தோ, திரைப்பட மியூசிக் பேக் க்ரவுண்டில் வைத்தோ வீடியோக்களை பதிவிடுவதை தவிர்ப்பது நல்லது.

முழுக்க உங்கள் உருவாக்கமாக இருக்க வேண்டும்

முழுக்க உங்கள் உருவாக்கமாக இருக்க வேண்டும்

Step 5:

அதேபோல் பதிவேற்றம் செய்யும் போது உங்களுடைய வீடியோவிற்கு யூடியூப் தரும் ஆடியோவைப் பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களைப் பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பர வருமானம் உங்களுக்கு வராது.

Step 6:

மொபைலில் வீடியோ கட்டர், கணினி இருந்தால் மூவி மேக்கர் (movie maker) என்ற மென்பொருள் மூலம் உங்களுடைய வீடியோவில் தேவையில்லாத இடங்களை நீக்கம் செய்து எடிட் செய்து கொள்ளுங்கள்.

வீடியோ பதிவு குறித்த தகவல்கள்

Step 7:

பின்னணி இசையோ அல்லது குரலோ தேவைப்பட்டால் அதையும் ரெகார்ட் செய்து வீடியோ பதிவில் சேருங்கள்.

Step 8:

Upload செய்த பிறகு உங்கள் வீடியோ பதிவு குறித்த தகவல்களை தர வேண்டும். பார்வையாளர்களை எளிதில் கவரும் வகையில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தலைப்பு கொடுங்கள். வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதியில் உங்கள் வீடியோவை தேடுவதற்கு எளிதான வார்த்தைகளை கொடுங்கள். இப்போது Public என்று தேர்வு செய்து save செய்து விடுங்கள்.

யூடியூப்பில் பணம் ஈட்டுவதற்கான வழிமுறைகள்

யூடியூப்பில் பணம் ஈட்டுவதற்கான வழிமுறைகள்

Step 1:

நீங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவிற்கு அதிக views வந்தாலோ அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமானது என்றாலோ 'invitation to earn revenue from you videos' என்ற தலைப்பில் மெயில் தங்கள் பதிவிட்ட மெயில் ஐடி-க்கு வரும். அந்த மின்னஞ்சலில் உள்ள லிங்கை கிளிக் செய்து தங்களது தகவல்களை கொடுக்க வேண்டும்.

Step 2:

நீங்கள் பதிவு செய்த தகவல் அனைத்தும் திருப்தியாக இருப்பின், நீங்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை யூடியூப் பரிசோதனை செய்யும். இவை அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் யூடியூப் உங்களுக்கான வருமானத்தை கொடுக்கத் தொடங்கிவிடும்.

Step 3:

அதன்பின் அதிகமான மற்றும் வித்தியாசமான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யுங்கள். அதிக பார்வையாளர்கள் பார்க்க வேண்டும். இதைத்தான் யூடியூப் நிறுவனம் எதிர்பார்க்கிறது. எல்லாம் சரியாக இருந்தால் யூடியூப் நிறுவனம் partner என்ற அந்தஸ்தை உங்களுக்கு வழங்கிவிடும்.

Step 4:

இவை அனைத்தும் முடிந்ததும் யூடியூப் விளம்பரங்கள் அடிப்படையில் உங்களுக்கு வருமானம் வழங்கும். பார்வையாளர்கள் எண்ணிக்கை, சேனல் சப்ஸ்க்ரைபர்கள் என்பது மிக அவசியம். இதைவிட யூடியூப் சேனலில் கன்னியமான வீடியோ பதிவு என்பது மிக பிரதானம். இந்த வழிமுறைகளில் பின்பற்றி யூடியூப்பர் ஆக நீங்கள் மாறி பணம் சம்பாதிக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to Create Youtube Channel and Earn Money From this?- Simple Tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X