ஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களில் ஃபோல்டர் உருவாக்குவது, டெலீட் மற்றும் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

|

கஸ்டமைசேஷன் அம்சங்களை வழங்குவதில் ஆண்ட்ராய்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் இயங்குதளங்கள் சற்றே கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த இயங்குதளத்தில் வால்பேப்பர்களை மாற்றும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், செயலிகளை ஒரே இடத்தில் வைத்துக் கொள்ளும் ஆப் டிராயர் வழங்கப்படவில்லை. இதனால் ஹோம் ஸ்கிரீன் தானாக லான்ச்சர் போன்று செயல்படும்.

எளிதில் இயக்க முடியும்

எளிதில் இயக்க முடியும்

இருந்தும் ஐ.ஒ.எஸ். தளத்தில் ஃபோல்டர்களை உருவாக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் செயலிகளை வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு செய்யும் போது ஸ்கிரீன் அழகாக ஒருங்கிணைத்துக் கொள்ளலாம். ஒருவேளை பல்வேறு போட்டோ மற்றும் வீடியோ எடிட்டிங் டூல்களை வைத்திருந்தால் அவற்றை ஒரே ஃபோல்டரில் வைத்துக் கொள்ளும் போது, மிக எளிதில் இயக்க முடியும்.

 ஆப்ஷனாக தெரிகிறதா?

பார்க்க நல்ல ஆப்ஷனாக தெரிகிறதா? இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தை கடந்த மாணவர்-மின்னல் வேகத்தில் வந்த ரயில்:ஒரு விநாடிதான்!ஹெட்செட்டில் பாட்டுக் கேட்டபடி தண்டவாளத்தை கடந்த மாணவர்-மின்னல் வேகத்தில் வந்த ரயில்:ஒரு விநாடிதான்!

ஹோம் ஸ்கிரீனில் வலது புறம்

ஹோம் ஸ்கிரீனில் வலது புறம்

ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தில் புதிய ஃபோல்டரை உருவாக்க செயலியை அழுத்தி பிடித்து, மற்றொரு செயலியின் மீது வைத்தாலே போதுமானது. முதலில் ஹோம் ஸ்கிரீனை அழுத்தி பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது எடிட்டிங் மோட் திறக்கும். இனி ஹோம் ஸ்கிரீனில் வலது புறம் - எனும் ஐகான் தெரியும்.

ஃபோல்டர் உருவாகி இருக்கும்

ஃபோல்டர் உருவாகி இருக்கும்

அடுத்து ஒரு செயலியை க்ளிக் செய்து மற்றொரு செயலி மீது வைத்தால் புதிய ஃபோல்டர் உருவாகி இருக்கும். ஃபோல்டர் உருவானதும் அதன் பெயரை உங்கள் விருப்பம் போல் மாற்றிக் கொள்ளலாம். பின் திரையில் எங்கு வேண்டுமானாலும் க்ளிக் செய்தோ அல்லது கீழ் புறம் இருந்து ஸ்வைப் செய்து மாற்றிக் கொள்ளலாம். எனினும், இவ்வாறு செய்யும் முன் ஃபோல்டரில் சேர்க்க வேண்டிய செயலிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு உதவிபுரிகிறது

செயற்கை நுண்ணறிவு உதவிபுரிகிறது

ஃபோல்டர் பெயரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படும் போது, செயற்கை நுண்ணறிவு உதவிபுரிகிறது. இது நீங்கள் தேர்வு செய்த செயலிகளுக்கு ஏற்ப ஃபோல்டர் பெயர் தானாக கேம்ஸ், ஆர்கனைசர், யுடிலிடிஸ் போன்று செட் ஆகும்.

டெலிட் ஆப்ஷனை க்ளிக்

ஃபோல்டர்களை டெலிட் செய்ய எடிட் மோட் சென்று - ஐகான் கொண்டு டெலிட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to create, rename, and delete folders on an iPhone or iPad: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X