ஆண்லைன் இல் Google People Card முறைபடி உங்களுக்கு விசிட்டிங் கார்டு உருவாக்குவது எப்படி?

|

கூகிள் நிறுவனம் சமீபத்தில் கூகிள் பீப்பிள் கார்டு என்ற டிஜிட்டல் விசிட்டிங் கார்டு முறையை அறிமுகம் செய்தது. இதற்கு முன்பு பிரபலங்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளக் கூகிள் 'Knowledge Panel' என்ற வசதியை அறிமுகம் செய்திருந்தது. அதேபோன்று தற்பொழுது தனித்திறமை கொண்டவர், வணிகம் செய்பவர், கட்டுமான பணிகளைச் செய்துகொடுப்பவர் எனப் பலரின் அடையாளங்களைக் காட்டும் விசிட்டிங் கார்டை கூகிள் அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் விசிட்டிங் கார்டு

டிஜிட்டல் விசிட்டிங் கார்டு

முன்பு அறிமுகம் செய்யப்பட்ட பிரபலங்களின் Knowledge Panel போன்ற இந்த டிஜிட்டல் விசிட்டிங் கார்டும் செயல்படுகிறது. உங்கள் தொழில் தொடர்பாக யாரும் கூகுளில் தேடும்போது, உங்களை பற்றிய சுருக்கமான அறிமுகம், முகவரி, இணையதளம் மற்றும் சோஷியல் மீடியா முகவரியின் லிங்குகள் என முக்கியமான விஷயங்களை உங்களை தொடர்பு செய்வதற்காகக் கூகிள் தற்பொழுது அனுமதிக்கிறது.

டிஜிட்டல் விசிட்டிங் கார்டை எப்படி நீங்களே உருவாக்கலாம்?

டிஜிட்டல் விசிட்டிங் கார்டை எப்படி நீங்களே உருவாக்கலாம்?

  • இந்த டிஜிட்டல் விசிட்டிங் கார்டை உங்களுக்காக எப்படி நீங்களே உருவாக்கலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம். முதலில் நீங்கள் உங்களுடைய gmail முகவரி மூலமாக லாக்-இன் செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு, Google Search டேப்பிறகுச் சென்று உங்களுடைய பெயர் அல்லது ‘Add me to Search' அல்லது 'Edit My Search Card' என்று சர்ச் செய்யுங்கள்.

பட்டையை கிளப்பும் IOB வங்கி! வேறு எந்த வங்கியிலும் இந்த வசதி இல்லை! அப்படியென்ன வசதி?

Add me to Search
  • 'Add me to Search' என்ற ஒரு இணைப்பு இப்பொழுது கூகிள் உங்களுக்குக் காட்டும். அந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
  • இப்போது காட்டும் பக்கத்தில் உங்களுடைய கூகுள் கணக்கிலிருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட சில தகவல்கள் காண்பிக்கப்படும்.
 புகைப்படம், பெயர்,
  • உங்களுடைய புகைப்படம், பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவிடுங்கள்.
  • இது அனைத்தும் அடிப்படைத் தகவல்கள். விசிட்டிங் கார்டு உருவாக்கக் கட்டாயம் தேவைப்படும் தகவல்கள் இவை.
  • இதை தவிர உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம், வேலை செய்யும் இடம், சமூக வலைத்தள கணக்குகளின் முகவரி போன்றவற்றை அப்டேட் செய்து Submit கிளிக் செய்யுங்கள்.

உண்மையை நாசா மறைக்கலாம் ஆனால், கேமிராக்கள் காட்டித்தான் கொடுக்கும்.!

ஜிட்டல் விசிட்டிங் கார்டை
  • சிறிது நேரத்தில் உங்களுடைய புதிய Profile card கூகிளில் அப்டேட் ஆகிவிடும்.
  • இப்போது உங்களைப் பற்றி யார் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்.
  • இந்த முறையைப் பின்பற்றி சில நொடிகளில் உங்களுக்கான டிஜிட்டல் விசிட்டிங் கார்டை நீங்களே உருவாக்கிக்கொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Create Google Profile Card Or Google People Card Serves As Online Visiting Card : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X