Home
How to

10 பைசா செலவு இல்லாமல் சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி? இது 100% வேலை செய்யும்!

பழைய மாடலாக இருந்தாலும் கூட. உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண டிவியை (Normal TV) ஒரு ஸ்மார்ட் டிவியாக (Smart TV) மாற்ற பல வழிகள் உள்ளன. ஆனால் அதை செய்ய, நிச்சயம் சில ஆயிரம் ரூபாயை நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

உதாரணத்திற்கு, நீங்கள் கொஞ்சம் பணத்தை செலவு செய்ய தயாராக இருக்கும் பட்சத்தில் அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக்கை (Amazon Fire TV Stick) வாங்கலாம் அல்லது சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் வேறு ஏதேனும் ஒரு ஸ்டிக்கை கூட வாங்கலாம்.

பைசா செலவு இல்லாமல் சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி?

இல்லையென்றால், ஜியோ ஃபைபரின் ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் அல்லது டாடா பிளே பிங்கே பிளஸ் செட்-டாப் பாக்ஸ் போன்ற ஸ்மார்ட் செட்டப் பாக்ஸை பயன்படுத்தலாம். ஒருவேளை, நீங்கள் அதிகம் பணம் செலவழிக்க விரும்பவில்லை என்றால் கீழே குறிப்பிட்டுள்ள "செலவு இல்லாத" வழிமுறையை முயற்சிக்கவும்.

இது அதிகம் செலவு இழுக்காதே ஒரு வழிமுறை மட்டுமல்ல, மிகவும் எளிமையான வழிமுறையும் கூட! இதை செய்ய உங்களுக்கு தேவையானது எல்லாம் எச்டிஎம்ஐ கேபிள் (HDMI Cable) மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) கொண்ட ஒரு லேப்டாப் மட்டுமே ஆகும்.

பெரும்பாலானோர் வீட்டில் இந்த இரண்டு பொருட்களுமே இருக்கு, என்பதால், இதற்காக புதிதாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஒருவேளை உங்களிடம் எச்டிஎம்ஐ கேபிள் இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ,200 க்குள் நல்ல தரமான பல எச்டிஎம்ஐ கேபிள்கள் கிடைக்கின்றன. அதில் ஒன்றை வாங்கி கொள்ளவும்.

புதிதாக ஒரு எச்டிஎம்ஐ கேபிளை ஆர்டர் போடும் முன்னர், உங்கள் லேப்டாப்பில் எச்டிஎம்ஐ போர்ட் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். பெரும்பாலான லேப்டாப்ளில் இந்த போர்ட் உள்ளது. இருப்பினும் ஒருமுறை சரிபார்த்து கொள்வது நல்லது. ஏனென்றால் ஸ்லிம் ஆன வடிவமைப்பை பெற்ற சில லேப்டாப்களில் இந்த போர்ட் இடம்பெறுவதில்லை.

மாறாக, எல்லாம் சரியான இருந்தால்.. அதாவது உங்கள் லேப்டாப்பில் எச்டிஎம்ஐ போர்ட் இருந்தால், கூடவே உங்களிடம் எச்டிஎம்ஐ கேபிள் இருந்தால்.. கிட்டத்தட்ட பாதி வேலை முடிந்து விட்டது. உங்கள் சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற 20 வினாடிகளுக்கும் குறைவாகவே ஆகும்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எச்டிஎம்ஐ கேபிளை பயன்படுத்தி உங்கள் லேப்டாப்பை டிவியுடன் இணைக்க வேண்டியது மட்டுமே. அதாவது எச்டிஎம்ஐ கேபிளின் ஒரு பக்கத்தை டிவியின் எச்டிஎம்இ போர்ட்டிலும், மறுபுறத்தை லேப்டாப்பில் உள்ள எச்டிஎம்ஐ போர்டிலும் இணைக்க வேண்டும்.

இரண்டையும் இணைத்த பிறகு, டிவியின் ரிமோட்டைப் பயன்படுத்தி இன்புட்ஸ் செக்ஷனில் (Inputs section) பிரிவின் வழியாக எச்டிஎம்ஐ-க்கு மாறவும். இன்புட்ஸ் செக்ஷன் என்றதுமே கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு ரிமோட்டிலும் இன்புட் பட்டன் இருக்கும். இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதை கண்டுபிடித்து, வேலையை முடிக்க வேண்டியது மட்டுமே ஆகும்.

டிவி ரிமோட் வழியா நீங்கள் எச்டிஎம்ஐ-க்கு மாறியதும், உங்கள் லேப்டாப்பின் ஸ்க்ரீன் ஆனது உங்கள் டிவியில் தோன்றும், அதாவது லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவிகளில் உள்ள ஸ்க்ரீன் மிரரிங் (Screen Mirroring) அம்சத்தையே போலவே தான் எச்டிஎம்ஐ கேபிள் கனெக்ஷன் வேலை செய்யும்.

அவ்வளவு தான், வேலை முடிந்தது. இப்போது நீங்கள் எந்தவொரு வீடியோவையும் லேப்டாப் வழியாக ஸ்ட்ரீம் செய்து, அதை உங்கள் வீட்டின் சாதாரணமான டிவி வழியாக பார்த்து மகிழலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் நெட்ப்ளிக்ஸ் வழியாக ஒரு வெப் சீரீஸை பார்க்க விரும்பினால், அதை லேப்டாப்பில் திறந்து, ஃபுல் ஸ்க்ரீனுக்கு மாற்றவும்.

மேலும் இதை செய்யும் போது, ரிமோட் வழியாக உங்கள் டிவியை கட்டுப்படுத்த முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். ஏனென்றால் அது உங்களுடைய லேப்டாப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே நீங்க; எதை செய்ய வேண்டுமென்றாலும் கூட அதை லேப்டாப்பின் டச் பேட் வழியாக அல்லது மவுஸ் வழியாக மட்டுமே செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
How to convert Ordinary TV into Smart TV without spending 10 paise It will work 100 Percentage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X