கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை கன்ட்ரோல் செய்வது எப்படி.?

கம்ப்யூட்டரில் உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த உதவக் கூடிய ஒரு திரை பிரதிபலிப்பு அப்ளிகேஷனாக செயல்படும் வைஸர் என்று அழைக்கப்படும் ஒரு கருவியை நாம் பயன்படுத்த போகிறோம்.

|

உங்கள் ஸ்மார்ட்போனில் கேம்கள் விளையாடும் போதோ அல்லது வேலை செய்யும் போதோ, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கீபோர்டு மற்றும் மவுஸை பயன்படுத்தி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கட்டுபடுத்த முடியுமா என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா? உங்கள் மொபைல்போனில் டேட்டாக்கள் இருந்தாலோ அல்லது உங்கள் மொபைல்போனில் உள்ள கேம்களை கம்ப்யூட்டர் டிஸ்ப்ளேயில் விளையாட முடிந்தாலோ, கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஆன்ட்ராய்டு மொபைல்போனை கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்க்கை மேலும் எளிதாகிவிடும். இந்நிலையில் உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தி கட்டுப்படுத்தும் படிகளைக் குறித்து கீழே பட்டியலிட்டு உள்ளோம்.

கம்ப்யூட்டரை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை கன்ட்ரோல் செய்வது எப்படி.?

கம்ப்யூட்டரில் உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்த உதவக் கூடிய ஒரு திரை பிரதிபலிப்பு அப்ளிகேஷனாக செயல்படும் வைஸர் என்று அழைக்கப்படும் ஒரு கருவியை நாம் பயன்படுத்த போகிறோம். மொபைல்போனில் உள்ள கேம்களை உங்கள் கம்ப்யூட்டரில் விளையாட விரும்பும் போது, இந்த அப்ளிகேஷன் பெரும் பயனுள்ளதாக உள்ளது. இதற்கு கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்.

படி 1: முதல் வேலையாக, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஏடிபி-யை நீங்கள் இயக்க வேண்டும். தற்போது இது விண்டோஸில் மட்டுமே வேலை செய்கிறது. இதை இயக்கும் வகையில், முதலில் ஏடிபி டிரைவர்களை நிறுவ வேண்டியுள்ளது. நீங்கள் ஒரு மெக் பயனராக இருக்கும் பட்சத்தில், இந்த படியை தவிர்த்துவிட்டு, அடுத்த படியில் இருந்து தொடங்கலாம். இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, அதை திறந்து, நிறுவுவதற்கு தேவையான காரியங்களைத் தொடரவும்.

படி 2: தற்போது உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஏடிபி-யை இயக்கவும். உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து வரும் இணைப்புகளை எப்போதும் அனுமதிக்கும் வகையில் அது அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும். இதை செய்த பிறகு, உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் கம்ப்யூட்டர் உடன் இணைத்து, உங்கள் ஆன்ட்ராய்டு சாதனத்தில் உள்ள அமைப்புகள் மெனுவை திறக்கவும். மேம்பாட்டாளர் தேர்வுகளுக்கு சென்று, யூஎஸ்பி டிபக்கிங் என்பதில் ஆன் நிலையை நோக்கி நகர்த்தவும்.

படி 3: தற்போது உங்கள் கிரோம் ப்ரவுஸர் உடன் இந்த அப்ளிகேஷனை இணைக்க வேண்டும். இங்கே கிளிக் செய்து, உங்கள் கிரோம் ப்ரவுஸரில் வைஸர் அப்ளிகேஷனை சேர்க்கும் வகையில், திரையின் மேற்பகுதியில் உள்ள "கிரோமில் சேர்" என்ற பொத்தான் மீது கிளிக் செய்யவும்.

படி 4: இதை செய்த பிறகு, வைஸரின் முக்கிய மெனுவில் உள்ள "சாதனங்களைக் கண்டுபிடி" என்ற பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் சில வினாடிகளில் காட்டும் சாதனங்களின் பட்டியலில் இருந்து உங்கள் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 5: இப்போது உங்கள் கம்ப்யூட்டர் உடன் இணைந்த மவுஸ் அல்லது கீபோர்டை பயன்படுத்தி, உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல்போனை கட்டுப்படுத்த முடியும். இயற்கை நோக்குநிலை உடன் கூடிய ஒரு அப்ளிகேஷனை திறப்பதாக இருந்தால், உங்கள் திரையில் உள்ள உள்ளடக்கத்திற்கு ஏற்ப, கம்ப்யூட்டரில் உள்ள விண்டோ தானாக சுழன்று, சரியாக பொருந்தும்.

அம்பலம்: உங்கள் வாட்ஸ்ஆப் சாட்டை கண்காணிக்கும் மூன்றாவது கண்.!அம்பலம்: உங்கள் வாட்ஸ்ஆப் சாட்டை கண்காணிக்கும் மூன்றாவது கண்.!

Best Mobiles in India

English summary
When you are playing games or working, have you ever came across a thought of controlling your Android smartphone using your computer with keyboard and mouse? Check it out here

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X