சிறிய மொபைல் டிஸ்பிளேவை எப்படி பெரிய டிவி திரையில் ஸ்ட்ரீமிங் செய்வது? ஈஸி டிப்ஸ்..

|

உங்களுக்கு பிடித்த வீடியோ அல்லது புகைப்படத்தைப் பெரிய திரைகளில் பார்ப்பது என்பது உங்களுக்கு ஒரு நல்ல காட்சி அனுபவத்தை வழங்கும். சிறிய திரைகளில் பார்ப்பதைவிடப் பெரிய திரைகளில் பார்ப்பது மிகவும் வசதியாக இருப்பதால், உங்கள் ஸ்மார்ட்போனிலிருக்கும் பைல்களை எப்படி வயர்லெஸ் மூலம் உங்களின் ஸ்மார்ட்டிவியில் பார்ப்பதது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

வயர்கள் மற்றும் அடாப்டர்கள் இப்போது நமக்கு தேவையில்லை

வயர்கள் மற்றும் அடாப்டர்கள் இப்போது நமக்கு தேவையில்லை

யூடியூப் அல்லது நெட்ஃபிக்ஸ் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வது எப்போதும் சிறந்த யோசனையாகும். முன்னதாக நம் ஸ்மார்ட்போன்களிலிருக்கும் தகவல்களை டிவியில் பார்க்க வேண்டுமென்றால் ஸ்ட்ரீம் செய்வதற்குப் பல வயர்கள் மற்றும் வெவ்வேறு அடாப்டர்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், இப்போது அந்த சிக்கல் தரும் வயர்கள் எல்லாம் தேவையில்லை. வயர்லெஸ் மூலம் இப்போது நாம் எளிதாக ஸ்ட்ரீம் செய்துகொள்ளலாம்.

எப்படி இந்த தொழில்நுட்பம் வேலை செய்கிறது?

எப்படி இந்த தொழில்நுட்பம் வேலை செய்கிறது?

வயர்லெஸ் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வளர்ந்து வருகிறது, இது நம்மை டிவியுடன் ஸ்மார்ட்போனை எளிதாக வயர் இல்லாமல் இணைக்க அனுமதிக்கிறது. முதலில் எப்படி இந்த தொழில்நுட்பம் வேலை செய்கிறது என்று தெரிந்துகொள்வோம். ஸ்மார்ட்போன் திரையை டிவியில் ஸ்ட்ரீம் செய்ய, உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி இரண்டுமே மிராக்காஸ்ட் அம்சத்தை ஆதரிக்க வேண்டும். மிராக்காஸ்ட்டா? அப்படி என்றால் என்ன என்று சிலருக்குக் கேள்வி எழுந்திருக்கும்?

இந்தியாவில் தோன்றிய மர்மமான மோனோலித்: யார் காரணம்?- உடைந்தது மர்மம்!இந்தியாவில் தோன்றிய மர்மமான மோனோலித்: யார் காரணம்?- உடைந்தது மர்மம்!

மிராக்காஸ்ட் என்றால் என்ன?

மிராக்காஸ்ட் என்றால் என்ன?

மிராகாஸ்ட் என்பது ஒரு தொழில்நுட்பமாகும், இது உங்கள் ஸ்மார்ட்போன் திரையை டிவி அல்லது பெரிய டிஸ்பிளேவில் காட்சியைப் பிரதிபலிக்க அனுமதிக்கிறது. இன்றைய அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், ஐபோன் மற்றும் பிளாக்பெர்ரி போன் ஆகிய எல்லா மொபைல்களும் மிராக்காஸ்டை ஆதரிக்கின்றது. ஆகையால் இப்போது வயர்லெஸ் ஸ்ட்ரீமிங் மிகவும் எளிதாகிறது. உங்கள் டிவி மிராக்காஸ்டை ஆதரிக்கவில்லை என்றால், நீங்கள் மிராக்காஸ்ட் டாங்கிளைப் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்போனை உங்கள் ஸ்மார்ட் டிவியில் ஸ்ட்ரீமிங் செய்யும் வழிமுறை

ஸ்மார்ட்போனை உங்கள் ஸ்மார்ட் டிவியில் ஸ்ட்ரீமிங் செய்யும் வழிமுறை

  • உங்கள் ஸ்மார்ட்போனின் Settings சென்று Bluetooth & device connection கிளிக் செய்யுங்கள்.
  • இப்போது காண்பிக்கப்படும் ஆப்ஷன்களில் இருந்து Cast / screen mirroring / Cast screen / Wireless display என்ற ஏதேனும் ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.
  • மேலே உள்ள விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம், உங்கள் மொபைல் மிராஸ்காஸ்ட் இயக்கப்பட்ட டிவி அல்லது டாங்கிளை அடையாளம் கண்டு திரையில் காண்பிக்கும்.

ஜியோ பயனர்களுக்கு குஷி.. ஜியோ வழங்கும் போனஸ் டேட்டா நன்மை..ஜியோ பயனர்களுக்கு குஷி.. ஜியோ வழங்கும் போனஸ் டேட்டா நன்மை..

Disconnect விருப்பம்
  • உதாரணமாக Mi Tv என்று இணைப்புக்கு அருகில் இருக்கும் சாதனத்தின் பெயரை காண்பிக்கும்.
  • இணைப்பைத் தொடங்க திரையில் காண்பிக்கப்படும் சாதனத்தின் பெயரைத் கிளிக் செய்யவும்.
  • இணைப்பு வெற்றிகரமாக இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து ஸ்மார்ட்டிவிக்கு உள்ளடக்கத்தை பிரதிபலிக்கலாம்.
  • கனெட்க்ஷனை துண்டிக்க Disconnect விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
  • இந்த முறைப்படி நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்கள் போனை உங்கள் ஸ்மார்ட்டிவியுடன் இணைத்து ஸ்ட்ரீம் செய்துகொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

வயர்லெஸ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கு உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் உங்கள் ஸ்மார்ட் டிவி ஆகிய இரண்டு சாதனங்களும் ஒரே வைஃபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் வீட்டில் வைஃபை இணைப்பு இல்லை என்றால், உங்கள் மொபைலில் ஹாட்ஸ்பாட் ON செய்து, அந்த நெட்வொர்க்குடன் உங்கள் டிவியை இணைத்து ஸ்ட்ரீமிங் செய்துகொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to connect your smartphone with your smart TV wirelessly : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X