கண்கள் முக்கியம் மக்களே: உங்கள் ஸ்மார்ட்போனின் Display என்ன டைப், எது பெஸ்ட்?

|

ஸ்மார்ட்போன் என்பது பிரதான பயன்பாடாக மாறி வருகிறது. நின்றால் போன், நடந்தால் போன், பயணம் செய்தால் போன், அழுதால் போன், சிரித்தால் போன் என அனைத்து சூழலிலும் ஸ்மார்ட்போன் பங்கு அளப்பறியதாக இருக்கிறது.

ஸ்மார்ட்போனை எதோ ஒரு தேவைக்கு கையில் எடுத்து எதுஎதுக்குள்ளேயோ சென்று.. எத்தனை மணி நேரம் பயனப்படுத்தினோம் என்று தெரியாமலயே ஸ்மார்ட்போனை யூஸ் செய்துக் கொண்டிருக்கிறோம்.

ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே என்ன

ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே என்ன

நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதில் நேரம் வீண் ஆவதுடன் கண்களும் பாலாகிறது. கண்களை பாதுகாக்க நமது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே என்ன என்பதை அறிந்துக் கொள்வது மிக அவசிம்.

பல்வேறு விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன்கள்

பல்வேறு விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

விலைப்பிரிவுக்கு ஏற்ப ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் வெவ்வேறு டிஸ்ப்ளே வகை மற்றும் தரத்தை கொண்டிருக்கிறது.

இருப்பினும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் LCD மற்றும் OLED/AMOLED டிஸ்ப்ளேக்களைக் கொண்டிருக்கிறது.

உங்கள் ஸ்மார்ட்போனில் என்ன டிஸ்ப்ளே?

உங்கள் ஸ்மார்ட்போனில் என்ன டிஸ்ப்ளே?

கண்களை பாதுகாக்க புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்கும் போது அதில் என்ன டிஸ்ப்ளே உள்ளது என்பதை கண்டிப்பாக நீங்கள் சோதனை செய்வீர்கள்.

ஆனால் தற்போது நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் என்ன டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்துக் கொள்வது மிக அவசியம் அல்லவா.

அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

டிஸ்ப்ளே கண்டுபிடிப்பது எப்படி?

டிஸ்ப்ளே கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே டைப் என்னவென்று செட்டிங்க்ஸ் அமைப்புக்குள் சென்று சோதிக்கலாம். இதில் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் மூன்றாம் தரப்பு பயன்பாட்டை பயன்படுத்தலாம். இதைவிட எளிதான வழி ஒன்று இருக்கிறது.

நீங்கள் எந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் சரி. டிஸ்ப்ளே டைப் கண்டுபிடிப்பது என்பது மிக எளிது.

ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் மாடலை டைப் செய்து இணையத்தில் Search செய்யவும்.

ஆன்லைன் விற்பனை தளங்கள் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் உங்கள் ஸ்மார்ட்போன் காட்டப்படும்.

நீங்கள் என்ன வேரியண்ட் வைத்துள்ளீர்கள் என்பதை சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியம்.

இதில் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் காட்டப்படும். இந்த அம்சங்களில் டிஸ்ப்ளே பிரிவு இருக்கும். இதில் உங்கள் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே என்னவென்று செக் செய்து கொள்ளலாம்.

மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை பயன்படுத்துவது எப்படி?

மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை பயன்படுத்துவது எப்படி?

ஸ்டெப் 1: முதலில், Play Store இல் இருந்து Display Tester பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 2: இந்த பயன்பாட்டை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 3: Tests என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

தெளிவுத்தன்மை மற்றும் ரகம்

ஸ்டெப் 4: அடுத்ததாக Defective pixel detection என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 5: தற்போது திரையில் வெவ்வேறு வண்ணங்கள் காட்டப்படும். டிஸ்ப்ளேயில் பிளாக் கலர் வரும் வரை தொடர்ச்சியாக scroll செய்து கொண்டே இருக்கவும்.

ஸ்டெப் 6: டிஸ்ப்ளே மிகவும் பிரகாசமாக இருக்கிறதா, மங்கலாக இருக்கிறதா, ஆஃப் செய்யப்பட்டிருப்பது போல் இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளலாம்.

ஸ்டெப் 7: ஸ்மார்ட்போனின் வண்ணத் தெளிவுத்தன்மை எப்படி இருக்கிறது என்பதையும் டிஸ்ப்ளே ரகம் என்ன என்பதையும் இதன்மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

எந்த மொபைல் டிஸ்ப்ளே சிறந்தது?

எந்த மொபைல் டிஸ்ப்ளே சிறந்தது?

ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே ஆராயச்சியாளர்களின் கூற்றுப்படி, OLED டிஸ்ப்ளேக்கள் தான் உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே ஆக இருக்கிறது.

இதில் AMOLED டிஸ்ப்ளேக்கள் வண்ணத் தெளிவுத்தன்மை, டீப் பிளாக் கலர் மற்றும் கண் சீரிங் கான்ட்ராஸ்ட் ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

சமீபத்திய மேம்பட்ட பதிப்பாக சூப்பர் AMOLED டிஸ்ப்ளேக்கள் இருந்தாலும், வழக்கமான எல்சிடி டிஸ்ப்ளே உடன் ஒப்பிடும் போது இது குறைவான சக்தியை பயன்படுத்துகிறது.

எல்சிடி டிஸ்ப்ளேக்கள்

எல்சிடி டிஸ்ப்ளேக்கள் AMOLED உடன் ஒப்பிடும்போது மலிவானவை. எல்சிடி டிஸ்ப்ளேக்கள் பிரகாசமான வெள்ளை நிறத்தைக் கொண்டுள்ளன.

LCDகள் சிறந்த கோணத்தையும் வழங்குகின்றன. எனவே கண்களுக்கு பாதுகாப்பான டிஸ்ப்ளே என்றால் அது எல்சிடி தான் என சில டிஸ்ப்ளே நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to check your smartphones display type? Which one is Best?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X