உங்கள் போனின் இன்டர்நெட் ஸ்பீட்-ஐ வெறும் 30 நொடிகளில் கண்டுபிடிப்பது எப்படி?

|

ஒரு காலத்தில் வெறுமனே தகவல்களை பகிர உதவும் வலையமைப்பாக இருந்த இன்டர்நெட் (Internet), இப்போது பொழுதுபோக்கு, கற்றல் மற்றும் தகவல் தொடர்பின் முக்கிய ஆதாரமாக உருமாறியுள்ளது.

பிரேக்கிங் நியூஸ் தொடங்கி சமையல் குறிப்புகள், வீடியோக்கள், கேம்ஸ், மியூசிக், கட்டுரைகள் என எது வேண்டுமானாலும், எது தேவை என்றாலும், நாம் அணுகுவது இன்டர்நெட்டை தான்!

கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்!

கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்!

நீங்கள் உங்களின் இன்டர்நெட் கனெக்ஷனை முழுவதுமாக பயன்படுத்த விரும்பினால், நீங்கள் எந்த அளவிலான இன்டர்நெட் ஸ்பீட்-ஐ பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

இன்டர்நெட் ஸ்பீட்-ஐ பொறுத்தவரை, நாம் அனைவருமே வேகமான ஒன்றையே விரும்புகிறோம். ஆனால், அந்த அளவிலான இணைய வேகம் உங்களுக்கு கிடைக்கிறதா என்பதை எப்படி சரிபார்ப்பது?

இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!

இருக்கவே இருக்கு TRAI ஆப்!

இருக்கவே இருக்கு TRAI ஆப்!

ஆம்! இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆன (Telecom Regulatory Authority of India) டிராய் (TRAI) ஆப் வழியாக உங்கள் போனின் இன்டர்நெட் ஸ்பீட்டை ஒரு சில நொடிகளில் அளவிட முடியும்.

அதெப்படி என்கிற படிப்படியான மற்றும் எளிமையான வழிமுறைகள் இதோ:

இன்ஸ்டால்

இன்ஸ்டால்

முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் TRAI APP-ஐ இன்ஸ்டால் செய்யவும் அல்லது நேரடியாக TRAI MySpeed ஆப்பையும் கூட இன்ஸ்டால் செய்யவும்.

ஒருவேளை நீங்கள் முதலில் டிராய் ஆப்பை இன்ஸ்டால் செய்தால், அதன் வழியாகவே TRAI MySpeed ஆப்பை அணுகலாம்; இன்ஸ்டால் செய்யலாம்.

இந்த இரண்டு ஆப்களுமே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது!

துப்பாக்கியை தூக்கி கொண்டு ஓடும் சீனாவின் ரோபோட் நாய் - வைரல் வீடியோ!துப்பாக்கியை தூக்கி கொண்டு ஓடும் சீனாவின் ரோபோட் நாய் - வைரல் வீடியோ!

ஆரம்பிக்கலாமா?

ஆரம்பிக்கலாமா?

TRAI MySpeed ஆப்பை இன்ஸ்டால் செய்த பின்னர், அதை திறக்கவும். நீங்கள் மொபைல் நெட்வொர்க்-ஐ பயன்படுத்தினால், உங்கள் ஆப்ரேட்டரின் விவரங்களை அது காண்பிக்கும் (இல்லையேல் வைஃபை என்று காண்பிக்கும்)

அதற்கு கீழ Begin Test என்கிற விருப்பம் இருக்கும். அதை கிளிக் செய்யவும் மற்றும் முடிவுக்காக காத்திருக்கவும்.

ஸ்பீடோமீட்டர்

ஸ்பீடோமீட்டர்

'பிகின் டெஸ்ட்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்த பின்னர், TRAI MySpeed ஆப்பில் உள்ள ஸ்பீடோமீட்டர் வேலை செய்ய தொடங்கும்.

அது நிறுத்தப்பட்டு உங்களுக்கான முடிவு வரும் வரை, அதாவது உங்கள் போனின் இன்டர்நெட் ஸ்பீட் தொடர்பான விவரங்கள் ஸ்க்ரீனில் தோன்றும் வரை காத்திருக்கவும்!

உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!

டவுன்லோட் ஸ்பீட் மற்றும் அப்லோட் ஸ்பீட்!

டவுன்லோட் ஸ்பீட் மற்றும் அப்லோட் ஸ்பீட்!

இப்போது TRAI MySpeed ஆப் ஸ்க்ரீனில் உங்கள் இன்டர்நெட்டின் டவுன்லோட் ஸ்பீட் மற்றும் அப்லோட் ஸ்பீட் உடன் நெட்வொர்க் டிலே மற்றும் பாக்கெட் லாஸ் போன்ற விவரங்கள் காட்சிப்படுத்தப்படும்; அவ்வளவு தான்; வேலை முடிந்தது!

இப்போது உங்களுக்கு (கீழே) இரண்டு விருப்பங்களும் அணுக கிடைக்கும். ஒன்று 'மீண்டும் சோதனை செய்ய வேண்டுமா' என்று கேட்கும், மற்றொன்று கிடைக்கப்பெற்ற விவரங்களை 'TRAI க்கு அனுப்ப வேண்டுமா' என்று கேட்கும்; இங்கே உங்களுக்கு விருப்பமான தேர்வு நிகழ்த்தலாம்.

TRAI ஆப் என்றால் என்ன?

TRAI ஆப் என்றால் என்ன?

முன்னரே குறிப்பிட்டபடி, இது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆன TRAI-யின் அதிகாரப்பூர்வமான ஆப் ஆகும்.

இது பயனர்கள் தங்கள் டேட்டா ஸ்பீட்-ஐ அளவிட அனுமதிக்கும் மிகவும் எளிமையான ஒரு ஆப் ஆகும். அளவிடப்பட்ட பின்னர், குறிப்பிட்ட தகவல்கள் (ரிசல்ட்) டிராய்-க்கு அனுப்பப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!5G போன் வாங்கும் முன்.. தெரியாம கூட இந்த 7 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!

இது யூசர் டேட்டாவை சேமிக்குமா?

இது யூசர் டேட்டாவை சேமிக்குமா?

டிராய் ஆப் ஆனது நெட்வொர்க் ஸ்பீட் மற்றும் பிற நெட்வொர்க் தகவல்களைக் கண்காணித்து அனுப்புமே தவிர, எந்தவொரு தனிப்பட்ட பயனரின் தகவலையும் (யூசர் டேட்டாவையும்) சேகரிக்காது; அனுப்பாது.

எல்லாவற்றை விட மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஆப் வழியாக சேகரிக்கப்படும் முடிவுகள் எல்லாமே அநாமதேயமாகவே (Anonymous) தெரிவிக்கப்படுகின்றன!

Photo Courtesy: TRAI, Google Play Store

Best Mobiles in India

English summary
How to check your mobile phone internet speed within few seconds using TRAI MySpeed App

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X