Home
How to

100 இல் 90 பேருக்கு தெரியாத ஆதார் ஹிஸ்டரி செக்கப்.. மாசத்துக்கு 1 முறை பார்க்கலனா கூட ஆபத்து.. ஏன்னா?

ஆதார் பிஸிக்கல் காப்பி (Aadhaar Physical Copy), அதாவது உங்களுடைய ஆதார் அட்டை (Aadhaar Card) அதை உங்களிடம் பத்திரமாக இருப்பதால், அது உண்மையிலேயே பத்திரமாக இருக்கிறது என்று அர்த்தமில்லை. ஆதார் அடையாள திருட்டு மற்றும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் தரவுகளின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு போன்ற அபாயங்கள் - நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது.

நல்ல விஷயம் என்னவென்றால் - மக்களுக்கு மன அமைதியை அளிக்கும் வகையில், உங்கள் ஆதார் எங்கே, எப்போது பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் துல்லியமாக பார்க்க முடியும். இதற்காக யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஒரு ஆன்லைன் கருவியை (Online Tool) அமைத்துள்ளது.

ஆதார் ஹிஸ்டரி செக்கப்.. மாசத்துக்கு 1 முறை பார்க்கலனா கூட ஆபத்து!

இந்த டூல், மிகவும் எளிமையாக மற்றும் இலவசமாக, உங்களுடைய அனைத்து ஆதார் அங்கீகார செயல்பாடுகளையும் கண்காணிக்க அனுமதிக்கிறது. ஏதேனும் வித்தியாசமாகவோ அல்லது வழக்கத்திற்கு மாறாகவோ தோன்றினால், அதை நீங்கள் உடனே கண்டறிந்துவிடலாம். சரி உங்கள் ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) ஆன்லைன் வழியாக எவ்வாறு சரிபார்ப்பது?

- உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் / லேப்டாப்பிலிருந்து மை ஆதார் (My Aadhaar) இணையதளத்திற்கு செல்லவும்.
- உங்கள் ஆதார் நம்பரை கொண்டு லாக்-பீன்ஸ் ஐயாவும்
- யுஐடிஏஐ (UIDAI) ஆனது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு ஒடிப (OTP - பாதுகாப்பு குறியீடு) ஒன்றை அனுப்பும்.
- அதை பெற்றவுடன் கன்டின்யூ (continue) என்பதை கிளிக் செய்து, உள்நுழையவும்

- உள்ளே நுழைந்ததும் 'ஆத்தென்டிகேஷன் ஹிஸ்டரி' (Authentication History) என்பதைத் தேட வேண்டும்.
- இப்போது, ​​உங்கள் தேதி வரம்பை தேர்ந்தெடுக்கவும் (நீங்கள் 6 மாதங்கள் வரை பின்னோக்கி செல்லலாம்).
- பின்னர், நீங்கள் எவ்வாறு பில்டர் (Filter) செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுக்கவும் (பயோமெட்ரிக், ஒடிபி அல்லது இரண்டும்).
- முடிந்ததும், சப்மிட் (submit) என்பதை கிளிக் செய்யவும்

இப்போது உங்கள் ஆதார் எப்போது, ​​எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை காட்டும் ஒரு முழுமையான அறிக்கையை நீங்கள் காண்பீர்கள். ஆதார் மையத்திற்கு (Aadhaar Centre) செல்லாமல், எங்கிருந்தும் இதை நீங்கள் எளிதாக செய்யலாம். இந்த அறிக்கை உங்களுக்கு சரியாக என்னென்ன விவரங்களை காட்டும்?

- உங்கள் ஆதார் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டது - அது உங்கள் கைரேகை, கருவிழி ஸ்கேன் அல்லது ஒடிபி மூலமா?
- ஒவ்வொரு கோரிக்கையும் வந்த சரியான தேதி மற்றும் நேரம்.
- எந்த அமைப்பு, வங்கி, செல்போன் நிறுவனம் அல்லது அரசு அலுவலகம் உங்கள் விவரங்களை அணுகியது.

சந்தேகத்திற்குரிய ஆதார் பயன்பாட்டை நீங்கள் கவனித்தீர்கள் என்றால்? நீங்கள் செய்யாத ஆதார் செயல்பாட்டை கண்டால், உடனடியாக பின்வருவனவற்றை செய்யுங்கள். யுஐடிஏஐ-யின் உதவி எண் 1947-க்கு அழையுங்கள். புகார் அளியுங்கள். உங்கள் மொபைல் அல்லது சிஸ்டமில் இருந்தே, யுஐடிஏஐ இணையதளம் வழியாக எழுத்துப்பூர்வமாக புகாரை சமர்ப்பிக்கலாம்.

உங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் எண் மேலும் தவறாக பயன்படுத்தப்படுவதை உடனடியாக தடுக்க, உங்கள் பயோமெட்ரிக்ஸை லாக்கும் செய்யலாம். யுஐடிஏஐ ஆனது இத்துடன் நின்றுவிடவில்லை. உங்கள் பயோமெட்ரிக் தரவுகளான - உங்கள் கைரேகைகள் மற்றும் கருவிழி தகவல்களை - லாக் செய்யவும் அனுமதிக்கிறது.

இதன் மூலம் உங்கள் அனுமதியின்றி யாரும் அவற்றை பயன்படுத்த முடியாது. மை ஆதார் போர்டல் (My Aadhaar Potral) அல்லது புதிய ஆதார் மொபைல் ஆப்பை (New Aadhaar Mobile App ) பயன்படுத்தி உங்களால் உங்கள் பயோமெட்ரிக்ஸை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம்

கிஸ்பாட்டின் கருத்து: ஆதார் ஆத்தென்டிகேஷன் ஹிஸ்டரி வசதியின் கீழ் 6 மாதங்களுக்கு முன்பு வரையிலான விவரங்களை பார்க்க முடியும் என்றாலும், நாங்கள் இதை குறைந்தது ஒவ்வொரு மாதமம் கண்காணிக்குமாறு பரிந்துரைக்கிறோம். இதை தவறாமல் சரிபார்ப்பது, மோசடியை முன்கூட்டியே கண்டறிய உதவும். இதன் மூலம் உங்கள் அடையாளம் மற்றும் தனிப்பட்ட தரவுகளின் மீது நீங்கள் அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்க முடியும்.

Best Mobiles in India

English summary
How to check your Aadhaar authentication history UIDAI online and Found Aadhaar misusages
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X