பார்க்கிங் ஸ்லாட் தயார் நிலையில் உள்ளதா என்பதை கூகுள் மேப்ஸ் செயலி மூலம் அறிந்து கொள்வது எப்படி?

|

கார் பயன்படுத்துவோர் மட்டும் எதிர்கொள்ளும் மிகப்பெரும் இன்னல்களில் ஒன்று பார்க்கிங் வசதியுள்ள பகுதியை கண்டறிவது தான் எனலாம். பொது இடங்களில் இது வழக்கமான பிரச்சனை ன்ற போது, காரை எங்கு பார்க் செய்வது என்ற குழப்பம் அனைவருக்கும் நிச்சயம் எழும். இதுபோன்று பார்க்கிங் செய்ய சரியான இடத்தை கண்டறியாத போது, கூகுள் மேப்ஸ் சேவையின் இந்த அம்சம் உங்களுக்கு பயன்தரும் வகையில் இருக்கும்.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் சேவையை கொண்டு பார்க்கிங் இன்னலை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்றாலும், இதை கொண்டு பார்க்கிங் செய்வற்கான இடம் குறிப்பிட்ட நேரத்தில் காலியாக இருக்கிறதா என்பதை கூகுள் மேப்ஸ் தெரிவிக்காது. எனினும், அந்த பகுதியில் பார்க்கிங் இடத்தை கண்டறிவது சிக்கலான வேலை என்பதை கூகுள் தெரிவிக்கும்.

சீரான இணைய வசதி

சீரான இணைய வசதி

இந்த அம்சத்தை சரியாக பயன்படுத்த கூகுள் மேப்ஸ் சேவையின் புதிய பதிப்பு, லொகேஷன் சேவைகள் ஆக்டிவ் மோடில் இருப்பது மற்றும் சீரான இணைய வசதி இருப்பது மிகவும் அவசியமாகும்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

1 - முதலில் கூகுள் மேப்ஸ் பகுதியில் சரியான இடத்தை குறிப்பிட வேண்டும்

2 - இனி சேவையின் கீழ் உள்ள டிரெக்‌ஷன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

3 - ஸ்டார்ட் பட்டன் இருக்கும் பகுதியில் ஸ்லைடு அப் செய்ய வேண்டும்

4 - அங்கு P எனும் சின்னம், ‘Parking is usually not easy near this destination' என்பதை குறிக்கும்

பார்க்கிங் நிலை

பார்க்கிங் நிலை

இனி செல்ல வேண்டிய முகவரியை பதிவிட்டு, டைரெக்‌ஷன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், டைரெக்‌ஷன்ஸ் பக்கம் லோடு ஆகி திறக்கும். பின் செல்ல வேண்டிய இடத்திற்கு மேப்ஸ் மூலம் செல்ல துவங்கலாம். நீங்கள் அடை வேண்டிய பகுதியில் P என்ற சின்னம் அங்குள்ள பார்க்கிங் நிலையை வட்டமிட்டு காண்பிக்கும்.

Best Mobiles in India

English summary
How to check whether the parking is readily available in any area using Google Maps : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X