அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்: கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய வசதி.!

|

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் பல்வேறு அற்புதமான சேவைகள் கிடைக்கிறது. அதேசமயம் சிறந்த பாதுகாப்பு வசதியையும் வழங்குகிறது இந்த வாட்ஸ்அப் செயலி.

வாட்ஸ்அப் செயலி

வாட்ஸ்அப் செயலி

விரைவில் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.அதாவது தினசரி அதிகமான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்.

நமது கேலக்ஸியில் எட்டு புதிய எதிரொலி கருந்துளை பைனரிகள்..எம்ஐடி ஆராய்ச்சி குழு வெளியிட்ட ரிப்போர்ட்..நமது கேலக்ஸியில் எட்டு புதிய எதிரொலி கருந்துளை பைனரிகள்..எம்ஐடி ஆராய்ச்சி குழு வெளியிட்ட ரிப்போர்ட்..

 கட்டணம் குறைவு

கட்டணம் குறைவு

அதேபோல் நீண்டதூரம் செல்ல விரும்பும் மக்கள் இந்த ரயில் சேவையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாகப் பேருந்து, விமானச் சேவையை விட கட்டணம் குறைவு. எனவே தான் ரயிலில் பயணம் செய்வதை அதிக மக்கள் விரும்புகின்றனர். மேலும் இதில் பயணம் செய்ய விரும்பும் மக்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்து பயன்படுத்துகின்றனர்.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!

சிறப்பு வசதி

சிறப்பு வசதி

தற்போது ஐஆர்சிடிசி ஆனது பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய சேவைகளைக் கொண்டுவருகிறது. அதில் ஒன்றுதான் live train status எனும் சிறப்பு வசதி. அதாவது இப்போது live train status -ஐ வாட்ஸ்அப் மூலம் எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது?

ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது?

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதைப் பயனர்கள் அறிந்து கொள்ளத் தனியாக ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து பார்க்க வேண்டிய நிலை இருந்தது, ஆனால் தற்போது தனி ஆப் வசதியை பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை வாட்ஸ்அப் மூலம் மிக எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

மும்பையைச் சேர்ந்த நிறுவனம்

மும்பையைச் சேர்ந்த நிறுவனம்

இந்த புதிய வசதியை மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரைலோஃபி (Railofy) தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி WhatsApp chatbot மூலம் செயல்படும். அதாவது PNR நிலை, live train status அடுத்த ரயில் நிலையம், பயண விவரம் போன்றவற்றை இதில் எளிமையாகத் தெரிந்து கொள்ளமுடியும். அதேசமயம் 139 என்ற ரயில்வே உதவி எண்ணைப் பயன்படுத்திக் கூட live train status தெரிந்துகொள்ள முடியும்.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

விரிவாகப் பார்ப்போம்

சரி இப்போது வாட்ஸ்அப் செயலியில் live train status-ஐ தெரிந்துகொள்வது எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை 1
முதலில் உங்களது போனில் ரைலோஃபி வாட்ஸ்அப் chatbot number +91-9881193322-ஐ Save செய்ய வேண்டும்.

உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..

 வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து உங்களது வாட்ஸ்அப் ஓபன் செய்து contact பட்டியலை ஒருமுறை refresh செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் Save செய்த ரைலோஃபி வாட்ஸ்அப் contact பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

வழிமுறை-3

வழிமுறை-3

அந்த ரைலோஃபி வாட்ஸ்அப் பக்கத்தில் உங்களது 10 இலக்க PNR நம்பரை டைப் செய்து Send கொடுக்க வேண்டும்.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

வழிமுறை-4

வழிமுறை-4

அதன்பின்னர் உங்களது பயண விவரம்,live train status உள்ளிட்ட சில தகவல்கள் கிடைக்கும். அதேபோல்ரயில் பயணத்திற்கு முன்பு கூட PNR நம்பரை அனுப்பி ரயிலின் நிலையை அறிந்துகொள்ள முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to check IRCTC PNR and live train status via WhatsApp: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X