ஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி?

|

ஆப்பிள் ஐபோன் தான் என்றாலும், அன்றாட பயன்பாடுகளில் ஒருநாள் அதுவும் பாழாகத் தான் செய்யும். எல்லா ஸ்மார்ட்போன் மாடல்களின் பேட்டரிக்கும் இதே நிலை தான். சில ஆண்டுகள் கழிந்ததும் பேட்டரியில் பிரச்சனை ஏற்படும். அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் ஆயுள் எப்படி இருக்கிறது, அதனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்பதை கண்டறியும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

வழிமுறை 1:

வழிமுறை 1:

ஐபோனின் செட்டிங்ஸ் ஆப்ஷனிற்கு செல்லவும்.

வழிமுறை 2:

வழிமுறை 2:

செட்டிங்ஸ் பகுதியில் பேட்டரி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஜீலை 15: ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன்.!ஜீலை 15: ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன்.!

வழிமுறை 3:

வழிமுறை 3:

பேட்டரி ஹெல்த் எனும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை 4:

வழிமுறை 4:

இனி பேட்டரியில் எத்தனை அளவு சார்ஜ் இருக்கிறது என்பதை பார்க்க முடியும்.

இந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.!இந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.!

வழிமுறை 5:

வழிமுறை 5:

பேட்டரி அளவை காண்பிக்கும் பகுதியின் கீழ் பீக் பெர்ஃபார்மன்ஸ் கேபபிலிட்டி எனும் ஆப்ஷன் இருக்கும்.

வழிமுறை 6:

வழிமுறை 6:

ஆப்ஷனில் "Your battery is currently supporting normal peak performance" எனும் வாசகம் தெரிந்தால், உங்களது ஐபோன் பேட்டரி சீராக இருக்கிறது. அதனை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

டிக்டாக் விபரீதம்: ஏரியில் மூழ்கி உயரிழந்த இளைஞர்: வைரலாக பரவிய வீடியோ.!டிக்டாக் விபரீதம்: ஏரியில் மூழ்கி உயரிழந்த இளைஞர்: வைரலாக பரவிய வீடியோ.!

வழிமுறை 7:

வழிமுறை 7:

முந்தைய ஆப்ஷனின் போது "Your battery's health is significantly degraded. An Apple Authorized Service Provider can replace the battery to restore full performance and capacity," எனும் வாசகம் திரையில் தோன்றினால், உங்களது பேட்டரி சீராக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினாலே ஐபோனின் பேட்டரி ஆயுள் பற்றி மிக எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.

கவனம் கொள்ள வேண்டியவை:

கவனம் கொள்ள வேண்டியவை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் தவிர, ஐபோன் பேட்டரி பற்றி இந்த விஷயத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை முந்தைய வழிமுறைகளை பன்பற்றியதும், "Important Battery Message: Unable to verify this iPhone has a genuine Apple battery. Health information not available for this battery," எனும் தகவல் வரும் பட்சத்தில் உங்களது ஐபோன் பேட்டரியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், ஐபோனில் ஒரிஜினல் பேட்டரி பொருத்தப்படவில்லை என அர்த்தமாகும். இந்த தகவல் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR போன்ற மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to check iPhone battery health and if you need to replace it : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X