புது போன் எதுக்கு வாங்கனும்? உங்க போனில் 5G ஆதரவு இருக்கா?- இதை செய்தால் போதும்!

|

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாக இருக்கிறது. அதிவேக இணையத்தை அனுபவிக்க உங்களிடம் 5ஜி ஆதரவு ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். உங்கள் போனில் 5ஜி நெட்வொர்க் ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிக அவசியம்.

பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 5ஜி ஆதரவை

பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 5ஜி ஆதரவை

சந்தையில் சமீபத்தில் அறிமுகமாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி ஆதரவு வழங்கப்பட்டு வந்தது, ஆனால் தற்போது மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி ஆதரவு வழங்கப்படுகிறது.

உங்களிடம் 5ஜி போன் இல்லை என்றால் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொள்ளலாம்.

எதுக்கு புது போன், வைத்திருக்கும் ஸ்மார்ட்போனே நன்றாக தான இருக்கிறது என்று சிந்தித்தால், உங்களது ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இருக்கிறதா என்பதை எப்படி சோதிப்பது என பார்க்கலாம்.

5G நெட்வொர்க் ஆதரவு உள்ளதா?

5G நெட்வொர்க் ஆதரவு உள்ளதா?

உங்கள் போன் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கிறதா என்பதை எப்படி செக் செய்வது?

Step 1: உங்கள் போனில் செட்டிங் பயன்பாட்டுக்கு செல்லவும்.

Step 2: அதில் Wi-Fi & Network என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

Step 3: இதற்குள் சென்றதும், 'SIM & Network' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Step 4: இதில் நீங்கள் Preferred network type என்ற விருப்பத்தின் கீழ் அனைத்து தொழில்நுட்ப ஆதரவுகளின் பட்டியலையும் பார்க்கலாம்.

இதன்மூலம் உங்கள் போனில் 5ஜி ஆதரவு உள்ளதா என்பதை செக் செய்து கொள்ளலாம்.

ரூ.10,000 விலையில் 5ஜி போன்கள்

ரூ.10,000 விலையில் 5ஜி போன்கள்

உங்கள் போன் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கவில்லை என்றால், அதிவேக இணையத்தை அனுபவிக்க 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவது அவசியம்.

ரியல்மி, சியோமி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் 5ஜி ஆதரவோடு மலிவு விலையில் கிடைக்கிறது.

அதேபோல் பிசினஸ் ஸ்டாண்டர்டின் அறிக்கைபடி, குவால்காம் இயக்க ஆதரவுடன் கூடிய 5ஜி போன்கள் எதிர்காலத்தில் ரூ.10,000 என்ற விலையில் கூட அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்?

உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்?

5ஜி போன் வாங்க முடிவு எடுப்பதற்கு முன், உங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க் ஆதரவைக் கொண்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில்

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில்

வருவது உறுதி, நேரமும் காலமும் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டது போல், 5ஜி சேவை இப்போது வரும் அப்போது வரும் என பலத்த தகவலுக்கு மத்தியில், விரைவில் 5ஜி சேவை அறிமுகமாக இருக்கிறது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காரணம் 5G-க்கான காத்திருப்பு நேரம் முடிந்துவிட்டது என PM Modi சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 5ஜி சேவையை விரைவில் தொடங்க டெலிகாம் நிறுவனங்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். ஜியோ மற்றும் ஏர்டெல் முதலில் இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் மற்றும் ஜியோ மும்முர செயல்பாடு

ஏர்டெல் மற்றும் ஜியோ இந்தியாவில் விரைவில் 5ஜி சேவையை தொடங்கும் என்பது ஏரத்தாள முடிவு செய்யப்பட்டு விட்டது. ஜியோ அதற்கான சோதனைகளையும் தொடங்கி நடத்தி வருகிறது. பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) இல் 5ஜி நெட்வொர்க்கை ஜியோ சோதனை செய்தது. மெட்ரோ நிலையத்தில் 5ஜி சோதனை செய்த இந்தியாவின் முதல் மெட்ரோ நெட்வொர்க் இதுதான்.

4ஜி சேவையை விட விலை அதிகம்., எவ்வளவு?

5ஜி விலை ஆனது 4ஜி-ஐ விட அதிகமாக இருக்கும் என்பது அறிந்ததே. இருப்பினும் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்று வெளியான சில தகவல்களை வைத்து பார்க்கலாம்.

இது 4ஜி நெட்வொர்க் விலையை விட குறைந்தது 10% அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதாவது தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதத்தில் மாதாந்திர திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள் தற்போது செலவு செய்யும் பணத்தை விட கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டியது இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
How to Check, If Your Phone is Support 5G or Not?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X