ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம் வைஃபை வேகத்தை கண்டறிவது எப்படி?

|

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம் சில சிறந்த மற்றும் பயனுள்ள அம்சங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்று உள்ள ஒரு அம்சத்தின் மூலம் அருகிலுள்ள திறந்த நிலையில் உள்ள வைஃபை நெட்வர்க் உடன் இணைக்கப்படும் முன்பே, அதன் வேகம் எப்படி இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. மேற்கண்ட இந்த சிறப்பான புதுப்பிப்பு மூலம் தற்போது வைஃபை அமைப்புகளில், மிகவும் வேகமானது, வேகமானது, பரவாயில்லை அல்லது மெதுவானது என்ற நான்கு வேக அளவுகளில் ஏதாவது ஒன்றை சுட்டிக் காட்டுகிறது.

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம் வைஃபை வேகத்தை கண்டறிவது எப்படி?

கடவுச்சொல் (பாஸ்வேர்டு) கேட்கும் எந்தொரு தனிப்பட்ட வைஃபை நெட்வர்க்கின் வேகத்தையும் இது சுட்டிக் காட்டுவதில்லை. ஆனால் அதன் சிக்னல் எந்த அளவிற்கு பலமாக இருக்கிறது என்பதை தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கும்.

அருகிலுள்ள திறந்த நிலையில் உள்ள வைஃபை நெட்வர்க்கின் வேகத்தை அறிய, பயன்பாடு மற்றும் கண்டறிதல் பகிர்தல் அம்சத்தை பயன்படுத்தி, இந்த தகவல் பெறப்படுகிறது. அருகிலுள்ள திறந்த நிலையில் உள்ள வைஃபை நெட்வர்க் உடன் உங்கள் மொபைல்போனை நீங்கள் இணைத்த உடனே, அந்த குறிப்பிட்ட நெட்வர்க்கின் வேகம் கூகுள் உடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இதன்மூலம் நெட்வர்க்கின் வேகம் எந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது என்பதை நெட்வர்க் ரேட்டிங் அம்சத்தின் மூலம் ஆராயப்பட்டு கண்டறியப்படுகிறது. இந்தக் கட்டுரையில், ஆன்ட்ராய்டு ஓரியோ-வை பயன்படுத்தி, ஒரு நெட்வர்க்கின் வேகம் எப்படி இருக்கிறது என்பதை எப்படி பரிசோதிப்பது என்பதை குறித்து காண்போம்.

படி 1: உங்கள் சாதனத்தின் அமைப்புகள் அப்ளிகேஷனைத் திறக்கவும்

படி 2: நெட்வர்க் மற்றும் இன்டர்நெட் -> வைஃபை ஆகியவற்றை தட்டி -> அங்குள்ள அமைப்பை ஆன் செய்யவும்

படி 3: இப்போது திறந்துள்ள மெனுவில் பட்டியலிடப்பட்ட நெட்வர்க்குகளைக் காணலாம்

படி 4: அந்தப் பட்டியலிடப்பட்ட நெட்வர்க்குகளில் இருந்து, உங்களுக்கு தேவைப்படும் காரியத்தை செய்யக் கூடிய ஒரு நெட்வர்க்கை தேர்ந்தெடுக்கவும்

படி 5: பொதுவாக, சிக்னல் எந்த அளவிற்கு பலமாக உள்ளது என்பதை ஒரு ஐகான் மூலம் காட்டப்படுகிறது. இதில் ஐகான் முழுமையாக இருக்கும் பட்சத்தில், சிக்னல் பலமாக உள்ளது என்று பொருள் கொள்ளலாம்.

ஏற்கனவே நாங்கள் மேலே குறிப்பிட்டது போல, சிக்னல் எந்த அளவிற்கு பலமாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப வேகத்தின் அளவு நான்கு வகைகளில் காட்டப்படுகிறது.

மெதுவானது: நீங்கள் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை, அனுப்பவும் பெறவும் முடியும். படங்கள் மெதுவாக மட்டுமே தோன்றுகின்றன.

பரவாயில்லை: உங்களால் இணைய பக்கங்களைப் படிக்க முடியும், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும், இசையைக் கேட்கலாம், தரமான நிலையில் உள்ள (எஸ்டி) வீடியோக்களைப் பார்க்க முடியும்.

வேகமானது: அதிக பகுப்பாய்வு கொண்ட (ஹெச்டி) வீடியோக்களைக் காண முடியும் என்பதோடு, வீடியோ அழைப்புகளையும் நீங்கள் செய்ய முடியும்.

மிகவும் வேகமானது: உங்களால் மிகவும் வேகமான பகுப்பாய்வு கொண்ட வீடியோக்களைப் பார்க்க முடியும்.

நெட்வர்க்கின் வேகம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்பாத பட்சத்தில், உங்கள் சாதனத்தின் அமைப்புகளைத் திறந்து -> நெட்வர்க் மற்றும் இன்டர்நெட் -> வைஃபை -> வைஃபை -> வைஃபை ப்ரிஃபாரன்ஸ் -> மேம்பட்டது -> நெட்வர்க் ரேட்டிங் அளிப்பது -> ஒன்றுமில்லை. இந்த வழிமுறையைப் பின்பற்றினால் போதுமானது.

இந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ-வின் புதுப்பிப்பு தற்போது ஒருசில மொபைல்போன்களை மட்டுமே வந்து எட்டியுள்ளது. விரைவில் எல்லா மொபைல்போன்களுக்கும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

6ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2.!6ஜிபி ரேம் வசதியுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்2.!

Best Mobiles in India

English summary
Google has started rolling out some useful features in Android 8.1 Oreo update and one feature is to display the speed of nearby open Wi-Fi networks before connecting to it. Let's take a look at how to find if a Wi-Fi network is fast or slow from here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X