FASTag பேலன்ஸை எப்படி SMS மூலம் அறிந்துகொள்வது? SBI பயனர்களுக்கு கிடைத்த புது வசதி.!

|

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அதன் பயனர்களுக்காக ஒரு புதிய சேவையை இப்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவையின் மூலம் இனி SBI பயனர்கள் அவர்களுடைய FASTag பேலன்ஸை எளிதாகச் சரிபார்க்க புதிய SMS சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையானது இனி சபை பயனர்கள் தங்கள் FASTag கணக்கில் மீதமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு மிச்சம் இருக்கிறது என்பதை நொடியில் கண்காணிக்க அனுமதிக்கும்.

FASTag பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்.!

FASTag பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்.!

தெரியாதவர்களுக்காக, இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) FASTag எனப்படும் மின்னணு கட்டண வசூல் முறையைக் கடந்த சில வருடங்களாக நாடு முழுவதும் இயக்கி வருகிறது. ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி FASTag உடன் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கிலிருந்து நேரடியாகப் பயணிகளை டோல் வரி செலுத்த இந்த FASTag அமைப்பு அனுமதிக்கிறது. இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் சுங்கச்சாவடியில் நெருக்கடி குறைந்துள்ளது.

FASTagஐ ரீசார்ஜ் செய்வதில் என்ன சிக்கல் ஏற்படுகிறது?

FASTagஐ ரீசார்ஜ் செய்வதில் என்ன சிக்கல் ஏற்படுகிறது?

வாகன ஓட்டுனர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சிக்கலுக்கும் ஒரு தீர்வு கிடைத்துள்ளது. உங்கள் FASTagஐ ரீசார்ஜ் செய்தால் போதும், உங்கள் வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் FASTag (RFID டேக்) மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த செயல்முறையானது மாநில எல்லைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கியிருந்தாலும், ஒரே கிளிக்கில் FASTag இருப்பைச் சரிபார்க்க நேரடி வழி இல்லை என்பதால் FASTag பயனர்கள் தவிக்கிறார்கள்.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

SBI அறிமுகம் செய்த புதிய SMS சேவை

SBI அறிமுகம் செய்த புதிய SMS சேவை

இதை அறிந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இப்போது, அதன் ​​SBI கணக்கு உரிமையாளர்களுக்கு தங்கள் வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் ஒரு எளிய SMS செயல்முறை பயன்படுத்தி, இனி FASTag இருப்பு தொகை எவ்வளவு இருக்கிறது என்பதைச் சரி பார்க்க அனுமதிக்கிறது. சரி, இந்த புதிய வசதியை SBI வாடிக்கையாளர்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்போது பார்க்கலாம். எஸ்எம்எஸ் மூலம் FASTag இருப்பை எப்படி சரிபார்ப்பது என்பதற்கான செயல்முறை இதோ.

SMS மூலம் எப்படி FASTag பேலன்ஸை அறிந்துகொள்வது?

SMS மூலம் எப்படி FASTag பேலன்ஸை அறிந்துகொள்வது?

  • உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட ஒற்றை வாகனத்திற்கு FTBAL என்று டைப் செய்யுங்கள்.
  • அல்லது உங்களிடம் பல SBI FASTagகள் இருந்தால், குறிப்பிட்ட வாகனத்தை FTBAL என டைப் செய்யவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7208820019 என்ற எண்ணிற்கு மேலே உள்ள செய்தியை SMS மூலம் அனுப்பவும்.
  • உங்கள் SBI FASTagல் மீதமுள்ள இருப்பை வங்கி உடனடியாக உங்களுக்கு SMS மூலம் அனுப்பும்.
  • இதன்படி, உங்கள் FASTag இல் உள்ள பேலன்ஸ் தொகையை நீங்கள் சில நிமிடங்களில் எளிதாக அறிந்துகொள்ளலாம்.
  • உங்க அமெரிக்க நண்பரிடம் கூறி கம்மி விலையில் iPhone 14 வாங்க வேண்டாம்.! ஏன் தெரியுமா?உங்க அமெரிக்க நண்பரிடம் கூறி கம்மி விலையில் iPhone 14 வாங்க வேண்டாம்.! ஏன் தெரியுமா?

    FASTag யார்க்கெல்லாம் கட்டாயமாகும்?

    FASTag யார்க்கெல்லாம் கட்டாயமாகும்?

    மத்திய மோட்டார் வாகன விதிகள் (CMVR) 1989 இன் கீழ் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஜனவரி 1, 2021 முதல் FASTagஐ கட்டாயமாக்கியுள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் CMVR 1989 இன் கீழ் செய்யப்பட்ட திருத்தங்களின் கீழ், 1 ஏப்ரல் 2021 முதல் நீங்கள் புதிய மூன்றாம் தரப்பு காப்பீட்டை வாங்கினால், FASTag கட்டாயமாகும். FASTag ரீசார்ஜ் எந்த வங்கி மூலமாகவும் வாங்கி பயன்படுத்தலாம்.

    இனி எளிதாக உங்களுடைய FASTag பேலன்ஸ் அறிந்துகொள்ளலாம்

    இனி எளிதாக உங்களுடைய FASTag பேலன்ஸ் அறிந்துகொள்ளலாம்

    இருப்பினும், FASTag-க்கு விண்ணப்பிக்க விரும்பும் SBI வாடிக்கையாளர்கள் 5 வருடச் செல்லுபடியாகும் காலத்துடன் அதைப் பெற PoS வசதியைப் பார்க்க வேண்டும். குறிப்பிடத்தக்க வகையில், ஃபாஸ்டேக்கை எஸ்பிஐ அல்லது பதிவுசெய்யப்பட்ட வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் ரீசார்ஜ் செய்து கட்டணம் செலுத்தலாம். இனி உங்களுடைய FASTag பேலன்ஸ் இல் இருக்கும் இருப்புத் தொகையை அறிந்துகொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
How To Check FASTag Balance Via SMS For SBI Users Tips 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X