போக்குவரத்து அபராதம் உங்களுக்கு இருக்கா? எப்படி ஆன்லைனில் செலுத்துவது?- எளிய வழிமுறைகள்!

|

இந்தியாவில் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் அமைப்பது பராமரிப்பது மட்டுமின்றி இந்தியாவில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தையும் அரசு அமல்படுத்தி இருக்கிறது. இந்த விதிகள் ஆனது போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கிறது.

விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம்

விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம்

போக்குவரத்து விதிகளை பராமரிக்க அரசு, சாலைகளில் கேமராக்கள் மற்றும் பிற சென்சார்களை நிறுவி இருக்கிறது. விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க இந்த சாதனங்கள் வழிவகுக்கிறது. டிஜிட்டல் இந்தியா அறிவிப்பு பல கட்டங்கள் முன்னேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓட்டுனர்களுக்கான அபராதம் மற்றும் சலான் செலுத்தும் முறை ஆன்லைனில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்

போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்

நோ-என்ட்ரி போன்ற இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் காவல்துறையினர் அபராதம் விதிப்பார்கள். அதேபோல் சிக்னல்களில் விதிமீறல்கள் உட்பட போக்குவரத்து விதிமீறல்கள் நடைபெறும் பட்சத்திலும் காவல்துறையினர் வாகன எண்ணை நோட் செய்து அபராதம் விதிப்பார்கள். மோட்டா வாகன ஓட்டுனர்கள் அனைவரும் குறைந்தபட்ச அபராதத் தொகை விவரங்கள் மற்றும் அவற்றை செலுத்தும் முறைகளை முழுமையாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம்.

உலகளவில் இந்தியா பெஸ்ட்- மலிவு விலை, அதிக பயன்பாடு: பிரதமர் மோடி புகழாரம்உலகளவில் இந்தியா பெஸ்ட்- மலிவு விலை, அதிக பயன்பாடு: பிரதமர் மோடி புகழாரம்

போக்குவரத்து அபராத தொகைகள்

போக்குவரத்து அபராத தொகைகள்

சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறினால் ரூ.500 அபராதம், போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறினால் ரூ.2000, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டினால் ரூ.10,000 அபராதம், சாலையில் வேகமாக பயணித்தாலோ பந்தயத்தில் ஈடுபட்டாலோ ரூ.5000 என விதிமீறல்களுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா., எப்படி செலுத்துவது

அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா., எப்படி செலுத்துவது

போக்குவரத்து சலான்கள் விதிக்கப்பட்டு அவற்றை முறையாக செலுத்தப்படாத பட்சத்தில் அதிக அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலை ஏற்படலாம். இதுபோன்ற சமயங்களில் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கக் கூடிய எளிதான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம். உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து, அந்த டிராஃபிக் சலானை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

FASTAG-இல் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணம் திருடுவதாக வெளியான வீடியோ- உண்மை என்ன?FASTAG-இல் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பணம் திருடுவதாக வெளியான வீடியோ- உண்மை என்ன?

டிராஃபிக் சலான் நிலையை எப்படி சரிபார்ப்பது?

டிராஃபிக் சலான் நிலையை எப்படி சரிபார்ப்பது?

Step 1. https://echallan.parivahan.gov.in/ என்ற இணையதளத்துக்குள் உள்நுழைய வேண்டும்

Step 2. அதில் ‘Get Challan Details' என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்

Step 3. தற்போது வாகன எண்ணை உள்ளிட்டு, திரையில் காட்டப்டும் Captcha குறியீட்டை உள்ளிட வேண்டும்.

Step 4. பின் Get Details என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்

இப்படி செய்யும்பட்சத்தில், உங்கள் வாகனத்தின் மீது டிராஃபிக் சலான் இருக்கும் பட்சத்தில், அதன் நிலை என்ன என்பது காட்டப்படும்.

ஆன்லைனில் டிராஃபிக் சலானுக்கு பணம் செலுத்துவது எப்படி?

ஆன்லைனில் டிராஃபிக் சலானுக்கு பணம் செலுத்துவது எப்படி?

சலான் விவரங்களை பார்த்த உடன், டிராஃபிக் சலானை ஆன்லைனில் எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Step 1. மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை முழுமையாக மேற்கொண்ட உடன் டிராஃபிக் சலான் இருக்கும் பட்சத்தில் அதில் Pay Now என்ற விருப்பம் காட்டப்படும்.

Step 2. சலான்கள் இருக்கும் பட்சத்தில் Pay Now என்ற விருப்பம் காட்டப்படும். அதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

Step 3. பரிவர்த்தனையை தொடங்க உங்கள் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP எண்ணை உள்ளிட வேண்டும்.

Step 4. இந்த செயல்பாடு அனைத்தும் முடிந்த பிறகு அபராதம் விதிக்கப்பட்ட மாநில மின்-சலான் கட்டண இணைய தளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.

Step 5. இதில் உங்கள் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்ட்டை பயன்படுத்தி சலான் செலுத்தலாம். இன்டர்நெட் பேங்கிங் மூலமாகவும் தொகையை செலுத்தலாம்.

Best Mobiles in India

English summary
How to Check and Pay Traffic Fines Challan Through Online?- Simple Steps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X