வரிசையில் நின்னு பில் கட்டியதுலாம் அப்போ- எலெக்ட்ரிக் பில் எளிதாக ஆன்லைனில் கட்டுவது எப்படி?

|

டிஜிட்டல் இந்தியா திட்டம் பல கட்டங்கள் முன்னோக்கி சென்றிருக்கிறது என்றே கூறலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு பயந்த காலம் முடிந்து தற்போது நேரில் பணம் பரிவர்த்தனைக்கு பயப்படும் காலம் வந்து விட்டது. ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். டிஜிட்டல் இந்தியாவின் பிரதான பயன்பாடாக இருப்பது கூகுள் பே, போன் பே, பீம் ஆப் போன்ற பண பரிவர்த்தனை செயலி ஆகும். இந்த செயலிகள் ரீசார்ஜ் முதல் கரண்ட் பில் கட்டணம் வரை பல தேவைகளை இந்த பயன்பாடு பூர்த்தி செய்கிறது. அதோடு பல கட்டணங்களுக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் மயமாகும் நாடு

டிஜிட்டல் மயமாகும் நாடு

இந்தியா மற்ற நாடுகளை போன்றே நவீன டிஜிட்டல் மயமாகி வருகிறது. இந்தியாவில் மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் பெருமளவு முன்னோக்கி சென்றிருப்பது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம் என்றே கூறலாம். ஸ்மார்ட்போன்கள் இந்திய மக்களுக்கு டிஜிட்டல் சந்தைகளை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே விரும்பிய பொருட்களை ஆர்டர் செய்து சலுகை விலையை செலுத்தி வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

ஆன்லைனில் செலுத்துவதற்கான வழிமுறைகள்

ஆன்லைனில் செலுத்துவதற்கான வழிமுறைகள்

மின்சாரக் கட்டணங்களை பொதுவாக வரிசையில் நின்று செலுத்திய காலம் மலையேறி விட்டது என்றே கூறலாம். மின்சார பில்களில் தொடங்கி பல்வேறு கட்டணங்கள் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி வந்துவிட்டது. மின் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவது என்பது மொபைல் போனை ரீசார்ஜ் செய்வது போன்று ஆகிவிட்டது. போஸ்ட்பெய்ட் பில் செலுத்துவது என்பது மிக எளிமையானது. உங்கள் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த ஸ்மார்ட்போன் மற்றும் இணைய இணைப்பை பயன்படுத்தலாம். இதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது.

பில்லிங் தொகை குறித்து அறிய

பில்லிங் தொகை குறித்து அறிய

இதில் தங்களுக்கு பில்லிங் தொகை குறித்து அறியாத போதும் அதற்கான தீர்வுகளும் இருக்கிறது. பில்லிங் தொகை குறித்து அறியாத நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய தீர்வுகள், நிலுவையில் உள்ள மின்சார கட்டணத்தை சரிபார்க்க கீழே எளிதான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

யுபிஐ செயலிகள் மூலம் மின்சார கட்டணம்

யுபிஐ செயலிகள் மூலம் மின்சார கட்டணம்

யுபிஐ செயலிகள் மூலம் ஆன்லைன் மின்சார கட்டணத்தை எவ்வாறு சரிபார்க்கலாம் என பார்க்கலாம்.

மின்சாரக் கட்டண பில்லிங் தொகையை ஆன்லைனில் சரிபார்க்க இது எளிதான வழிகள் ஆகும். கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பிற டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளை இதற்கு நீங்கள் பயன்படுத்தலாம். செயல்முறை அனைத்து தளங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. போன்பே மூலம் மின் கட்டணம் செலுத்துவது என்பது மிக எளிதான விஷயம் ஆகும். ஒருமுறை சரியாக நுகர்வோர் ஐடி பதிவிட்டு உள்ளே சென்றுவிட்டால் அடுத்தடுத்த மாதந்தோறும் கட்டணங்கள் தாமாகவே காட்டப்படும்.

வழிமுறைகள்

வழிமுறைகள்

ஸ்டெப் 1: நீங்கள் முன்னதாகவே பதிவு செய்திருக்கும் யுபிஐ செயலியை திறக்கவும். கூகுள் பே குறித்து கீழே உள்ள வழிமுறைகளை பார்க்கலாம்.

ஸ்டெப் 2: பில்கள் "பிரிவுக்கு சென்று" மின்சாரம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3: நீங்கள் உங்கள் மின்சார பில் விவரங்களை இணைக்க வேண்டும். பயன்பாட்டின் சுயவிவரத்தில் பல பில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஸ்டெப் 4: ஆன்லைனில் பணம் செலுத்த விரும்பும் கணக்கை இணைக்க வேண்டும். இதற்கு நுகர்வோர் ஐடி தேவை. இதை எளிதாக வைத்திருத்தல் அவசியம். இதை தவிர்க்கும் பட்சத்தில் ஆன்லைன் பணம் செலுத்துதல் மற்றும் பில்லிங் தொகையை பெற அனுமதிக்காது.

ஸ்டெப் 5: கணக்கு வெற்றிகரமாக இணைக்கப்பட்ட உடன் நிலுவையில் பில்கள் ஏதேனும் இருந்தால் அது காண்பிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் பில்லிங் தொகை தானாகவே காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பில்லிங்கை எந்த தினத்திற்குள் செலுத்த வேண்டும், எத்தனை நாட்கள் கால அவகாசம் என்பதை தெளிவாக காட்டும்.

மின் வாரியத்தின் இணையதளங்கள் மூலமாக கட்டணம்

மின் வாரியத்தின் இணையதளங்கள் மூலமாக கட்டணம்

அதிகார்ப்பூர்வ மின் வாரியத்தின் இணையதளங்கள் மூலமாகவும் ஆன்லைனில் மின்சார கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என பார்க்கலாம்.

ஸ்டெப் 1: உங்கள் நிலுவையில் உள்ள மின்சார கட்டணங்கலை ஆன்லைனில் சரிபார்க்க இது சிறந்த வழியாகும். இதற்கு நீங்கள் மாநில மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்குள் சென்று பதிவு செய்ய வேண்டும்.

இதற்கான சான்று கிடைத்த உடன் உடன் உங்கள் ஆன்லைன் கணக்கை உள்நுழைய வேண்டும். இதில் பில்லிங் தொகையை ஆன்லைனில் பெற பில்லிங் தொகை என்ற விருப்பத்தை கிளிக் செய்து உள் நுழைய வேண்டும். இதன்மூலம் பில் செலுத்தலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Check and Pay Electric Bill Through Online in Tamilnadu: Simple Steps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X