புது போன் எதுக்கு? உங்க மொபைலில் 5G ஆக்டிவேட் செய்யலாமே..

|

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5G சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது அளப்பரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி 5ஜி சேவையை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்தார். இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவைகள் கிடைக்கும் காலகட்டம், செயலாக்கங்கள் உள்ளிட்ட பல தகவலை உறுதிப்படுத்தின.

பல மடங்கு அதிக வேகம்..

பல மடங்கு அதிக வேகம்..

4ஜி அறிமுகமான காலக்கட்டத்தில் 3ஜி அணுகல் கொண்டிருந்த ஸ்மார்ட்போன்களை வைத்திருந்தவர்கள் பட்ட சிரமத்தை அறிந்திருப்போம். காரணம் 4ஜிக்கும் 3ஜிக்கும் ஆன இணைய வேக வித்தியாசம் முற்றிலும் மாறுபட்டு இருந்தது.

இந்த நிலையில் 5ஜி வேகமானது 4ஜியை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி உடன் ஒப்பிடும் போது 4ஜி மிகவும் அடிப்படையான ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. காரணம் 5ஜி மூலம் அடைய இருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்பது அதீத வகையில் இருக்கப் போகிறது.

தயாராக இருப்பது அவசியம்

தயாராக இருப்பது அவசியம்

ஏர்டெல் அக்டோபர் 1 முதலே 5ஜி சேவையைத் தொடங்கி இருக்கிறது. ஜியோ தீபாவளி முதல் 5ஜி சேவையைத் தொடங்க இருக்கிறது. விஐ அறிமுக தேதி குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் விரைவில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனமாக இருப்பது ஜியோ, ஏர்டெல், விஐ தான். இந்த மூன்று நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவையைக் கொண்டுவர இருக்கிறது. நாமும் இதற்கு தயாராக இருப்பது அவசியம் அல்லவா.

புதிய ஸ்மார்ட்போன் எதற்கு?

புதிய ஸ்மார்ட்போன் எதற்கு?

5ஜி ஆதரவு கொண்ட புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்னாள் உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இருக்கிறதா என்பதை சோதித்து பார்ப்பது அவசியமாகும்.

கடந்த 2 ஆண்டுகளாக அறிமுகம் செய்யப்பட்ட பெரும்பாலான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் 5ஜி ஆதரவு இடம்பெற்று இருக்கிறது.

புதிய போன் வாங்க வேண்டிய தேவையில்லை

புதிய போன் வாங்க வேண்டிய தேவையில்லை

Galaxy S21 சீரிஸ், ஆப்பிள் ஐபோன் ஏ13, அசுஸ் ஆர்ஓஜி போன் 5, ஆர்ஓஜி போன் 6, ரியல்மி ஜிடி சீரிஸ், ஒன்பிளஸ் 9 மற்றும் சீரிஸ் போன்ற அனைத்து ஸ்மார்ட்போன்களும் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கின்றன.

இதில் பல ஸ்மார்ட்போனை பல மாதங்களுக்கு முன்பு நீங்கள் வாங்கி இருக்கலாம். ஆனால் இதிலும் 5ஜி ஆதரவு இருக்கலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

எனவே நீங்கள் புதிய போன் வாங்க வேண்டிய தேவையில்லை. சரி, உங்கள் போனில் 5ஜி ஆதரவு இருக்கிறதா என்பதை சரிபார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

5ஜி ஆதரவு செக் செய்வது எப்படி?

5ஜி ஆதரவு செக் செய்வது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்யவும்.

இதில் Connection என்ற விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளவும்.

அதில் மொபைல் நெட்வொர்க் என்ற விருப்பம் காட்டப்படும் அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

இதில் நெட்வொர்க் மோட் என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

5ஜி ஆதரவு இருக்கா, இல்லையா?

5ஜி ஆதரவு இருக்கா, இல்லையா?

இதில் 2G/3G/4G/5G (ஆட்டோ கனெக்ட் என்ற விருப்பம் காட்டப்படும். இப்படி காட்டும்பட்சத்தில் உங்கள் மொபைல் 5ஜி ஆதரவு இருக்கிறது என்பது உறுதி.

2G/3G/4G என்ற விருப்பம் காண்பித்தால் உங்கள் மொபைலில் 5ஜி ஆதரவு இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5ஜி ஆக்டிவேட் செய்வது எப்படி?

5ஜி ஆக்டிவேட் செய்வது எப்படி?

உங்கள் மொபைலில் 5ஜி சேவைகளை இயக்க விரும்பினால், நெட்வொர்க் அமைப்புகளுக்கு சென்று 2G/3G/4G/5G (ஆட்டோ கனெக்ட்) என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

இதை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நீங்கள் இருக்கும் இடத்தில் எந்த நெட்வொர்க் கிடைக்கிறதோ அது தானாகவே கனெக்ட் ஆகிவிடும்.

முக்கியமாக சோதிக்க வேண்டிய விஷயங்கள்..

முக்கியமாக சோதிக்க வேண்டிய விஷயங்கள்..

உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவை பெறுவதற்கு இரண்டு விஷயங்கள் பிரதானமாகும்.

ஒன்று நீங்கள் இருக்கும் இடத்தில் 5ஜி ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மற்றொன்று உங்கள் மொபைல் மற்றும் சிம் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கிறதா என்பது சரிபார்த்துக் கொள்ளவும்.

இது எதுவும் இல்லை என்றால் 5ஜி ஆதரவு கொண்ட போனை உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப விரைவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to check and enable 5G on your phone? Simple Tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X