UPI அலெர்ட்.. பேங்க் அக்கவுண்ட்களில் இருந்து தானாகவே கழியும் ரூ.199, ரூ.299, ரூ.399.. நிறுத்துவது எப்படி?
பெரும்பாலான சந்தா கட்டணங்கள் 99 ரூபாயில் தான் முடிகின்றன. அப்படியாக ஓடிடி, பிரீமியம் மெம்பர்ஷிப், சோஷியல் மீடியா சப்ஸ்க்ரிப்ஷன், இ-காமர்ஸ் என ரூ.199, ரூ.299, ரூ.399 போன்ற சந்தா கட்டணங்களை ஆட்டோ-பே வசதியின் கீழ் செலுத்தி கொண்டிருக்கும் யுபிஐ பயனர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
ஏனென்றால் ஆட்டோ-பே ஒப்புதல் கிடைத்தவுடன், யுபிஐ அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள சந்தாதாரரின் பேங்க் அக்கவுண்டில் இருந்து தானாகவே நிதியை கழிக்கும் இந்த செயல்முறை, ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கினாலும், ஒரு பயனர் ஆக்டிவ் ஆக உள்ள சந்தாக்களை பற்றி மறந்துவிடும் சூழ்நிலைகளுக்கும் வழிவகுக்கலாம்.

பயனர்கள் இதை உணரும் முன்பே, சிறிய அளவிலான சாந்த தொகைகள் மாதக்கணக்கில் பேங்க் அக்கவுண்ட்களில் இருந்து கழிந்து இருக்கும். இப்படியாக கழியும் தொகை, பெரிய தொகையிலான சந்தாவாக இருந்தால், மாதாந்திர செலவு இடிக்கிறதே என்று கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் சிறிய தொகையிலான சந்தாவாக இருந்தால் சிறிய அளவிலான செலவுகளோடு காணாமல் அடிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. இந்த இடத்தில் தான் ஒரு யுபிஐ செட்டிங்ஸ் உங்களுக்கு உதவும்!
ஆக்டிவ் ஆக உள்ள ஆட்டோ-பே மேன்டேட்களை அடையாளம் காணுவது எப்படி? பெரும்பாலான யுபிஐ ஆப்களில் மேன்டேட்ஸ் (Mandates) என்கிற ஒரு பகுதி உள்ளது. அங்கு ஆக்டிவ் ஆக உள்ள உள்ள மேன்டேட்களின் பட்டியலை பார்க்க முடியும். கூடுதலாக, வணிகரின் பெயர், பணம் செலுத்திய தொகை மற்றும் பணம் செலுத்திய தேதி ஆகிய விவரங்களையும் பார்க்க முடியும்
அவைகளை மதிப்பாய்வு செய்து, ஏதேனும் தேவை இல்லாத சந்தா அல்லது தற்போது நீங்கள் பயன்படுத்தாத சந்தா ஆக்டிவ் ஆக உள்ளதா என்பதை கண்டுபிடிக்கவும். மேலும் பயனர்கள் தங்கள் வங்கி அறிக்கைகளை (bank statements) மதிப்பாய்வு செய்து, தொடர்ச்சியான டெபிட் உள்ளதா என்பதையும் சரிபார்க்கலாம்.
யுபிஐ மேன்டேட்களை கேன்சல் செய்வது எப்படி? பயனர்கள் தங்கள் மேன்டேட்களை ரத்து செய்ய, யுபிஐ ஆப்களில் உள்ள மேன்டேட்ஸ் (Mandates) பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் குறிப்பிட்ட மேன்டேட்டை தேர்ந்தெடுத்து கேன்சல் (Cancel) பட்டனை கிளிக் செய்யவும். இந்த செயலை செய்த பிறகு, மேன்டேட் ரத்து செய்யப்படும். மற்ற பயனர்கள் சில சந்தாக்கள் - சேவை வழங்குநரிடமும் நேரடியாக ரத்து செய்ய வேண்டியிருக்கலாம்.
நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
- ஆட்டோ-பே மேன்டேட்களை ரத்து செய்வது, ஏற்கனவே செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை திரும்ப பெறாமல், மேலும் எந்த பரிவர்த்தனைகளும் நடைபெறுவதை தடுக்கிறது.
- தேவையற்ற பிடித்தங்களை தடுக்க, எந்தவொரு கட்டணமும் கழிக்கப்படுவதற்கு முன்பு ஒரு பயனர் மேன்டேட்-ஐ ரத்து செய்ய வேண்டும்.
- காப்பீட்டு கொள்கை பிரீமியங்கள் அல்லது கடன் இஎம்ஐ-கள் போன்ற முக்கியமான பேமண்ட்கள் தற்செயலாக நிறுத்தப்படவில்லை என்பதை பயனர் உறுதி செய்வது அவசியம்.
ஆட்டோ-டெபிட் அல்லது இ-மேண்டேட் என்றால் என்ன? ஆட்டோ-டெபிட் / இ-மேண்டேட் என்பது ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு வழங்கும் அறிவுறுத்தலின் டிஜிட்டல் வடிவம் (digital version of an instruction) ஆகும். இந்த அறிவுறுத்தல், கடன் இஎம்ஐ-கள், பயன்பாட்டு கட்டணங்கள் (மின்சார கட்டணம் போன்றவைகள்) மற்றும் சந்தாக்கள் போன்ற தொடர் பேமண்ட்களை (அதாவது ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் பேமண்ட்களை) உங்கள் வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு அல்லது யுபிஐ-இலிருந்து நேரடியாக, தானாகவே பிடித்தம் செய்ய நிறுவனங்களை அனுமதிக்கிறது.
இது ஒவ்வொரு முறையும் கைமுறையாக பணம் செலுத்தும் தேவையை நீக்குகிறது, தாமதமாக கட்டணம் செலுத்துவதையும் மற்றும் அதனால் ஏற்படும் கூடுதல் கட்டணங்களையும் குறைக்கிறது. ஒரு இ-மேண்டேட்டை அமைக்க, வாடிக்கையாளர் ஒரு ஒப்புதல் படிவத்தை நிரப்ப வேண்டும், மேலும் நெட் பேங்கிங் சான்றுகள், கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்கள் போன்றவற்றை பயன்படுத்தித் தனது அடையாளத்தையும் சரிபார்க்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட சரிபார்ப்பு முடிந்தவுடன், வங்கி ஆனது தொடர் பேமண்ட் அறிவுறுத்தலை அமைத்து, அது உடனடியாக செயல்படுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications