உங்க PAN-ஆதார் லிங்க் ஸ்டேட்டஸை உடனே செக் செய்யுங்க.! இனி லிங்க் செய்தால் ரூ.1000 அபராதமா?

|

இந்திய அரசாங்கம் PAN அட்டை வைத்துள்ள அட்டைதாரர்களுக்குக் கடந்த ஆண்டு ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்திருந்தது. இதன் படி, PAN கார்டு வைத்துள்ள அணைத்து இந்தியக் குடிமக்களும் அவர்களுடைய PAN விபரங்களை, அவர்களுடைய ஆதார் அட்டை விவரத்துடன் இணைக்கும் படி வலியுறுத்தப்பட்டது. இந்த இன்டர்லிங்கிங் செயலை மக்கள் செய்து முடிக்க ஒரு குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.

PAN உடன் ஆதார் இணைக்கப்பட இது தான் இறுதி காலக்கெடுவா?

PAN உடன் ஆதார் இணைக்கப்பட இது தான் இறுதி காலக்கெடுவா?

இந்த காலக்கெடுவிற்குள் PAN உடன் ஆதார் இணைக்கப்பட்டால் அபராதம் கிடையாது என்று அரசு மூலம் அறிவிக்கப்பட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சேவைகளுக்கு பான் கார்டை, ஆதார் அட்டையுடன் இணைப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்னும், உங்கள் ஆதார் மற்றும் பான் அட்டையை நீங்கள் இணைக்கவில்லை என்றால் கட்டாயமாகக் குறைந்தபட்ச அபராதக் கட்டணத்துடன் 31 மார்ச் 2022 முதல் 31 மார்ச் 2023-க்குள் இணைத்தாக வேண்டும் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்.

இந்த தேதிக்குள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டால் குறைந்தபட்ச அபராதமா?

இந்த தேதிக்குள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டால் குறைந்தபட்ச அபராதமா?

ஆம், இது தான் இப்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்ட இறுதிக்கட்ட காலக்கெடுவாகும். கடந்த மார்ச் 31, 2022 தேதிக்குப் பிறகு பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் நபர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச அபராதம் வசூலிக்கப்பட்டது. ஏப்ரல் 1, 2022 முதல் ஜூன் 30, 2022-க்குள் பான் எண்ணுடன் ஆதார் விபரங்களை இணைக்கும் குடிமக்களிடம் இருந்து ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

இன்னும் உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவில்லையா? அப்போ இது தான் உங்களுடைய அபராத தொகை!

இன்னும் உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவில்லையா? அப்போ இது தான் உங்களுடைய அபராத தொகை!

இந்த காலக்கெடுவும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு அடையாள அட்டைகளையும் இணைக்கத் தவறிவிட்ட நபர்களில் நீங்கள் ஒருவர் என்றால், அதை இப்போது உடனே லிங்க் செய்துவிடுங்கள். ஆனால், இப்போது உங்களுடைய PAN மற்றும் ஆதார் அட்டையை இணைக்க நீங்கள் கட்டாயமாக ரூ. 1,000 அபராதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியது அவசியம் என்பதை மறக்காதீர்கள். ஜூலை 1, 2022 முதல் மார்ச் 31, 2023க்குள் இந்த கட்டணத்துடன் உங்கள் ஆவணங்களை நீங்கள் இணைக்கலாம்.

உங்கள் PAN மற்றும் Aadhaar இணைக்கப்பட்டதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா?

உங்கள் PAN மற்றும் Aadhaar இணைக்கப்பட்டதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா?

சரி, இது ஒரு புறம் இருக்க, சிலருக்கு அவர்களுடைய PAN மற்றும் Aadhaar விபரங்கள் இணைக்கப்பட்டதா என்பதே சந்தேகமாக இருக்கலாம், அப்படி உங்களுக்கும் சந்தேகம் இருந்தால், உங்கள் பான் மற்றும் ஆதார் இணைப்பு நிலையை நீங்கள் ஆன்லைன் மூலம் சரிப்பார்களாம். அதை எப்படிச் செய்வது என்று இப்போது தெரிந்துகொள்ளலாம். இந்த சரிபார்ப்பை அறிந்துகொள்ள நீங்கள் வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்டலுக்கு செல்ல வேண்டும்.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

பான் மற்றும் ஆதார் இணைப்பு ஸ்டேட்டஸை ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

பான் மற்றும் ஆதார் இணைப்பு ஸ்டேட்டஸை ஆன்லைனில் செக் செய்வது எப்படி?

 • உங்கள் ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கு முதலில் நீங்கள் pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும்.
 • உங்கள் பான் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
 • பாதுகாப்பு கேப்ட்சா கோடை உள்ளிட்டு Submit கிளிக் செய்யவும்.
 • உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பின் நிலை இப்போது திரையில் காட்டப்படும்.
 • இந்த முறையைப் பின்பற்றி உங்கள் PAN-Aadhaar Link Status ஐ நீங்கள் செக் செய்யலாம்.
 • SMS மூலம் ஆதார்-பான் லிங்க் ஸ்டேட்டஸ் விபரங்களை அறிவது எப்படி?

  SMS மூலம் ஆதார்-பான் லிங்க் ஸ்டேட்டஸ் விபரங்களை அறிவது எப்படி?

  • இதேபோல், SMS மூலம் கூட உங்கள் ஆதார்-பான் கார்டு இணைப்பு விபரங்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
  • வருமான வரித்துறையின் பிரத்தியேக சோதனை எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இதை நீங்கள் சரிபார்க்கலாம்.
  • உங்கள் SMS ஆப்ஸைத் திறக்கவும்.
  • UIDPAN என டைப் செய்யவும்
  • பின்னர், அந்த மெசேஜ்ஜை '567678' அல்லது '56161' என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
  • புது iPhone 14 மாடல் விலை iPhone 13-ஐ விட குறைவாக இருக்குமா? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?புது iPhone 14 மாடல் விலை iPhone 13-ஐ விட குறைவாக இருக்குமா? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?

   உங்கள் ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தால் என்ன செய்தி காண்பிக்கப்படும்?

   உங்கள் ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தால் என்ன செய்தி காண்பிக்கப்படும்?

   • உங்கள் விபரங்கள் இணைக்கப்பட்டிருந்தால் "Aadhaar...is already associated with PAN..in ITD database. Thank you for using our services" என்று காண்பிக்கும்.
   • ஒருவேளை உங்கள் ஆதார் மற்றும் பான் விபரங்கள் இணைக்கப்படவில்லை என்றால், "Aadhaar...is not associated with PAN..in ITD database" என்று காண்பிக்கும்.
   • உங்கள் PAN மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் உடனே அவற்றை இணைத்துவிடுங்கள்.

Best Mobiles in India

English summary
How To Check Aadhaar And PAN Card Linking Status Online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X