ஒன்னும் பிரச்சனை இல்ல., UPI ஐடி மறந்து போச்சா- இதோ வாட்ஸ்அப் மூலமாக எளிதாக மாற்றலாமே!

|

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எதிர்பார்க்காத அளவிற்கு பல கட்டங்கள் முன்னோக்கி வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ப அனைத்து தரப்பு மக்களும் தங்களை மேம்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் முக்கிய கொள்கையான டிஜிட்டல் இந்தியா கொள்கை பல கட்டங்கள் முன்னோக்கி வருகிறது. அதில் பிரதான ஒன்றாக இருப்பது டிஜிட்டல் பரிவர்த்தனை. சிறிய கடை முதல் பெரிய கடை வரை அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. சிறிய பொருள் வாங்கினால் கூட ஸ்கேனர் போர்ட் எங்கே இருக்கிறது என்ற கேள்வி அனைவராலும் கேட்கத் தொடங்கப்பட்டுவிட்டது.

யுபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட் இண்டர்பேஸ்

யுபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட் இண்டர்பேஸ்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு என கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம் ஆப் என பல இருந்தாலும் அனைத்தையும் ஒருங்கிணைப்பது யுபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட் இண்டர்பேஸ் தான். UPI (Unified Payment Interface) ஆனது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் சேவையாகும். இந்த சேவையானது அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களிலும் பணம் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது. பொதுவாக டிஜிட்டல் பரிமாற்றம் செய்கையில் எதிர்கொள்ளப்படும் ஒரு சிக்கல் பணப் பரிமாற்றம் செய்யும் போது பணம் பாதியில் சர்வர் கோளாறு அல்லது வேறு எதோ காரணத்தால் பாதியில் நின்றுவிடும். இந்த சிக்கல் தாமாக சரியாகிவிடும் என்றாலும் பொதுவாக எதிர்கொள்ளப்படும் சிக்கல்களை பார்க்கலாம்.

என்பிசிஐ அனுமதியோடு வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை

என்பிசிஐ அனுமதியோடு வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை

2018 ஆம் பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப்., சோதனை அடிப்படையில் வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையை சோதனை அடிப்படையில் தொடங்கியது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) அனுமதியோடு வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை அதிகாரிப்பூர்வமாக கொண்டு வரப்பட்டது. வாட்ஸ்அப் சேவையானது பிரதான மெசேஜ் தளமாக இருக்கிறது. வாட்ஸ்அப் மெசேஜ் தளத்துடன் வாட்ஸ்அப் பிஸ்னஸ் தளமும் பிரபலமாக தொழில் வளர்ச்சி நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் சேட் செய்யும் போதே அதில் இருந்து வெளியேறாமல் நண்பர்களுக்கு எளிதில் பணம் செலுத்தலாம். ஆனால் முன்னதாக குறிப்பிட்டது போல் அனைத்து பேமெண்ட் தளங்களிலும் எதிர்கொள்ளப்படும் பொதுவான சிக்கல் பலர் தங்களது யுபிஐ ஐடியை மறந்துவிட்டு குழம்பி தவிப்பார்கள்.

யுபிஐ ஐடி பதிவிடுவது என்பது முக்கியம்

யுபிஐ ஐடி பதிவிடுவது என்பது முக்கியம்

அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களிலும் பணம் பரிமாற்றம் செய்யும் போது யுபிஐ ஐடி பதிவிடுவது என்பது முக்கியமாகும். பலர் யுபிஐ ஐடி மறந்து தவிப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி யுபிஐ ஐடியை மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். வாட்ஸ்அப் பே மூலமாக யுபிஐ ஐடியை எப்படி மாற்றுவது என்ற வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம். தங்கள் வாட்ஸ்அப் தளத்தில் பே சேவை காணப்படவில்லை என்றால் வாட்ஸ்அப் செயலியை முதலில் அப்டேட் செய்வது கட்டாயமாகும். பின் வாட்ஸ்அப் பயன்பாட்டுக்குள் உள்நுழைய வேண்டும்.

வங்கியின் யுபிஐ பின்-ஐ கிளிக் செய்ய வேண்டும்

வங்கியின் யுபிஐ பின்-ஐ கிளிக் செய்ய வேண்டும்

ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் வாட்ஸ்அப் தளத்தை ஓபன் செய்ய வேண்டும். அதன்பின் அதன் வலது புற மேற்பகுதியில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும். அதில் பேமெண்ட் (கட்டணங்கள்) என்பதை ஓபன் செய்ய வேண்டும். அதில் எந்த வங்கியின் யுபிஐ பின்-ஐ மாற்ற வேண்டுமோ அதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும். அதில் யுபிஐ பின் மாற்று என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் முன்னதாக இருக்கும் யுபிஐ பின்னை பதிவிட்டு புதிய யுபிஐ பின்னை பதிவிட்டு மாற்றி அமைக்கலாம். அதில் புதிய யுபிஐ பின் எண்ணை உறுதிப்படுத்திக் கொண்டு பணப் பரிவர்த்தனையை புதிய யுபிஐ எண் உடன் தொடங்கலாம்.

யுபிஐ பின்னை மறந்து விட்டால் என்ன செய்வது

யுபிஐ பின்னை மறந்து விட்டால் என்ன செய்வது

யுபிஐ பின்னை மறந்து விட்டால் என்ன செய்வது என்று பார்க்கும் போது அதேமுறையில் வாட்ஸ்அப் தளத்துக்குள் சென்று Forgot UPI PIN என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதற்குள் சென்று டெபிட் கார்ட் எண்ணின் கடைசி 6 இலக்குகளை எண்ணையும், காலாவதி தேதியையும் பதிவிட வேண்டும். பின் சிவிவி எண்ணை கேட்டால் பதிவிட்டு அதையும் பதிவிட வேண்டும். அதன்பின் தங்களுக்கு தேவையான புதிய யுபிஐ பின்னை உள்ளிட்டு சப்மிட் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். இனி நீங்கள் புதிய யுபிஐ ஐடி மூலமாக பணப் பரிவர்த்தனை செய்யலாம்.

கட்டண பரிவர்த்தனை சேவை

கட்டண பரிவர்த்தனை சேவை

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டின் துவகத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுடன் நாட்டில் அதன் கட்டண பரிவர்த்தனை சேவையை சோதிக்கத் தொடங்கியது. இப்போது அனைவருக்குமான ஒரு அம்சமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை இன்னமும் கிடைக்காத பட்சத்தில் வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும். அதன்பின்பு இந்த சேவையை பயன்படுத்த முயற்சிக்கலாம். குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் 160-க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் பரிவர்தனைகளை இயக்க Unified Payment Interface (UPI) ஐ பயன்படுத்தி National Payments Corporation of India (NPCI) உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எளிதான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனை

எளிதான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனை

வாட்ஸ்அப் சேவையை விரிவுப்படுத்தும் விதமாகவும் பயனர்களுக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியின் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். இதற்கு வங்கி கணக்கு தகவலை உள்ளிட அதனுடன் பதிவிட்ட தொடர்பு எண்ணை வாட்ஸ்அப்பில் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to change UPI Pin through WhatsApp- Here the Simple Steps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X