டாடா ஸ்கையின் பழைய மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது?

|

இந்தியாவில் பிரபலமான டைரக்ட்-டு-ஹோம் (டி.டி.எச்) சேவை வழங்குநர்களில் ஒருவரான டாடா ஸ்கை, அதன் வாடிக்கையாளர்களுக்குப் பல சேவைகளையும் திட்டங்களையும் வழங்குகிறது. பயனர்களுக்கு வசதி மற்றும் தொந்தரவில்லாத சேவைகளை வழங்கும் ஒரே நோக்கத்துடன், சேவை வழங்குநர் வகை சார்ந்த டி.டி.எச் தொகுப்புகளை வழங்குகிறது. பதிவுசெய்த மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, சந்தாதாரர்கள் தங்கள் திட்டங்களையும் தொகுப்புகளையும் எளிதாக மாற்றிக்கொள்ளும் வசதி டாட்டா ஸ்கையில் உள்ளது.

சிறந்த ஆதரவு அமைப்பு மற்றும்

டாடா ஸ்கை சந்தாதாரர்களுக்கு அவர்களின் வெவ்வேறு கோரிக்கைகளை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நேரடியாகப் பூர்த்தி செய்வதற்கான சிறந்த ஆதரவு அமைப்பு மற்றும் சுய உதவி அமைப்பு உள்ளது. ஆதரவு அமைப்பைப் பயன்படுத்தி சந்தாதாரர்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணை எளிதாக மாற்றலாம். டாடா ஸ்கைவில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றி அறிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள்.

டாடா ஸ்கை பதிவு

டாடா ஸ்கை பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை ஆன்லைனில் மாற்றுவதற்கான படிகள் உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணை ஆன்லைனில் மாற்ற விரும்பினால், டாடா ஸ்கை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். நீங்கள் ஏற்கனவே பதிவுசெய்த பயனராக இருந்தால், இணையதளத்தில் லாகின் செய்து 'My Accoun' என்பதற்குச் சென்று சுயவிவரப் பகுதியைக் கிளிக் செய்க.

ஆனந்த கண்ணீரில் சமூகவலைதளம்- 2 சாக்லெட், ஒரு லெட்டர்- அப்படி என்ன இருந்தது அந்த லெட்டரில்?ஆனந்த கண்ணீரில் சமூகவலைதளம்- 2 சாக்லெட், ஒரு லெட்டர்- அப்படி என்ன இருந்தது அந்த லெட்டரில்?

பிரிவின் கீழ், நீங்கள் பதிவுசெய்த எண் மற்றும்

edit profile பிரிவின் கீழ், நீங்கள் பதிவுசெய்த எண் மற்றும் மாற்று எண்ணைக் காண்பீர்கள் (வழங்கப்பட்டால் மட்டுமே). 'edit profile' பொத்தானைக் கிளிக் செய்து, பதிவுசெய்த மொபைல் எண்ணாக நீங்கள் பயன்படுத்த விரும்பும் புதிய மொபைல் எண்ணைத் டைப் செய்யுங்கள். மாற்றங்களைச் சேமிக்க save பொத்தானைக் கிளிக் செய்க. நீங்கள் பதிவுசெய்த எண்ணை மாற்றியதும், உங்கள் பரிவர்த்தனை தொடர்பான மற்றும் பிற செய்திகள் அனைத்தும் புதிய எண்ணுக்கு அனுப்பப்படும்.

எனக்கு நடந்தது நாட்டில் மறுபடியும் யாருக்கும் நடக்க கூடாது.! எதிர்பார்ப்பை உருவாக்கும் ராக்கெட்ரி.!எனக்கு நடந்தது நாட்டில் மறுபடியும் யாருக்கும் நடக்க கூடாது.! எதிர்பார்ப்பை உருவாக்கும் ராக்கெட்ரி.!

உங்களிடம் MyTataSky ஆன்லைன் கணக்கு

பதிவுசெய்யப்பட்ட எண்ணை ஆஃப்லைனில் மாற்றுவதற்கான செயல்முறை உங்களிடம் MyTataSky ஆன்லைன் கணக்கு இல்லையென்றால், நீங்கள் டாடா ஸ்கை ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்புகொண்டு உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணை வசதியாக மாற்றலாம். நீங்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்து ஹெல்ப்லைன் எண் மாறுபடும். நீங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியுடன் இணைந்தவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றும்படி அவரிடம் கேட்கலாம். உங்கள் தேவையை சரிபார்க்க, உங்கள் பெயர், முகவரி, பழைய எண் மற்றும் பிற முக்கியமான தகவல்களை நீங்கள் பகிர வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Change Tata Sky Registered User Mobile Number : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X