PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?

|

இந்திய மக்கள் அனைவரிடமும் அவர்களின் நிதி வரலாற்றை அடையாளம் காண்பதற்காக PAN அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எப்படி ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணமாகச் செயல்படுகிறதோ, அதேபோல் உங்களுடைய நிதி தகவலை அடையாளம் காட்டும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாக இந்த PAN அட்டை செயல்படுகிறது. இப்படி மிக முக்கியமான ஆவணத்தில் பிழைகள் இருப்பது சிக்கலை உருவாக்கும் என்பதால் அவற்றைத் திருத்தும் செய்வது நம்முடைய கடமையாகும்.

பான் அட்டை பிழைகளை திருத்த முடியுமா?

பான் அட்டை பிழைகளை திருத்த முடியுமா?

பான் அட்டையில் உள்ள அடையாள எண் தவிர மற்ற விபரங்களை நீங்கள் திருத்தம் செய்துகொள்ள இந்திய அரசு அனுமதிக்கிறது. குறிப்பாக, நீங்கள் விரும்பும் மாற்றங்களை ஆப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரண்டு வழிகளிலும் திருத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறீர்கள். உங்கள் பான் அட்டையில் உள்ள பெயர் விபரம், மற்றும் பிறந்த தேதி விபரங்களில் இருக்கும் பிழைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திருத்தும் செய்துகொள்ளலாம். இதை எப்படிச் செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படும் PAN அட்டை எதற்கானது?

இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படும் PAN அட்டை எதற்கானது?

பான் அட்டை என்பது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படும் ஒரு முக்கியமான ஆவணமாகும். இது உங்கள் அடையாளத்தை நிரூபிப்பதோடு, உங்களுடைய அனைத்து முக்கிய நிதி பரிவர்த்தனைகளுக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும் அவசியமாகிறது. பான் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள 10 இலக்க ஆல்பா எண்கள் தான் உங்களுடைய நிரந்தர பான் கணக்கு எண் ஆகச் செயல்படுகிறது. இந்த 10 இலக்க ஆல்பா எண்கள் உங்களின் நிதி வரலாற்றைக் காண்பிக்கிறது.

பான் அட்டையில் உள்ள பிழைகள் சிக்கலை உருவாக்குமா?

பான் அட்டையில் உள்ள பிழைகள் சிக்கலை உருவாக்குமா?

வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுக்க முயன்றாலோ கட்டாயம் உங்களுடைய பான் கார்டு விபரங்களை அத்துடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டியது இன்றைய நடைமுறையில் கட்டாயமானதாகும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பான் அட்டையில் உள்ள உங்களின் பெயர் அல்லது வேறு ஏதேனும் தகவலில் தவறு இருப்பது சிக்கலை உருவாக்கும் என்பதனால், அவற்றைச் சரியாகத் திருத்தம் செய்து வைத்துக்கொள்வது சிறப்பானது.

1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!

PAN அட்டை பிழைகளை ஆப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் திருத்துவது எப்படி?

PAN அட்டை பிழைகளை ஆப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் திருத்துவது எப்படி?

ஒரு வேலை உங்கள் PAN அட்டையில் ஏதாவது தவறு இருந்தால் அல்லது சில திருத்தங்களை நீங்கள் மாற்ற விரும்பினால், அவரை நீங்கள் இப்போது எளிமையாக ஆப்லைன் மூலமாகவும், வீட்டிலிருந்த படி ஆன்லைன் மூலமாகவும் செய்து முடிக்கலாம். எனவே, உங்கள் பான் அட்டையில் இருக்கும் தவறுகளை எப்படி திருத்தம் செய்யலாம் என்பது இங்கே. முதலில் ஆப்லைன் மூலமாக எப்படி PAN பிழைகளைத் திருத்தும் செய்வது என்று பார்க்கலாம்.

ஆஃப்லைன் மூலம் PAN அட்டை விபரங்களை மாற்றும் முறை

ஆஃப்லைன் மூலம் PAN அட்டை விபரங்களை மாற்றும் முறை

ஆஃப்லைன் மூலம் உங்கள் பான் அட்டையில் இருக்கும் பிழைகளை திருத்தம் செய்ய விரும்பினால், இதற்கு நீங்கள் அருகிலுள்ள பான் வசதி மையத்திற்குச் சென்று ஒரு படிவத்தை (Form) நிரப்ப வேண்டும். இந்தப் படிவம் 'புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கவும் / பான் டேட்டாவில் மாற்றம் / திருத்தம் செய்யவும்' ('Apply for New PAN Card / Change / Correction in PAN Data) என்று உங்களுக்குத் தேவையான மாற்றத்தை மேற்கொள்ள அனுமதிக்கிறது. நீங்கள் நிரப்பும் தகவலை வைத்து, உங்கள் பான் அட்டையில் இருக்கும் பிழைகள் திருத்தப்படும்.

PAN கார்டு ஆன்லைன் திருத்த முறை

PAN கார்டு ஆன்லைன் திருத்த முறை

அருகில் இருக்கும் பான் வசதி மையத்திற்குச் செல்ல உங்களிடம் போதிய நேரமில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், இருக்கவே இருக்கிறது ஆன்லைன் திருத்த முறை. உங்கள் பான் அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைன் மூலம் நீங்கள் திருத்தும் செய்து முடிக்க விரும்பினால், NSDL சேவையானonlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.htmlஇணையதளம் மூலம் செய்து முடிக்கலாம்.

Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!

டோல் ஃபிரீ எண் மூலம் கூட மாற்றங்களை செய்யலாமா?

டோல் ஃபிரீ எண் மூலம் கூட மாற்றங்களை செய்யலாமா?

அல்லது, UTIITS சேவையின் UTIITSL மூலம் myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp என்ற இணைய முகவரிக்குச் சென்று திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்த முறைகள் உங்களுக்கு வசதியாக இல்லை என்றால், டோல் ஃபிரீ எண்களுக்கு அழைப்பு விடுத்து உங்கள் திருத்தங்களைத் திருத்திக்கொள்ளலாம். நீங்கள் NSDL இன் 1800-180-1961 மற்றும் 020-27218080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இது தவிர, efilingwebmanager@incometax.gov.in மற்றும் tininfo@nsdl.co.in ஆகிய இந்த இரண்டு ஐடிகளுக்கு மெயில் செய்யலாம்.

PAN அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

PAN அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

இதேபோல், உங்கள் PAN அட்டையில் உள்ள புகைப்படத்தைக் கூட மாற்றம் செய்ய இப்போது அனுமதிக்கப்படுகிறது. இதையும் நீங்கள் ஆன்லைன் மூலம் செய்து முடிக்கலாம். இதைச் செய்வதற்கு, நீங்கள் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் (NSDL) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்வதன் மூலமோ அல்லது இந்த https://tin.tin.nsdl.com/pan/index.html இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலமாகவோ உங்கள் PAN புகைப்படத்தை மாற்றலாம்.

இந்த பிரிவை தேர்வு செய்து தகவலை உள்ளிடுங்கள்

இந்த பிரிவை தேர்வு செய்து தகவலை உள்ளிடுங்கள்

UTITSL போர்டல் வழியாக மாற்றங்களை மேற்கொள்ள https://www.pan.utiitsl.com/PAN/index.jsp என்ற இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள். தற்போதுள்ள PAN தரவில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் (Changes or corrections in existing PAN Data) என்பதை கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு, நீங்கள் category type வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தனிப்பட்ட விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். கோரப்பட்ட தகவலை நிரப்பவும், பின்னர் கேப்ட்சா குறியீட்டை வழங்குவதன் மூலம் சமர்ப்பிக்கவும்.

Photo Mismatch மற்றும் Signature Mismatch விருப்பம்.. சாய்ஸ் உங்களுடையது

Photo Mismatch மற்றும் Signature Mismatch விருப்பம்.. சாய்ஸ் உங்களுடையது

நீங்கள் இப்போது KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். Photo Mismatch மற்றும் Signature Mismatch என்பதற்கான விருப்பங்களை இங்கே நீங்கள் காண முடியும். உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். தகவல்களை மீண்டும் ஒருமுறை நிரப்பி Next என்பதைக் கிளிக் செய்யவும். அதைத் தொடர்ந்து, நீங்கள் அடையாளம், முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.

வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..

PAN புகைப்பட மாற்றத்திற்கான கட்டணம் எவ்வளவு?

PAN புகைப்பட மாற்றத்திற்கான கட்டணம் எவ்வளவு?

Declaration box கிளிக் செய்த பிறகு Submit பொத்தானைக் கிளிக் செய்யவும். மேலே உள்ள செயல்முறைகளை நீங்கள் முடித்த பிறகு, கட்டண முறைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு இந்தியாவிற்குள் இருக்கும் அட்டைதாரர்களுக்குப் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை மாற்ற ரூ. 101 (+GST) கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், இந்தியாவிற்கு வெளியே உள்ள அட்டைதாரர்களுக்கு ரூ. 1011 (+GST) என்ற கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறைகளைப் பின்பற்றி உங்கள் PAN அட்டையில் உள்ள திருத்தங்களைத் திருத்திக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How To Change PAN Card Mistakes and Photos Changes By Using Offline and Online Method

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X