கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!

|

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது. இப்போது சிறிய கடைகளில் கூட இந்த செயலிகளை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பொருட்களை வாங்க முடியும்.

மொபைல் ரீசார்ஜ்

மொபைல் ரீசார்ஜ்

மேலும் இந்த செயலிகள் மொபைல் ரீசார்ஜ்களின் தொந்தரவைக் குறைத்துள்ளன என்றுதான் கூறவேண்டும். அதாவது முன்பு மொபைல் பயனர்கள் தங்களுக்கு ரீசார்ஜ் செய்ய கடைக்குச் சென்று டாப்-அப் திட்டங்களை வாங்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பயனர்களுக்கு எளிதான ரீசார்ஜ் வசதியை வழங்கும் போன்பே, பேடிஎம், கூகுள் பே போன்ற பல செயலிகள்.

ரொம்ப கஷ்டம்., அடம்பிடிக்கும் எலான் மஸ்க்: ரொம்ப கஷ்டம்., அடம்பிடிக்கும் எலான் மஸ்க்: "சந்தேகமா இருக்க., இதை கொடுக்கலனா எனக்கு டுவிட்டரே வேண்டாம்"

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

குறிப்பாக பல இடங்களில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை இனிமேல் போக்குவரத்து துரையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. அதாவது தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் இ-டிக்கெட் வசதி பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் Google Pay, Phonepe, QR ஸ்கேனிங் போன்ற முறைகளில் பொதுமக்கள் பேருந்துகளில் டிக்கெட் வாங்கி பயன்பெறலாம். அதேபோல் கூகுள் பே
செயலியில் பல புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

10 வெவ்வேறு மொழிகளை ஆதரிக்கிறது

10 வெவ்வேறு மொழிகளை ஆதரிக்கிறது

அதாவது கூகுள் பே செயலி ஆனது தற்போது தமிழ், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி உட்பட மொத்தம் 10 வெவ்வேறு மொழிகளை ஆதரிக்கிறது. அதன்படி இப்போது கூகுள் பே செயலியை தமிழ் மொழியில் எப்படி பயன்படுத்துவது என்பதை சற்று விரிவாகப்
பார்ப்போம்.

போட்டிக்கு தயாரான மோட்டோ- இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ ஜி82 5ஜி: பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன்!போட்டிக்கு தயாரான மோட்டோ- இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ ஜி82 5ஜி: பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக உங்களது கூகுள் பே செயலியை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டும். சமீபத்திய புதுப்பிப்பு நிறுவப்பட்டதும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

வழிமுறை-2

வழிமுறை-2

இப்போது கூகுள் பே செயலியை திறந்து, திரையின் மேல் வலது மூலையில் இருக்கும் profile ஐகானைக் கிளிக் செய்யவும்.

தமிழக பேருந்துகளில் Gpay மூலம் டிக்கெட் எடுக்கலாமா? விரைவில் இ-டிக்கெட் & இலவச ஸ்மார்ட் கார்டு வசதி.!தமிழக பேருந்துகளில் Gpay மூலம் டிக்கெட் எடுக்கலாமா? விரைவில் இ-டிக்கெட் & இலவச ஸ்மார்ட் கார்டு வசதி.!

வழிமுறை-3

வழிமுறை-3

அடுத்து செட்டிங்ஸ் மெனுவிற்கு செல்லவும்.

மேக்புக் ஏர் (2022), 13-இன்ச் மேக்புக் ப்ரோ (2022) சாதனங்கள் அறிமுகம்! அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலை.!மேக்புக் ஏர் (2022), 13-இன்ச் மேக்புக் ப்ரோ (2022) சாதனங்கள் அறிமுகம்! அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலை.!

வழிமுறை-4

வழிமுறை-4

அதன்பின்பு Personal info என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..

 வழமுறை-5

வழமுறை-5

Personal info என்ற விருப்பத்தை கிளிக் செய்தவுடன் மொழி விருப்பத்தைப் பார்க்க முடியும். இப்போது உங்களுக்கு பிடித்ததமிழ் மொழியை தேர்வு செய்து, பயன்படுத்தவும்.

கேஷ்பேக் சலுகைகள்

கேஷ்பேக் சலுகைகள்

மேலும் கூகுள் பே போன்ற செயலிகள் பயனருக்கு பணம் அனுப்பவும் பெறவும், மொபைல், டி.டி.எச் அல்லது பிராட்பேண்ட் இணைப்புகளை எந்த வெளிப்புற தொந்தரவும் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. அதேபோல் இதுபோன்ற செயலிகளில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போது, கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைப்பதால், தற்போது அதிகளவில் மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

Best Mobiles in India

English summary
How to change Google Pay language to tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X