வாட்ஸ்அப் செயலி குறுந்தகவல்களில் ஃபான்ட்களை மாற்றுவது எப்படி?
ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுந்தகவல் செயலிகளில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. சமயங்களில் வாட்ஸ்அப் உரையாடல்களில் சில எழுத்துக்கள் போல்டு, இட்டாலிக் மற்றும் ஸ்டிரைக்த்ரூ போன்ற அம்சங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் எதிர்கொண்டிருக்கலாம்.

டெக்ஸ்ட் ஃபார்மேட்
இதுபோன்ற குறுந்தகவல்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும். இந்த தொகுப்பில் இதுபோன்ற ஃபார்மேட்டெட் டெக்ஸ்ட் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.
வாட்ஸ்அப் குறுந்தகவல்களில் டெக்ஸ்ட் ஃபார்மேட் அம்சத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்:
முதலில் இவ்வாறு செய்ய தனியாக எந்த செயலியையும் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பின்வரும் வழிமுறைகளை சரியாக பின்பற்றினாலே வாட்ஸ்அப் மெசேஜ்களில் டெக்ஸ்ட் ஃபார்மேட்டிங் செய்யலாம்.

வழிமுறை 1: முதலில் வாட்ஸ்அப் செயலியை திறந்து சாட் பாக்சை திறக்க வேண்டும்.

வழிமுறை 2: நண்பருக்கு அனுப்ப வேண்டிய குறுந்தகவலை டைப் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: இனி வார்த்தைகளில் (*) *Hello* பயன்படுத்த வேண்டும்.

இனி ஃபான்ட்களில் இட்டாலிக்ஸ் பயன்படுத்த (_) _Hello_ பயன்படுத்த வேண்டும்.

வழிமுறை 5: ஃபான்ட்-ஐ மாற்ற () பயன்படுத்த வேண்டும்.
இந்த வழிமுறைகள் கடினமாக இருப்பின், நீங்கள் அனுப்ப வேண்டிய குறுந்தகவலை டைப் செய்து ஃபார்மேட் செய்ய வேண்டிய வார்த்தைகளை அழுத்திப்பிடித்து ஃபான்ட் தோற்றத்தை மாற்ற முடியும். ஃபான்ட் மாறியதும் அதனை அனுப்பலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கொண்டு வாட்ஸ்அப் குறுந்தகவல்களில் ஃபான்ட்களை மாற்றி அவற்றை வித்தியாசமாக அனுப்ப முடியும்


Click it and Unblock the Notifications








