ஏர்டெல் பிராட்பேண்ட் யூஸ் பண்றீங்களா? அப்போ முதல்ல இத படிங்க! இந்த ' பெரிய ' சிக்கலுக்கு இது கூட காரணமா?

|

இந்தியாவில் தற்பொழுது பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் பல்வேறு நோக்கங்களுக்காக அதிவேக இணையத்தைப் பயன்படுத்த பிராட்பேண்ட் இணைப்புகளை இப்போது பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் கூட, சில நேரங்களில் இணைய வேகம் என்பது குறைந்துவிடுகிறது. இதனால் பல புகார்களும் நிறுவனத்திற்கு வந்துகொண்டே தான் இருக்கிறது. குறைந்த இணைய வேகத்திற்கான முக்கிய காரணமே, உங்கள் இணைப்பில் உங்களுக்கே தெரியாமல் வேறு சில விசித்திரமான இணைப்புகள் இருப்பதே ஆகும்.

உங்கள் பிராட்பேண்ட் இணைப்பு ஸ்லோவாக இருக்கிறதா?

உங்கள் பிராட்பேண்ட் இணைப்பு ஸ்லோவாக இருக்கிறதா?

இதை சரி செய்ய, நீங்கள் உங்களின் பிராட்பேண்ட் சேவைக்கான பாஸ்வோர்டை டிகோட் செய்து, எளிமையான முறையில் அந்நியர்கள் யாரும் உங்கள் இணைப்பில் சேராமல் தடுக்கலாம். இது மட்டுமல்லாமல், ஹேக்கர்கள் உங்கள் சாதனங்களை ஹேக் செய்து, உங்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடலாம். இதை சமாளிக்க அடிக்கடி உங்களின் பாஸ்வோர்டுகளை மாற்றுவது நல்லது. ஏர்டெல்லின் பிராட்பேண்ட் வைஃபை பாஸ்வோர்டை மாற்ற எளிய வழிமுறையை இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கலாம்.

ஏர்டெல் வைஃபை பாஸ்வோர்டை எப்படி மாற்றுவது?

ஏர்டெல் வைஃபை பாஸ்வோர்டை எப்படி மாற்றுவது?

நீங்களும் ஒரு ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் என்றால் இந்த பதிவு நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும். சரி, இப்போது எப்படி ஏர்டெல் வைஃபை பாஸ்வோர்டை மாற்றுவது என்று தெரிந்துகொள்ளலாம். உங்கள் ஏர்டெல் வைஃபை பாஸ்வோர்டை மாற்ற, நீங்கள் உங்களின் Android அல்லது iOS சாதனத்தில் ஏர்டெல் ஆப்ஸை ஓபன் செய்ய வேண்டும். ஹோம் பேஜ் பக்கத்தின் மேலே அமைந்துள்ள பிராட்பேண்ட் விவரங்களை கிளிக் செய்யவும். manage services என்ற பட்டனை கிளிக் செய்து, change Wi-Fi password ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

4கே ஆதரவோடு ஒன்னு இல்ல மூன்று மாடல் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்: 4கே ஆதரவோடு ஒன்னு இல்ல மூன்று மாடல் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்: "ரெட்மி"னு சொல்லியாச்சு விலை கேட்கவா வேணும்!

வைஃபை இணைப்பின் பெயரை கூட மாற்றலாமா?

வைஃபை இணைப்பின் பெயரை கூட மாற்றலாமா?

நீங்கள் இந்த விருப்பத்தை கிளிக் செய்தவுடன், புதிய பாஸ்வோர்டை அமைக்க நீங்கள் உங்கள் தகவலை உள்ளிடவும். உங்கள் வைஃபை இணைப்பின் பெயரையும் இப்படி நீங்கள் மாற்றலாம். இந்த செயல்முறையை முடிக்க submit பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் பாஸ்வோர்டை மாற்றியதும், உங்கள் பிராட்பேண்ட் சேவையுடன் இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களும் துண்டிக்கப்படலாம். சாதனங்கள் துண்டிக்கப்பட்டுவிட்டால், புதிய பாஸ்வோர்டை உள்ளிட்டு மீண்டும் இணைக்கவும்.

ஏர்டெல் பிராட்பேண்ட் டேட்டா இருப்பு சரிபார்க்க என்ன செய்ய வேண்டும்?

ஏர்டெல் பிராட்பேண்ட் டேட்டா இருப்பு சரிபார்க்க என்ன செய்ய வேண்டும்?
பிராட்பேண்ட் டேட்டா பேலன்ஸ் பற்றிய தகவலை வழங்க ஏர்டெல் அதன் பயனர்களுக்கு ஒரு தனி டேப்-ஐ வழங்குகிறது. ஏர்டெல் பிராட்பேண்ட் டேட்டா இருப்பை சரிபார்க்க, Android அல்லது iOS இல் இருந்து அதிகாரப்பூர்வ ஏர்டெல் ஆப்ஸை ஓபன் செய்ய வேண்டும். ஹோம் பேஜ் பக்கத்தின் மேல் பக்கத்திற்குச் சென்று பிராட்பேண்ட் விவரங்களை கிளிக் செய்யவும். புதிய பிராட்பேண்ட் பக்கம் திறந்ததும், டேட்டா பேலன்ஸ் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

வெறும் ரூ .17,999 விலையில் குரோமா ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் LED டிவிகள் விற்பனை.. எங்கே தெரியுமா?வெறும் ரூ .17,999 விலையில் குரோமா ஃபயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் LED டிவிகள் விற்பனை.. எங்கே தெரியுமா?

இதை மட்டும் செய்யாதீர்கள்

இதை மட்டும் செய்யாதீர்கள்

இந்த விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்தவுடன், டேட்டா பிளவுபடுத்தல் தலைப்பின் கீழ் தரவின் முழுமையான விவரங்களைக் காண்பீர்கள். உங்கள் ஏர்டெல் வைஃபை இணைப்பு தொடர்பான வேறு ஏதேனும் முக்கியமான விவரங்களை நீங்கள் அறிய விரும்பினால், ஏர்டெல் பயன்பாட்டில் கிடைக்கும் வெவ்வேறு விருப்பங்களை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் பாஸ்வோர்டை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.இதை மட்டும் ஒருபோதும் செய்யாதீர்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
How to Change Airtel Broadband Password On Your Android or iOS Device : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X