அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் ஆதார் முகவரியை மாற்ற முடியுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

|

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை (Aadhaar) முக்கியமான அடையாள அட்டையாக இருக்கிறது. ஆதார் மூலம், வீட்டிலிருந்தபடியே அரசின் பல திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளப் பொதுமக்கள் இப்போது அனுமதிக்கப்படுகிறார்கள். பல நேரங்களில் வேலை காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தினாலோ நாம் வெளியூர்களில் குடியேற வேண்டியதுள்ளது. இதனால், உங்கள் ஆதார் முகவரியில் சில மாற்றங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டியதுள்ளது.

இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கிறதா?

இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கிறதா?

இப்படி சூழ்நிலையில் நம்முடைய ஆதார் முகவரியை எப்படி மாற்றுவது என்பது தான் பலரின் சந்தேகமாகவுள்ளது? குறிப்பாக அட்ரஸ் ப்ரூப் இல்லாமல், ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற முடியுமா என்பது தான் சந்தேகமாக இருக்கிறது. இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கிறதா? வீடுகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? அப்போ, இந்த டிப்ஸை கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

அட்ரஸ் ப்ரூப் ஆதாரம் இல்லாமல் ஆதாரில் முகவரியை மாற்றலாமா?

அட்ரஸ் ப்ரூப் ஆதாரம் இல்லாமல் ஆதாரில் முகவரியை மாற்றலாமா?

இத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆதாரில் உங்கள் முகவரியை எப்படி எந்தவித அட்ரஸ் ப்ரூப் ஆவணங்களும் இல்லாமல் அப்டேட் செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகிறோம். திடீரென வீடுகளை மாற்றம் செய்யும் போது, அட்ரஸ் ப்ரூப் ஆதாரம் இல்லாமல் ஆதாரில் உள்ள உங்கள் முகவரியை புதுப்பிக்க ஒரு வழி இருக்கிறது என்பதே இன்னும் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. சரி, இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?

ஆதாரில் உங்கள் முகவரியை எவ்வாறு அப்டேட் செய்வது?

ஆதாரில் உங்கள் முகவரியை எவ்வாறு அப்டேட் செய்வது?

நீங்கள் சமீபத்தில் உங்கள் வீட்டை மாற்றியிருந்தால் அல்லது உங்களிடம் குடியிருப்பு ஆதாரம் இல்லை என்றால், நீங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. ஆதார ஆவணங்கள் இல்லாமல் உங்கள் ஆதார் முகவரியைப் புதுப்பிக்க இப்போது ஒரு வழி உள்ளது. ஆதாரில் உள்ள முகவரியைப் புதுப்பிக்க, உங்களுக்கு 'Aadhaar Card Verifier' என்ற ஒரு அம்சம் தேவைப்படும். இதன் மூலம் உங்கள் ஆதார் முகவரியை நீங்கள் எளிதாக அப்டேட் செய்யலாம்.

UIDAI ஆன்லைன் பக்கத்திற்கு செல்லுங்கள்

UIDAI ஆன்லைன் பக்கத்திற்கு செல்லுங்கள்

'Aadhaar Card Verifier' மூலம் முகவரியைப் புதுப்பிக்க, முதலில் அட்ரஸ் வேலிடேஷன் லெட்டருக்கு (Address Validation Letter) விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, யுஐடிஏஐ (UIDAI) இணையதளத்திற்குச் சென்று, ஆதார் அப்டேட் பிரிவிலிருந்து 'Request Aadhaar Validation Letter' என்பதற்குச் சென்று சரிபார்ப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு, உங்கள் டிஸ்பிளேவில் செல்ப் சர்வீஸ் அப்டேட் போர்ட் (Self Service Update Port - SSUP) என்ற விருப்பம் காண்பிக்கப்படும்.

SMS மூலம் அனுப்பப்படும் OTP விபரங்களை சரியாக உள்ளிடுங்கள்

SMS மூலம் அனுப்பப்படும் OTP விபரங்களை சரியாக உள்ளிடுங்கள்

இங்கே உங்கள் ஆதார் அட்டை எண் விபரங்களைச் சரியாக உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் 'Aadhaar Card Verifier' இல் காட்டப்பட்ட ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும். ஆதார் கார்டு வெரிஃபையர் மூலம் உங்கள் தகவல் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும். SMS இல் உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் OTP அனுப்பப்படும். இந்த OTP மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு Verify பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

Windows 11 இல் பைல் & போல்டர்களை எப்படி பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்வது? ஈஸி டிப்ஸ்!Windows 11 இல் பைல் & போல்டர்களை எப்படி பாஸ்வோர்ட் மூலம் லாக் செய்வது? ஈஸி டிப்ஸ்!

உங்களுக்கு அனுப்பப்படும் Secret Code ரொம்ப முக்கியம்

உங்களுக்கு அனுப்பப்படும் Secret Code ரொம்ப முக்கியம்

சரிபார்ப்பு முடிந்ததும், சர்வீஸ் ரெக்வஸ்ட் நம்பர் (Service Request Number - SRN) SMS மூலம் உங்களுக்கு அனுப்பப்படும். இதற்குப் பிறகு, நீங்கள் SRN மூலம் உள்நுழைந்து, உங்கள் புதிய முகவரியை வெரிஃபை செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, ஆதார் அட்டை சரிபார்ப்பவருக்கு 'Address Validation Letter' மற்றும் 'Secret Code' அனுப்பப்படும். இதற்குப் பிறகு நீங்கள் ஆதார் அப்டேட் என்ற பகுதிக்குச் சென்று, Secret Code வழியாக Update Address செல்ல வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

இங்கே உங்களுடைய சீக்ரெட் கோட் விபரங்களை உள்ளிட்டவுடன், உங்கள் புதிய முகவரி உங்கள் ஆதார் அட்டையில் அப்டேட் செய்யப்படும். இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, நீங்கள் அட்ரஸ் அப்டேட் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த முறையை பின்பற்றி, உங்கள் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே உங்கள் ஆதாரை புதுப்பிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது. ஆகையால், தேவையை அறிந்து பார்த்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How To Change Aadhaar Address Even Without Any Address Proof Online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X