பொதுதேர்தல்: வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? வாக்களிக்க இது போதும்!
மேலும் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் வாக்காளர் அடையாள அட்டை இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

நடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிகிறது என்பதால்,அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில்,பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நாள்தோறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார்.

வாக்காளர் அடையாள அட்டை
மேலும் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் வாக்காளர் அடையாள அட்டை இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளது, ஆனால் அட்டை இல்லை என்றால் பின் வரும்
ஆவணங்களில் ஒன்றை எடுத்து சென்றும் வாக்களிக்காலம்.

#1
பான்கார்டு

#2
ஆதார் கார்டு

#3
ஓட்டுநர் உரிமம்

#4
பாஸ்போர்ட்

#5
பொதுத்துறை வங்கி கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு பாஸ்புக்

#6
பென்ஷன் புக்

#7
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கிய ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு

#8
மத்திய/மாநில அரசு சேவை ஐடி கார்டு

#9
ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வேலை கார்டு


Click it and Unblock the Notifications