Home
How to

கூகுள் பே சேவையை பயன்படுத்தி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

இதனால் பயனர்கள் ரெயில் நேரம் மற்றும் விவரங்களை தேடி, முன்பதிவு அல்லது டிக்கெட்களை ரத்து செய்வது போன்றவற்றை கூகுள் பே செயலியில் இருந்து நேரடியாக மேற்கொள்ளலாம்.

கூகுளின் யுபிஐ பேமெண்ட் செயலியான கூகுள் பே (முன்னதாக டெஸ் செயலி) கொண்டு பணம் அனுப்பவது, பெறுவது, கால் டாக்சி கட்டணம் செலுத்துவது மற்றும் பல்வேறு பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஐஆர்சிடிசியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. அதன் படி கூகுள் பே சேவையில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

கூகுள் பே சேவையை பயன்படுத்தி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

இதனால் பயனர்கள் ரெயில் நேரம் மற்றும் விவரங்களை தேடி, முன்பதிவு அல்லது டிக்கெட்களை ரத்து செய்வது போன்றவற்றை கூகுள் பே செயலியில் இருந்து நேரடியாக மேற்கொள்ளலாம். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

இதற்கான வழிமுறைகளை துவங்கும் முன் உங்களிடம் ஐஆர்சிடிசி கணக்கு கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் டிக்கெட்களை அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முடியும்.

கூகுள் பே சேவையை பயன்படுத்தி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

அவசியமானவை:

அப்டேட் செய்யப்பட்ட கூகுள் பே செயலி

ஸ்மார்ட்போனில் கூகுள் பே கான்ஃபிகர் செய்யப்பட்டிருக்க வேண்டும்

ஸ்மார்ட்போனில் கூகுள் பே செயலியை திறந்து டிரெயின்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இது செயலியின் பிஸ்னஸ் பகுதியில் காணப்படும்.

இனி Book a Train Ticket ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அடுத்து பயனர்கள் தங்களது பயண விவரங்களுடன், தேதியையும் சரியாக பதிவிட வேண்டும்.

சர்ச் பட்டனை க்ளிக் செய்து குறிப்பிட்ட பாதையில் இருக்கும் அனைத்து ரெயில்களையும் தேடலாம்.

நீங்கள் பயணிக்க விரும்பும் ரெயிலை தேர்வு செய்து டிக்கெட் முன்பதிவு பட்டியலில் இருக்கும் Check Availability ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இனி பயணிக்க விரும்பும் வகுப்பை தேர்வு செய்து Select பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

கூகுள் பே சேவையை பயன்படுத்தி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று பயனர்கள் தங்களது ஐஆர்சிடிசி யூசர் ஐடி மற்றும் பயணம் செய்வோரின் விவரங்களை சரியாக பதிவிட வேண்டும்.

பயனர்கள் கூடுதல் பயணிகளை சேர்க்க Add Passeneger ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அடுத்து பயனர் தங்களது கான்டாக்ட் விவரங்களை பதிவிட்டு Continue பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து மீண்டும் Continue பட்டனை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம். ஒருவேளை மேலே கொடுத்த விவரங்களை மாற்ற விரும்பினால் Edit Trip பட்டனை க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

கூகுள் பே சேவையை பயன்படுத்தி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

பணம் செலுத்த முற்படும் போது செயலி பயனர்களை ஐஆர்சிடிசி வலைதளத்திற்கு கொண்டு செல்லும். இங்கு பயனர்கள் தங்களது ஐஆர்சிடிசி கடவுச்சொல் மற்றும் CAPTCHA விவரங்களை டைப் செய்து Submit பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் டிக்கெட் முன்பதிவு உறுதி செய்யப்படும்.

பயனர்கள் இனி சாதனத்தில் தெரியும் டிக்கெட் ஆப்ஷனை க்ளிக் செய்து டவுன்லோடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to book train tickets using Google Pay : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X