Paytm மூலம் எப்படி ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வது? சில நொடியில் தட்கல் டிக்கெட் ரிசர்வேஷன்..

|

Paytm நிறுவனம் தனது மொபைல் ஆப்ஸ் பயனர்களுக்கு இப்போது ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கான வசதியை வழங்குகிறது. IRCTC இன் இணையதளத்தின் வழியில் இது வரி தட்கல் டிக்கெட் புக்கிங் செய்து வந்த வாடிக்கையாளர்கள் இனி மிக எளிமையாக Paytm ஆப்ஸ் மூலம் உங்கள் பயணத்திற்குத் தேவையான டிக்கெட்டை சில நொடிகளில் புக் செய்துகொள்ளலாம். இதை எப்படிச் செய்வது என்று இந்த பதிவின் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

Paytm ஆப்ஸ் மூலம் தட்கல் டிக்கெட்

Paytm ஆப்ஸ் மூலம் தட்கல் டிக்கெட்

நம்மில் பலர் இதுவரை Paytm ஆப்ஸை மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ், கரண்ட் பில், தண்ணீர் பில், ஆன்லைன் பணப் பரிமாற்றம், மளிகை சாமான் வாங்குவது, சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங், பஸ் டிக்கெட் புக்கிங் போன்ற பல விதமான காரியங்களுக்காக இந்த ஆப்ஸை பயன்படுத்தியிருப்போம். இனி நீங்கள் ரயில் தட்கல் டிக்கெட்டையும் Paytm ஆப்ஸ் மூலம் செய்துகொள்ளலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Paytm அக்கௌன்ட் மட்டும் போதும்

Paytm அக்கௌன்ட் மட்டும் போதும்

இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம், Paytm மூலமாக நீங்கள் ஆன்லைனில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு உங்களின் IRCTC கணக்கு விபரங்கள் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களின் Paytm அக்கௌன்ட் மூலமாக நீங்கள் உங்களின் ரயில் தட்கல் டிக்கெட்டை உடனடியாக சில வழிமுறைகளை மட்டும் பின்பற்றி நொடியில் செய்துமுடிக்கலாம். அதை எப்படி செய்வது என்று படிப்படியாகப் பார்க்கலாம்.

BSNL ரூ.18 திட்டம்: 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் & SMS நன்மை.. எத்தனை நாட்களுக்குத் தெரியுமா?BSNL ரூ.18 திட்டம்: 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் & SMS நன்மை.. எத்தனை நாட்களுக்குத் தெரியுமா?

Paytm மூலமாக எப்படி ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வது?

Paytm மூலமாக எப்படி ரயில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்வது?

  • முதலில் உங்களின் Paytm ஆப்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்யுங்கள்.
  • அதில் உள்ள Trains என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
  • இப்போது நீங்கள் பயணிக்க விரும்பும் தேதியை கிளிக் செய்யவும்.
  • தட்கல் விருப்பத்தை கிளிக்

    தட்கல் விருப்பத்தை கிளிக்

    • அடுத்தபடியாக நீங்கள் புறப்படும் மற்றும் செல்லவேண்டிய ரயில் நிலையத்தின் பெயரை உள்ளிடவும்.
    • நீங்கள் செல்ல விரும்பும் ரயிலைத் தேர்வு செய்யுங்கள்.
    • இப்போது, ஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள தட்கல் விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
    • Jio, Airtel, மற்றும் Vodafone Idea-வில் ரூ. 200க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்..Jio, Airtel, மற்றும் Vodafone Idea-வில் ரூ. 200க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்..

      டிஜிட்டல் முறை கட்டணம்

      டிஜிட்டல் முறை கட்டணம்

      • Book Tickets என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
      • ரயிலை பயணிக்கும் பயணிகளின் பெயர், வயது போன்ற முழு விபரத்தையும் உள்ளிடவும்.
      • உங்கள் தட்கல் டிக்கெட்டிற்கான கட்டணம் என்ன என்பதைப் பார்த்து, அதை டிஜிட்டல் முறையில் செலுத்துங்கள்.
      • உங்கள் டிக்கெட் விரைவில் முன்பதிவு செய்யப்படும்.
      • முக்கிய குறிப்பு: இதை மட்டும் மறக்க வேண்டாம்

        முக்கிய குறிப்பு: இதை மட்டும் மறக்க வேண்டாம்

        இந்த முறைப்படி நீங்கள் தேவைக்கு ஏற்றார் போல் ஷேர் கார், ஸ்லீப்பர், மூன்றாம் AC அல்லது இரண்டாவது ஏசி, ஏசி சிங்கிள் டயர் போன்ற எந்தவிதமான ரயில் வகை டிக்கெட்டுகளையும் நீங்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். குறிப்பாக, தட்கல் டிக்கெட்டு முன்பதிவு செய்வதற்கான நேரம் பற்றிய விபரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

        வாட்ஸ்அப்-ஐ பின்னுக்கு தள்ளி டெலிகிராம் முதலிடம்.. ஜனவரியில் இந்தியாவில் மட்டும் இவ்வளவு டவுன்லோடா?வாட்ஸ்அப்-ஐ பின்னுக்கு தள்ளி டெலிகிராம் முதலிடம்.. ஜனவரியில் இந்தியாவில் மட்டும் இவ்வளவு டவுன்லோடா?

        காலை 10 மணி முதல் தட்கல் புக்கிங்

        காலை 10 மணி முதல் தட்கல் புக்கிங்

        AC வகுப்புக்குக் காலை 10 மணி முதல் மற்றும் AC அல்லாத ஸ்லீப்பர் மற்றும் நார்மல் ரிசர்வேஷன் டிக்கெட்களுக்கான முன்பதிவு காலை 11 மணி முதல் துவங்குகிறது. மேலும், தட்கல் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பின்னர் உங்களின் டிக்கெட் ரத்துசெய்யப்பட்டால், நிறுவனம் பணத்தைத் திரும்ப தராது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அடுத்த முறை நீங்கள் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய விரும்பினால், இந்த முறையைப் பின்பற்றி எளிமையாக நொடியில் தட்கல் டிக்கெட் புக் செய்து பாருங்கள்.

Best Mobiles in India

English summary
How to Book Train Tatkal Tickets using Paytm Step by Step Detail in Tamil : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X