எல்பிஜி கேஸ் இணைப்பிற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

|

புதிதாக எல்பிஜி கேஸ் இணைப்பு பெறுவது சிக்கல் நிறைந்த காரியமாக இருக்கிறது. இதற்கு நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள எல்பிஜி விற்பனையாளரை அணுகி தேவையான தரவுகளை சமர்பித்து பணம் செலுத்த வேண்டும். டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே வேகமாக மாறிவருகிறது.

ஆன்லைனிலேயே முன்பதிவு செய்ய முடியும்

ஆன்லைனிலேயே முன்பதிவு செய்ய முடியும்

அந்த வகையில் முன்னணி கேஸ் விற்பனையாளர்களான பாரத் கேஸ், இன்டேன் கேஸ் மற்றும் ஹெச்.பி. கேஸ் போன்றவே தங்களது சேவைகளை ஆன்லைனில் துவங்கியுள்ளன. இனி வாடிக்கையாளர்கள் எல்பிஜி கேஸ் இணைப்பிற்கு ஆன்லைனிலேயே முன்பதிவு செய்ய முடியும். இதுதவிர ஏற்கனவே கேஸ் பயன்படுத்துவோர் புதிய சிலிண்டர்களை பெற ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

#1

நேரடியாக விற்பனையாளரிடம் செல்லாமல், ஆன்லைனிலேயே எல்பிஜி கேஸ் வாங்க முன்பதிவு செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.


1 - முதலில் நீங்கள் இணைப்பு பெற விரும்பும் எல்பிஜி கேஸ் விற்பனையாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்

ஹெச்.பி. கேஸ்: https://myhpgas.in/myHPGas/NewConsumerRegistration.aspx

பாரத் கேஸ்: https://my.ebharatgas.com/LPGServices/ApplyNewConnection

இன்டேன் கேஸ்: https://cx.indianoil.in/webcenter/portal/Customer?_afrRedirect=13915242512181853

#2

2 - இனி அருகாமையில் உள்ள விற்பனையாளரை அதற்கான ஆப்ஷன் மூலம் தேட வேண்டும்

3 - அடுத்து விற்பனையாளர்கள் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் (அருகாமையில் இருப்பவரை தேர்வு செய்யலாம்)

திரையில் தோன்றும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இங்கு தனிப்பட்ட விவரங்கள், முகவரி, மாணியம் பெற பரிமாற்ற பகுதி, சிலிண்டர் வகை மற்றும் சிலிண்டர் அளவு உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.

குறிப்பு: இந்த படிவங்கள் விற்பனையாளரை பொருத்து வேறுப்படும்

மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்!மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்!

#3

4 - இனி அடையாளச் சான்று மற்றும் இருப்பட சான்றுக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்


5 - தேவையான ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்து பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தையும் அப்லோடு செய்ய வேண்டும்

#4

6 - இனி விதிமுறைகளை ஒப்புக் கொள்ளக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்து சப்மிட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்


7 - அடுத்து கட்டணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். இங்கு நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றை தேர்வு செய்யலாம். இத்துடன் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனையும் தேர்வு செய்யலாம்.

மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

#5

8 - இவ்வாறு செய்ததும் உங்களுக்கான முன்பதிவு குறியீட்டு எண் வழங்கப்படும். இதை கொண்டு முன்பதிவு விவரங்களை டிராக் செய்து டெலிவரி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to book LPG gas connection online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X