Gmail Tips: தேவையில்லாத மெயில் வந்து குவியுதா?- மொத்தமா ஸ்டாப் செய்வது எப்படி?

|

Gmail இல் நிறைய ஸ்பேம் மெயில்கள் வரும் காரணத்தால் எந்த மெயில் முக்கியமான மெயில் என்பதை கண்டறிவது கடினமாகிறது. இதற்கான தீர்வு என்ன என்பதை பார்க்கலாம்.

உகந்த தளமாக திகழும் ஜிமெயில்

உகந்த தளமாக திகழும் ஜிமெயில்

வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் என பல பயன்பாடுகள் பயன்படுத்தி கோப்புகளை பகிர்ந்தாலும் அது மெயிலில் அனுப்புவது அளவிற்கான தன்மையை கொடுக்காது.

வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்ற தளங்கள் சேட்டிங் பயன்பாட்டு அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்துக்கு உகந்த தளமாக ஜிமெயில் திகழ்கிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.

தொடர்ச்சியாக வரும் தேவையில்லாத மெயில்கள்

தொடர்ச்சியாக வரும் தேவையில்லாத மெயில்கள்

ஆன்லைன் டெலிவரி, உணவு ஆர்டர் உள்ளிட்ட எந்த பயன்பாட்டுக்குள் நுழைந்தாலும் அதில் பெயர், மொபைல் எண், மெயில் ஐடி பகிர்வது என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அப்படி உள்ளே நுழையும் பயன்பாட்டை பயன்படுத்தி அதை டெலிட் செய்தாலும், அதில் இருந்து வரும் மெயில்கள் என்பது நிற்காது.

மெயில்களை எப்படி நிறுத்துவது?

மெயில்களை எப்படி நிறுத்துவது?

இந்த தளத்தை எப்போது பயன்படுத்தினோம் என்பதே தெரியாது, ஆனால் அந்த தளத்தில் இருந்து வரும் மெயில்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கும். இதை எப்படி நிறுத்துவது என்று குழப்பம் வரலாம்.

இதுபோன்ற தேவையற்ற மெயில்களை நிறுத்துவதற்கு எளிய வழிமுறைகள் இருக்கிறது. இதை முழுமையாக செய்வதற்கு சற்று நேரம் எடுக்கலாம் அவ்வளவு தான். வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம் வாங்க.

ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் மெயில்கள்

ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் மெயில்கள்

மெயில் இன்பாக்ஸ் இல் இருந்து ஸ்பேமை தடுப்பதற்கான எளிய வழிமுறைகள் இருக்கிறது.

இதுமட்டுமில்லை ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் மெயில்களும் ஜிமெயிலில் வருகிறது. எனவே பாதுகாப்பாக இருப்பதற்கும் இது அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

கணினி பயனர்களுக்கு

கணினி பயனர்களுக்கு

ஜிமெயில் ஸ்பேம் மெயில்களை தடுப்பது எப்படி?- கணினி பயனர்களுக்கு

Step 1: உங்கள் லேப்டாப் அல்லது கணினியில் ஜிமெயில் கணக்கைத் திறக்கவும்.

Step 2: நீங்கள் எந்த கணக்கு மெயில்லை தடுக்க விரும்புகிறீர்களோ அந்த மெயிலை ஓபன் செய்யவும்.

Step 3: மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை (three dots) கிளிக் செய்யவும்.

Step 4: இரண்டு வெவ்வேறு மூன்று புள்ளிகள் காட்டப்படும், மேலே உள்ளதை கிளிக் செய்ய வேண்டாம். கீழே மெயில் ஐடி அருகில் மூன்று புள்ளிகள் காட்டப்படும். அதை கிளிக் செய்யவும்.

Step 5: அதில் ப்ளாக் (Block) என்ற விருப்பம் காட்டப்படும். அதை கிளிக் செய்து கொள்ளவும். அவ்வளவுதான்.

ஒவ்வொரு மெயில் ஐடிக்குள் சென்று இதே போன்ற முறையை செய்ய வேண்டும். இதை செய்து விட்டால் அந்த தளத்தில் இருந்து எந்தவொரு மெயில் ஐடியும் வராது.

ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு

ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு

ஆண்ட்ராய்டு ஆப்ஸ் மூலம் ஜிமெயிலில் ஸ்பேம் மெயிலை தடுப்பது எப்படி?

Step 1: ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட்டில் ஜிமெயில் பயன்பாட்டைத் திறக்கவும்.

Step 2: நீங்கள் தடுக்க விரும்பும் அனுப்புநரின் மெயிலை ஓபன் செய்யவும்.

Step 3: மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.

Step 4: இதில் காட்டப்படும் ப்ளாக் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

iOS பயனர்களுக்கான வழிமுறைகள்

iOS பயனர்களுக்கான வழிமுறைகள்

iOS ஆப்ஸ் மூலம் ஜிமெயிலில் ஸ்பேம் மெயிலை தடுப்பது எப்படி?

Step 1: உங்கள் மொபைலில் Gmail பயன்பாட்டைத் திறக்கவும்.

Step 2: அதேபோல் நீங்கள் தடுக்க விரும்பும் அனுப்புநரின் மெயிலை ஓபன் செய்யவும்.

Step 3: மேல் வலதுபுறத்தில், மேலும் (More) என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

Step 4: இதில் Report Spam என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

பயன்பாட்டை பாதுகாப்பாக கையாள முடியும்

பயன்பாட்டை பாதுகாப்பாக கையாள முடியும்

இப்படி செய்வதன் மூலம் ஜிமெயிலில் ஸ்பேம் மற்றும் தேவையில்லாத மெயில்கள் வருவதை தடுக்க முடியும். அதோடு இதன்மூலம் ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் தாக்குதலில் இருந்து மெயில்களை பாதுகாப்பாக கையாள முடியும் என்பதை கவனத்தில் கொள்க.

Best Mobiles in India

English summary
How to block Spam Emails in Gmail?- Simple Steps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X