தொந்தரவா இருக்கா? தேவையில்லாத Incoming Callகளை ப்ளாக் செய்வது எப்படி?

|

வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது பிற முக்கிய பணிகளில் இருப்போம் போது ஒரு அழைப்பு வரும். சைலண்டில் போடுவோம் மீண்டும் அழைப்பு வரும்.. சரி ஏதோ முக்கியமான அழைப்பு போல என்று நினைத்து அனைத்து பணிகளையும் நிறுத்திவிட்டு போனை எடுத்து பேசுவோம்.

மறுமுணையில் இருந்து "சாரு உங்க கார்ட் நம்பர் சொல்லுங்கோ எக்ஸ்பரி ஆக போகுது என்ற ஒரு நபர் பேசுவார் அல்லது வேறு டெலி காலிங் அழைப்பாக இருக்கும்". இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும். இந்த தொந்தரவுகளில் இருந்து விடுபட சில வழிகளை பார்க்கலாம்.

நோட்டிபிகேஷன் பிரச்சனைகள்

நோட்டிபிகேஷன் பிரச்சனைகள்

ஆண்ட்ராய்ட் போன் பயனர்கள் பெரும்பாலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நோட்டிபிகேஷன் தான்.

மெசேஜ், மெயில், சமூகவலைதள கணக்கு தகவல், செயலி அறிவிப்புகள் என பலவகையில் நோட்டிபிகேஷன்கள் வரும்.

இதை அனைத்தும் முடக்குவதற்கான வழிகள் இருக்கிறது. அதேசமயத்தில் உங்கள் போனில் வரும் அனைத்து அழைப்புகளையும் உடனடியாக முடக்குவது எப்படி என்பது குறித்தும் பார்க்கலாம்.

Do Not Disturb மோட்

Do Not Disturb மோட்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் இந்த அம்சம் கிடைக்கிறது.

அதாவது 2015 ஆம் ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ ஓஎஸ் இல் இருந்தே Do Not Disturb mode கிடைக்கிறது.

உங்கள் மொபைலில் தொடர்ந்து வரும் அறிவிப்புகளை நீங்கள் விரும்பாத பட்சத்தில் Do Not Disturb அம்சத்தை இயக்கிக் கொள்ளலாம்.

நோட்டிபிகேஷன் பகுதியை கீழே ஸ்வைப் செய்யவும் இதில் Do Not Disturb மோட் இருக்கும் அதை இயக்கிக் கொள்ளலாம்.

பல அம்சங்கள் இருக்கும்

நோட்டிபிகேஷன் பகுதியில் Do Not Disturb பார்க்க முடியாவிட்டால், அதில் பென்சில் போன்ற ஒரு ஐகான் இருக்கும். இதை கிளிக் செய்து கொள்ளவும்.

இதில் பல அம்சங்கள் காட்டப்படும். இந்த அம்சங்களில் Do Not Disturb மோட் இருக்கும் இதை கிளிக் செய்து கொள்ளவும். இதை கிளிக் செய்து நோட்டிபிகேஷன் பகுதிக்கு இழுக்கவும். பின் இது நோட்டிபிகேஷன் பகுதியில் செட் ஆகிவிடும்.

இதன்மூலம் இந்த அம்சத்தை இயக்கிக் கொள்ளலாம்.

Call Barring முறை

Call Barring முறை

அழைப்புகளை தடை செய்வது என்பது உங்களை தொந்தரவில் இருந்து விடுபட்டு தனித்து வைக்க ஒரு சிறந்த தேர்வாகும்.

உங்களுக்கு எந்த நம்பரில் இருந்தும் போன் வராமல் தடுக்கஇந்த அம்சம் உதவுகிறது.அதேபோல் இந்த அம்சத்தை நீங்கள் outgoing கால்களுக்கும் மேற்கொள்ளலாம்.

இயக்குவது எப்படி?

இந்த அம்சத்தை இயக்க செட்டிங்க்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்து CallsStep என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

இதன் அழைப்பு அமைப்புகளில் Call BarringStep என்ற விருப்பம் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

இப்போது All Incoming என்ற விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளவும்.

இதில் பாஸ்வேர்ட் கேட்கப்படும் இந்த பாஸ்வேர்ட் அதிகபட்சம் பொதுவானதாகவே இருக்கும். அது 0000 அல்லது 1234 ஆக இருக்கலாம். இதை டைப் செய்து Turn On என்பதை கிளிக் செய்து கொள்ளலாம்.

மூன்றாம் தரப்பு பயன்பாடுகள்

மூன்றாம் தரப்பு பயன்பாடுகள்

மூன்றாம் தரப்பு பயன்பாடுகளின் மூலம் நீங்கள் தேவையற்ற அழைப்புகளை பிளாக் செய்து கொள்ளலாம். இது தேவையற்ற அழைப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

Only Contacts என்ற விருப்பம்

பெரும்பாலான மூன்றாம் தரப்பு அம்சங்களில் Only Contacts என்ற விருப்பம் இருக்கும். இந்த அம்சத்தை இயக்கிக் கொண்டால் உங்கள் தொடர்பு பட்டியலில் இருக்கும் நபர்கள் மட்டும் உங்களை தொடர்பு கொள்ள முடியும். பிற எந்த எண்ணில் இருந்தும் உங்களுக்கு அழைப்புகள் வராது.

தேவையற்ற எண்ணை மட்டும் பிளாக் செய்யலாம்

தேவையற்ற எண்ணை மட்டும் பிளாக் செய்யலாம்

மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் மிகவும் புகழ்பெற்ற ஒரு செயலி ட்ரூகாலர்.

இந்த செயலி குறித்து பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். இந்த செயலியின் மூலம் உங்களுக்கு தேவையற்ற எண்ணை மட்டும் பிளாக் செய்து கொள்ளலாம்.

நம்பரை கிளிக் செய்தால் மெயின் மெனுவில் இந்த ஆப்ஷன் காட்டப்படும். இந்த செயலி மூலம் உங்களது தொடர்பு பட்டியலில் இல்லாத எண்களை கூட யார் என்று நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to Block Incoming and Outgoing Calls on Android Phone?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X