Home
How to

உங்கள் Google அக்கௌன்டை எப்படி எளிமையாக பேக்அப் எடுத்து டெலீட் செய்வது? ஈசி டிப்ஸ்..

உலகில் உள்ள அனைவரும் கூகிள் சேவையைப் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக ஆண்ட்ராய்டைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கூகிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கிறது. பயனர்கள் அதிகம் என்பதனால் அதிக அளவு தரவை கூகிள் தனது பாதுகாப்பில் வைத்துள்ளது. இப்போது, ​​தரவு தனியுரிமைக் கவலைகள் இருப்பதனால் சிலர் அவர்களின் Google கணக்கை டெலீட் செய்ய விரும்புகின்றனர்.

Google கணக்கை எப்படி நீக்குவது?

Google கணக்கை எப்படி நீக்குவது?

அப்படி கூகிள் கணக்கை டெலீட் செய்ய விரும்பும் நபர்கள், உங்களின் அக்கௌன்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள டேட்டாக்களை பேக்அப் எடுத்துக்கொள்வது சிறந்தது. இந்த பதிவில் அதைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம், கூகிளில் உள்ள உங்களின் எல்லா தரவையும் எவ்வாறு பேக்அப் செய்து, உங்களின் Google கணக்கை எப்படி நீக்குவது என்பதை நாங்கள் உங்களுக்குக் கற்றுத்தரப்போகிறோம். கீழே குறிப்பிட்டுள்ள செயல்முறைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள்.

கூகிள் டேக்அவுட் சேவை

கூகிள் டேக்அவுட் சேவை

உங்கள் எல்லா தரவையும் பேக்அப் எடுக்க, கூகிளின் டேக்அவுட் சேவையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். காரணம் இது உங்கள் கூகிள் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள எல்லா தரவையும் ஒரே இடத்தில் ஒரு சில கிளிக்குள் மூலம் டவுன்லோட் செய்ய எளிதாக்குகிறது. பயனர்கள் கூகிள் டேக்அவுட் வலைத்தளத்திற்கு (takeout.google.com) சென்று அவர்கள் பேக்அப் செய்ய விரும்பும் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

எளிமையாக பேக்அப் எடுக்க இதை செய்யுங்கள்

எளிமையாக பேக்அப் எடுக்க இதை செய்யுங்கள்

இப்போது, உங்கள் Google கணக்கில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு சேவைகள் மற்றும் பயன்பாடுகளின் பட்டியலை வலைத்தளம் உங்களுக்குக் காட்டும். இதில் நீங்கள் பேக்அப் எடுக்க விரும்பாத ஆப்ஸ் டேட்டா அல்லது மற்ற தேவையற்ற டேட்டாக்களை நீக்க செக் பாக்சில் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள். இதைச் செய்த பிறகு Next என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யுங்கள். உங்கள் தரவு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று அடுத்த பகுதி உங்களிடம் கேட்கும்.

கிளவுட் ஸ்டோரேஜ் வேண்டுமா? அல்லது பர்சனல் ஸ்டோரேஜ் வேண்டுமா?

கிளவுட் ஸ்டோரேஜ் வேண்டுமா? அல்லது பர்சனல் ஸ்டோரேஜ் வேண்டுமா?

அதை நேரடியாக மற்றொரு கிளவுட் சேமிப்பகத்திற்கு மாற்ற வேண்டுமா என்று கூகிள் கேட்கும் அல்லது அனைத்து தரவும் தயாரானதும் அதைப் உங்கள் ஸ்டோரேஜில் பதிவிறக்குவதற்கான இணைப்பைக் கூகிள் உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. அடுத்து எக்ஸ்போர்ட் செய்யும் Export Once விருப்பங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் பெற விரும்பும் ஃபைல்களின் வகை மற்றும் அளவைத் தேர்ந்தெடுக்கவும்.

டேட்டா எக்ஸ்போர்ட் செய்யும் முறை

டேட்டா எக்ஸ்போர்ட் செய்யும் முறை

இறுதியாக, Create Export என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் டேட்டா அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஒரு டௌன்லோட் லிங்க் வழங்கப்படும். இந்த டொவுன்லோட் லிங்க் தயாராக ஒரு நாள் கூட ஆகலாம் அல்லது சில மணி நேரங்கள் கூட ஆகலாம். ஆகப் பொறுமையாகக் காத்திருக்கவும். இதற்குப் பின்னர் டவுன்லோட் லிங்க் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். இப்போது பேக்அப் எடுத்துவிட்டு கூகிள் அக்கௌன்ட் டெலீட் செய்யும் செயல்முறையைத் தொடருங்கள்.

கூகிள் அக்கௌன்ட் டெலீட் செய்ய இதை பின்பற்றுங்கள்

கூகிள் அக்கௌன்ட் டெலீட் செய்ய இதை பின்பற்றுங்கள்

  • myaccount.google.com என்ற கூகிள் அக்கௌன்ட் பக்கத்திற்குச் செல்லுங்கள்.
  • நீங்கள் டெலீட் செய்ய விரும்பும் கூகிள் அக்கௌன்டை லாகின் செய்யுங்கள்.
  • Data and Personalisation செலக்ட் செய்யுங்கள்.
  • Download and Delete Your Data என்ற விருப்பத்தைத் தேடி கிளிக் செய்யுங்கள்.
  • Delete a service or your account என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
  • இறுதி வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

    இறுதி வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

    • Delete your account கிளிக் செய்ததும் கூகிள் மீண்டும் உங்கள் அக்கௌன்டை லாகின் செய்யச் சொல்லும்.
    • கூகிள் இப்போது உங்களுக்கு பேக்அப் செய்வதற்கான இறுதி வாய்ப்பை வழங்கும்.
    • இறுதியாகப் பக்கத்தின் இறுதியில் உள்ள Delete Account விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் கூகிள் அக்கௌன்டை டெலீட் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
How to Backup All Data and Delete Your Google Account Easily : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X