உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!

|

மொபைல் போன்களை போலவே.. ஸ்மார்ட் டிவியும் கூட தீப்பிடிக்கும், வெடிக்கும் என்பதற்கு உத்திர பிரதேசத்தின் காஜியாபாத்தில் நடந்த சம்பவமே சாட்சி!

உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருக்கலாம், காஜியாபாத்தில், வீட்டின் உள்ளே இருந்த ஒரு ஸ்மார்ட் டிவி (Smart TV) வெடித்ததன் விளைவாக 16 வயது சிறுவன் உயிர் இழந்துள்ளான்!

தவறுகளும், காரணங்களும்!

தவறுகளும், காரணங்களும்!

இது போன்ற சம்பவம் உங்கள் வீட்டில் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால்.. உங்கள் ஸ்மார்ட் டிவியில் செய்யவே கூடாத சில தவறுகளை பற்றியும்.. ஒரு ஸ்மார்ட்டிவியில் தீப்பிடிபதற்கான காரணங்களை பற்றியும் நீங்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்!

அப்போது தான் மிக மிக அரிதாகவே நடக்கும் ஸ்மார்ட் டிவி வெடிப்பு சம்பவங்கள், உங்கள் வீட்டில் நிகழாமல் தவிர்க்கலாம்!

உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?

01.வயரிங்!

01.வயரிங்!

ஸ்மார்ட் டிவி மட்டுமல்ல வீட்டில் உள்ள எந்தவொரு எலெக்ட்ரிக்கல் அப்ளையன்ஸுமே தீப்பிடிப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று - பழைய மற்றும் பழுதடைந்த வயரிங்கே ஆகும்.

பழைய வயரிங் அல்லது தவறான வயரிங் ஆனது ஷார்ட் சர்க்யூட்டிற்கு வழிவகுக்கும், அதன் விளைவாக தீ விபத்துகள் ஏற்படலாம்!

எனவே அவ்வப்போது உங்கள் வீட்டில் உள்ள அனைத்து வயரிங்கும் நல்ல நிலையில் உள்ளதா என்பதை பரிசோதிக்கவும்.

02. எக்ஸ்டென்ஷன் கார்ட்!

02. எக்ஸ்டென்ஷன் கார்ட்!

"கட்டுப்பாடுகள்" இல்லாத எக்ஸ்டென்ஷன் கார்ட்களும் (Extension cords) கூட தீ விபத்தை ஏற்படுத்தும்.

அதாவது டிவி, கம்ப்யூட்டர் மற்றும் பிற டிவைஸ்கள் என அனைத்துமே ஒரே எக்ஸ்டென்ஷன் கார்டில் செருகப்படும் போது, அது ஒரே சாக்கெட்டில் அதிகப்படியான பவரை உருவாக்கும்.

குறிப்பிட்ட சாக்கெட் ஆனது அதிகப்படியான "சுமையை" கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தால், பிரச்சனை இல்லை. ஒருவேளை அது பலவீனமாக இருந்தால்.. அதிக மின்சாரம் வெப்பத்தை உருவாக்கும், அந்த வெப்பம் தீக்கு வழிவகுக்கும்!

இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!

03. ரிப்பேர்!

03. ரிப்பேர்!

ஸ்மார்ட் டிவிகள் சரியாக பழுதுபார்க்கப்படாவிட்டால், அது தீப்பிடிப்பதற்கான, அல்லது வெடித்துச் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்

வயரிங்கை சரியாக கையாள தெரிந்த தொழில்நுட்ப வல்லுநரை வைத்து மட்டுமே உங்கள் ஸ்மார்ட் டிவியை பழுது பார்க்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

04. கெப்பாசிட்டர்!

04. கெப்பாசிட்டர்!

டிவி கெப்பாசிட்டர் (TV capacitor) என்பது ஒரு சிறிய எலெக்ட்ரிக்கல் டிவைஸ் ஆகும். இது எலெக்ட்ரிக்கல் சார்ஜ்களை ஸ்டோர் செய்து பில்டர் செய்யும்.

எனவே தான் கெப்பாசிட்டர்கள், டிவியின் மிகவும் முக்கியமான பகுதியாக பார்க்கப்படுகிறது. அவைகள் தேய்ந்து போனால், அது டிவியை செயல் இழக்க செய்யும்.

ஒருவேளை தவறான அல்லது அதிக வெப்பமான கெப்பாசிட்டர்கள் பயன்படுத்தப்பட்டால், அது தீ விபத்திற்கு வழிவகுக்கும்.

05. நீண்ட நேர பயன்பாடு!

05. நீண்ட நேர பயன்பாடு!

டிவியை கொஞ்சம் கூட "குளிர்ச்சி அடைய" விடாமல், அதை மிகவும் நீண்ட நேரம், தொடர்ச்சியாக பயன்படுத்தினாலும் கூட தீ விபத்து ஏற்படலாம்.

எனவே நல்ல இடைவெளியில் டிவியை பயன்படுத்தவும். அதே போல், டிவியை நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில், அதை வெறுமனே ஆஃப் செய்து வைக்காமல், அன்பிளக் செய்து விடுவதும் கூட ஒரு நல்ல பழக்கம் தான்!

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

06. வால்டேஜ் ஃப்ளெக்ட்யூவேஷன்ஸ்

06. வால்டேஜ் ஃப்ளெக்ட்யூவேஷன்ஸ்

தீவிரமான வால்டேஜ் ஃப்ளெக்ட்யூவேஷன்ஸ் ஆனது டிவிக்கு மட்டுமல்ல, எந்தவொரு எலெக்ட்ரிக்கல் டிவைஸ்களுக்குமே ஆபத்து தான்!

அதீத உயர் சக்தியின் (ஹை-பவர்) திடீர் எழுச்சி ஆனது டிவியை வெடிக்க செய்யலாம். இருப்பினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது டிவைஸை ஆஃப் மட்டுமே செய்யும்!

Best Mobiles in India

English summary
How to Avoid Smart TV Fire Accidents and Explosions Know The Causes and Reasons

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X