Home
How to

Google Pay சேவையில் மோசடியைத் தவிர்ப்பது எப்படி

டிஜிட்டல் பணபரிமாற்ற முறை ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மூலம் நமக்கு அதிக பலன்களை வழங்கி வருகிறது. எனினும், இந்த சேவையில் அதற்கென ரிஸ்க் மற்றும் ஆபத்துகள் நிறைந்துள்ளது. சமீபத்தில், மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வசிக்கும் நபர் டிஜிட்டல் வாலெட் மூலம் ஒரு லட்சம் ரூபாயினை இழந்தார். பணத்தை பறிகொடுத்தவர் தனது நிலையை சமூக வலைதளங்களில் விளம்பரமாக வெளியிட்டார்.

கூகுள் பே

கூகுள் பே

இணையத்தில் ஏமாற்றியவர், மொபைல் வாலெட்களான பேடிஎம் அல்லது கூகுள் பே மூலம் பணம் செலுத்த கோரியிருக்கிறார். எனினும், பணத்தை அனுப்புவதற்கு மாற்றாக, விற்பனையாளரிடம் அவர் பணத்தை வழங்க கோரிக்கை விடுத்து அதற்கான ஒடிபியை கேட்டிருக்கிறார். பணத்தை பறிகொடுத்தவர் தனது பணம் கிடைக்க போவதாக நம்பி, ஒடிபியை தெரிவித்தார். பின் அவர் தனது வங்கி கணக்கில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை இருமுறை இழந்துள்ளார்.

குறிப்பிட்ட நபரை நீங்கள் பிளாக் செய்யலாம்

குறிப்பிட்ட நபரை நீங்கள் பிளாக் செய்யலாம்

இதுபோன்ற ஊழல்களில் சிக்காமல் இருக்க, கூகுள் பே சேவையில் உங்களிடம் பணம் கோரும் அம்சத்தை சிலருக்கு மட்டும் பிளாக் செய்ய அனுமதிக்கிறது. கூகுள் பே மூலம் உங்களை தொடர்பு கொள்ள நினைக்கும் குறிப்பிட்ட நபரை நீங்கள் பிளாக் செய்யலாம்.

ஐ.ஒ.எஸ்.

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். என இருவித இயங்குதளங்களிலும் கிடைக்கிறது. இதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

#3

1 - ஸ்மார்ட்போனில் கூகுள் பே செயலியை திறக்க வேண்டும்


2 - இனி நீங்கள் மேற்கொண்ட பரிவர்த்தனைகளை பார்க்க ஸ்லைடு அப் செய்ய வேண்டும். இதே பகுதியில் உங்களிடம் பணம் கோரிய காண்டாக்ட் விவரங்களும் பட்டியலாகி இருக்கும்


3 - இங்கு நீங்கள் பிளாக் செய்ய வேண்டிய நபரை க்ளிக் செய்ய வேண்டும்


4 - நம்பர் உங்களது போன்புக்கில் சேவ் செய்யப்பட்டு இருந்தால், மோர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்


5 - இங்கு பிளாக் ஆப்ஷன் தெரியும், அதனை க்ளிக் செய்ய வேண்டும்

6 - ஒருவேளை நம்பர் சேவ் செய்யப்படவில்லையெனில், பிளாக் செய்வதற்கான ஆப்ஷன் தானாக தெரியும்

குறிப்பு

குறிப்பு

கூகுள் பே செயலியில் யாரையும் பிளாiக் செய்தால், அவர்கள் மற்ற கூகுள் சேவைகளான கூகுள் போட்டோஸ் மற்றும் ஹேங் அவுட்ஸ் போன்றவற்றிலும் பிளாக் செய்யப்பட்டு விடுவர்.

Best Mobiles in India

English summary
How to avoid fraud on Google Pay : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X