ரூ. 5 செலுத்தினால் ரூ. 255 கேஷ்பேக் கிடைக்குமா? வாட்ஸ்அப் பேமெண்டில் புது சலுகை.. உடனே இதை செய்யுங்க..

|

வாட்ஸ்அப் பயனர்களுக்கு இப்படி ஒரு ஜாக்பாட் நன்மையா? இதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. யோசிக்காமல் உடனே இந்த விஷயத்தைச் செய்யுங்கள், மொத்தமாக ரூ. 255 கேஷ்பேக் நன்மையை பெற்றிடுங்கள். வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் UPI அடிப்படையிலான கட்டணச் சேவையை அறிமுகப்படுத்தத் தொடங்கியது. இந்தியாவில் PhonePe, PayTM மற்றும் Google Pay போன்ற பல பேமெண்ட் சேவைக்குக் கடுமையான போட்டியை உருவாக்க இப்போது புதிய கேஷ்பேக் சலுகையை WhatsApp அறிவித்துள்ளது.

இந்தியாவில் போட்டியை சமாளிக்க வாட்ஸ்அப் பேமெண்ட் அறிவித்த அதிரடி கேஷ்பேக் சலுகை

இந்தியாவில் போட்டியை சமாளிக்க வாட்ஸ்அப் பேமெண்ட் அறிவித்த அதிரடி கேஷ்பேக் சலுகை

இந்தியச் சந்தையில் நிகழும் போட்டியை சமாளிக்க, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ரூ. 51 மதிப்பிலான கேஷ்பேக் நன்மை கிடைக்கும் சலுகையை வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த கேஷ்பேக் நன்மையைக் கீழே குறிப்பிட்டுள்ள படி பெற முயன்றால் உங்களுக்கு மொத்தமாக ரூ. 255 கேஷ்பேக் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே பதிவை முழுமையாகப் படித்துத் தெளிவாக விதிமுறைகளைப் பின்பற்றி வாட்ஸ்அப் வழங்கும் கேஷ்பேக் நன்மையைப் பெற்று மகிழ்ந்திடுங்கள்.

WhatsApp அதன் UPI அடிப்படையிலான கட்டண சேவையை பலப்படுத்துகிறதா?

WhatsApp அதன் UPI அடிப்படையிலான கட்டண சேவையை பலப்படுத்துகிறதா?

மிக நீண்ட காலத்திற்கு முன்பு, WhatsApp அதன் UPI அடிப்படையிலான கட்டண சேவையை இந்தியாவில் அறிவித்தது. வாட்ஸ்அப்பில் இருந்து நேரடியாக ஒருவருடைய தொடர்புகளுக்குப் பணம் அனுப்புவது பலருக்கு வசதியான கருவியாகத் தோன்றலாம், ஆனால் சந்தையில் ஏற்கனவே உள்ள பேடிஎம், ஃபோன்பே மற்றும் கூகுள் பே போன்றவற்றுக்கு எதிராக வாட்ஸ்அப் வலுவான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. அதைச் சமாளிப்பதற்கும், சில ஆரம்ப ஹைப்பை உருவாக்குவதற்கும், WhatsApp இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இனி ATM மூலம் பணம் எடுக்கும் முறையில் மிகப்பெரிய மாற்றம்.. SBI அறிவிப்பு.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..இனி ATM மூலம் பணம் எடுக்கும் முறையில் மிகப்பெரிய மாற்றம்.. SBI அறிவிப்பு.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

Google Pay முன்னர் செய்த அதே காரியத்தை இப்போது வாட்ஸ்அப் பின்பற்றுகிறதா?

Google Pay முன்னர் செய்த அதே காரியத்தை இப்போது வாட்ஸ்அப் பின்பற்றுகிறதா?

வாட்ஸ்அப் பேமெண்ட் சேவை மூலம் ஒருவர் UPI வழிமுறைகளைப் பின்பற்றி பணத்தை மற்றவருக்குப் பரிமாற்றம் செய்யும் போது ரூ.51 கேஷ்பேக் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. UPI பேமெண்ட் ஆப்ஸ் இதுபோன்ற ஒரு விஷயத்தை மக்களுக்கு வழங்க முயல்வது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இதற்கு முன்னர் Google Pay செய்த அதே நடவடிக்கையை இப்போது வாட்ஸ்அப் செயல்படுத்துகிறது. கூகுள் பே அறிமுகப்படுத்திய ஸ்கிராட்ச் கார்டு சலுகை இன்னும் இந்தியாவில் தொடர்கிறது. இதே வழியில் வாட்ஸ்அப் செயல்பட முயல்வதாகத் தெரிகிறது.

WhatsApp மூலம் 51 ரூபாய் கேஷ்பேக் பெறுவது எப்படி?

WhatsApp மூலம் 51 ரூபாய் கேஷ்பேக் பெறுவது எப்படி?

வாட்ஸ்அப் பீட்டா செயலியின் சாட் பட்டியலின் மேல் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் "பணத்தைக் கொடுங்கள், ரூ. 51 திரும்பப் பெறுங்கள்" என்று எழுதப்பட்ட பேனரைத் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த ரூ. 51 கேஷ்பேக் உத்தரவாதம் மற்றும் இந்த லாபகரமான கேஷ்பேக்கைப் பெறுவதற்கு நீங்கள் அனுப்ப வேண்டிய பணத்திற்கு வரம்பு இல்லை என்பது முதல் குறிப்பிடத்தக்க விஷயமாகும். அதேபோல், ஒரு கணக்கில் இருந்து இந்த கேஷ்பேக் நன்மையை ஐந்து முறை மட்டுமே ஒரு பயனர் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பால்வெளி மண்டலத்திற்கு வெளியே NASA புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதா? என்ன சொல்கிறது நாசா?பால்வெளி மண்டலத்திற்கு வெளியே NASA புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதா? என்ன சொல்கிறது நாசா?

வாட்ஸ்அப் வழங்கும் கேஷ்பேக் நன்மை எங்கு வைப்பு வைக்கப்படும்?

வாட்ஸ்அப் வழங்கும் கேஷ்பேக் நன்மை எங்கு வைப்பு வைக்கப்படும்?

இன்னும் உங்களுக்குப் புரியும் படி எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் தொடர்புகளில் உள்ளவர்களுக்கு ரூ. 1 முதல் ரூ. 5 வரை பணம் செலுத்தி, அதற்கு ரூ.51 கேஷ்பேக் நன்மையைப் பெறலாம். ஆனால் அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம், பணம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதும், ரூ. 51 மதிப்பிலான கேஷ்பேக் உடனடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க வாட்ஸ்அப் நோட்டிபிகேஷனும் அனுப்புகிறது.

ஒட்டுமொத்தமாக ரூ. 255 மதிப்பிலான கேஷ்பேக் நன்மை இப்போது கிடைக்கிறதா?

ஒட்டுமொத்தமாக ரூ. 255 மதிப்பிலான கேஷ்பேக் நன்மை இப்போது கிடைக்கிறதா?

இப்படி நீங்கள் ஐந்து முறை பணப் பரிவர்த்தனை செய்யும் போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 51 மதிப்பிலான கேஷ்பேக் நன்மை என்று ஒட்டுமொத்தமாக உங்களுக்கு ரூ. 255 கேஷ்பேக் இப்போது கிடைக்கிறது. இந்த கேஷ்பேக் சலுகை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை, எனவே நீங்கள் இந்த கேஷ்பேக்கைப் பெற விரும்பினால், அதைச் செய்வதற்கான சிறந்த நேரம் இதுவாக மட்டும் தான் இருக்கும். வாட்ஸ்அப் வழங்கும் இந்த கேஷ்பேக் நன்மை உடனே பெறக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

ஜியோபோன் நெக்ஸ்ட் இப்படி தான் இருக்குமா? இந்த அம்சங்கள் எல்லாம் கட்டாயம் இருக்கா.! சூப்பர்ல..ஜியோபோன் நெக்ஸ்ட் இப்படி தான் இருக்குமா? இந்த அம்சங்கள் எல்லாம் கட்டாயம் இருக்கா.! சூப்பர்ல..

வாட்ஸ்அப் பேமெண்டில் UPI மூலம் பணம் செலுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் பேமெண்டில் UPI மூலம் பணம் செலுத்துவது எப்படி?

  • வாட்ஸ்அப்பில் UPI கட்டணம் செலுத்தி ரூ.51 கேஷ்பேக் பெற, உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப் பயன்பாட்டை இயக்கவும்.
  • பின்னர், சாட் ஓபன் செய்து, 'Attachment icon' தேர்ந்தெடுக்கவும்.
  • இன்னும் சிலருக்கு Attachment icon ஐகான் அருகில் ரூபாய் ஐகான் காண்பிக்கப்படுகிறது. அதை கிளிக் செய்யவும்.
  • இது உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க உதவும்.
  • ஐபோன் பயனர்கள் சாட்பாக்ஸுக்கு அடுத்துள்ள ரூபாய் ஐகானை பயன்படுத்தலாம்.
  • ரூ. 51 கேஷ்பேக் நன்மை பெற அரிய வாய்ப்பு.. உடனே இதை செய்யுங்கள்

    ரூ. 51 கேஷ்பேக் நன்மை பெற அரிய வாய்ப்பு.. உடனே இதை செய்யுங்கள்

    • வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப மற்றும் பெற, உங்கள் வங்கி விவரங்களைச் சேர்க்கவும்.
    • நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும், பின் என்டர் அழுத்தவும்.
    • கட்டணத்தைச் செலுத்த உங்கள் UPI பின் நம்பரை உள்ளிடவும்.
    • பரிவர்த்தனை முடிந்ததும் உங்களுக்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும்.
    • இதைப் பின்பற்றி உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து பணத்தை அனுப்பி, அதற்கான ரூ. 51 கேஷ்பேக் நன்மையை உங்கள் கணக்கில் நேரடியாக வைப்பு வைப்பதை நீங்கள் நோட்டிபிகேஷன் செய்தி மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How To Avail Rs 51 Cashback Offer By Using WhatsApp UPI Based Payment System In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X