ஆன்லைன் மூலம் புது பாஸ்போர்ட் வாங்குவது எப்படி? Passport வாங்க சுலபமான வழி இது தான்.!

|

வெளிநாடுகளுக்குச் சென்று மேற்படிப்பு படிப்பது, தொழில் செய்வது, இன்றைய தனியார் வேலைவாய்ப்பு அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்தே இருப்பதால் வேலை காரணமாக வெளிநாடு செல்வது மற்றும் விடுமுறை நாட்களுக்கு ஏதாவது வெளிநாடு சென்று குடும்பத்துடன் பொழுது போக்கிவிட்டு வருவது போன்றவை இன்றைய சூழ்நிலையில் மிகவும் சகஜமாகிவிட்டது. இதற்கு கட்டாய தேவையாக இருப்பது பாஸ்போர்ட் (Passport).

பாஸ்போர்ட்டை நாம் ஆன்லைன் மூலம் வாங்கலாமா?

பாஸ்போர்ட்டை நாம் ஆன்லைன் மூலம் வாங்கலாமா?

இவ்வளவு முக்கியமான பாஸ்போர்ட்டை நாம் எப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது என்று தெரிந்துகொள்ளலாம். முந்தைய காலத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க நேரில் பல நாட்கள் அலைந்து பல நாட்கள் காத்திருந்து தான் வாங்க வேண்டி இருக்கும். ஆனால் இப்போது அணைத்து அரசு ஆவணங்களையும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது போல் பாஸ்போர்ட்டையும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் எப்படி விண்ணப்பித்து?

பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் எப்படி விண்ணப்பித்து?

வெளிநாடு சென்று படிப்பது, தொழில் செய்வது பெருகிவிட்டதால் நம் வெளியுறவு அமைச்சகம் (MEA) இந்த முயற்சியில் ஈடுபட்டு 2010 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் சேவா திட்டம் (PSP) என்ற ஒன்றை ஆரம்பித்தது. விண்ணப்பப் படிவம் நிரப்புவதிலிருந்து, சரிபார்ப்பு வரை அனைத்தும் இந்த இணையத்தளத்திலேயே செய்து விடலாம். இந்த பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் எப்படி விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெறுவது என்று இப்போது பார்க்கலாம்.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறுவது எப்படி?

ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறுவது எப்படி?

1. பாஸ்போர்ட் சேவாவின் https://passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink# என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும்.
2. திரையில் தெரியும் new user registration என்பதைத் தேர்வு செய்து உங்களுக்கென்று ஒரு புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
3. பின்னர் நீங்கள் உருவாக்கிய கணக்கில் இருந்து உள்நுழைந்து Apply for Fresh Passport/Re-issue of Passport என்ற லிங்க்கை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

கட்டணத்தை செலுத்தி அப்பாயின்மென்ட் ஃபிக்ஸ் செய்வது எப்படி?

கட்டணத்தை செலுத்தி அப்பாயின்மென்ட் ஃபிக்ஸ் செய்வது எப்படி?

4. அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை உள்ளீடு செய்து சப்மிட் செய்ய வேண்டும்.
5. அதன் பின்னர், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தைத் திறந்து பார்க்க வேண்டும்.
6. பின்னர் Pay and Schedule Appointment என்பதைத் தேர்வு செய்து இந்த சேவைக்கு தேவையான குறைந்த பட்ச கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
7. அப்பாய்ன்ட்மென்ட் முன்பதிவு செய்ய ஆன்லைன் கட்டணம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!

சாதாரண விண்ணப்பத்திற்கு எவ்வளவு? தட்கல் விண்ணப்பத்திற்கு எவ்வளவு கட்டணம்?

சாதாரண விண்ணப்பத்திற்கு எவ்வளவு? தட்கல் விண்ணப்பத்திற்கு எவ்வளவு கட்டணம்?

8. சாதாரண விண்ணப்பத்திற்கு ரூ. 1500ம் தட்கல் விண்ணப்பத்திற்கு ரூ. 2000ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
9. நெட் பாங்கிங் அல்லது இதர ஆன்லைன் முறை மூலம் கட்டணம் செலுத்திய பின்னர் Print Application Receipt என்பதைத் தேர்வு செய்து உங்கள் ரசீதை ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.
10. உங்கள் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, அப்பாய்ன்ட்மென்ட் விவரங்களுடன் எஸ்எம்எஸ் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும். பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாய்ன்ட்மென்ட் பெற்றதற்கு ஆதாரமாக்க இந்தச் செய்தி காட்ட வேண்டும்.

உங்களுடைய பாஸ்போர்ட் எப்படி உங்களிடம் ஒப்படைக்கப்படும்?

உங்களுடைய பாஸ்போர்ட் எப்படி உங்களிடம் ஒப்படைக்கப்படும்?

11. அப்பாய்ன்ட்மென்ட் தேதியன்று நீங்கள் சமர்ப்பித்த அனைத்து அசல் ஆவணங்களுடன் பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) அல்லது மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் (RPO) சென்று வர வேண்டும்.
12. பின்னர், ஒரு வாரத்திற்குள் போலீஸ் வெரிஃபிகேஷன் செய்து முடிக்கப்படும்.
13. இறுதியாக, அணைத்துச் சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்த பின், உங்களுடைய பாஸ்போர்ட் தபால் மூலம் உங்கள் இருப்பிட விலாசத்திற்கு அனுப்பப்படும்.

இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!

பாஸ்போர்ட்டை பெற இது மிகவும் முக்கியமா?

பாஸ்போர்ட்டை பெற இது மிகவும் முக்கியமா?

14. பாஸ்போர்ட் விண்ணப்பித்த நபர் நேரில் கையெழுத்திட்டு தபாலைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம், மிக எளிமையாக உங்களுக்கான பாஸ்ப்போர்ட்டை அதிகபட்சம் ஒரு-இரு வாரங்களில் வாங்கிவிடலாம். நீங்கள் விண்ணப்பித்த அசல் ஆவணங்கள் மற்றும் படிவங்களை எடுத்துச்செல்லமறக்காதீர்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
How To Apply Passport For Online Useful Tips 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X