புதிய ரேஷன் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? உடனே அப்ளை செய்யுங்கள்..

|

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவைக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நிவாரண உதவித் தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகிய இரண்டும் 98 சதவீதம் வரை மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சேவை முடிவடையும் தருணத்தில் உள்ளதால், 01.07.2021 முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை துவங்கப்பட்டு, புதிய குடும்ப அட்டை அச்சிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய ரேஷன் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

புதிய ரேஷன் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

 • முதலில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கும் நபரின் பெயர் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்கக் கூடாது.
 • ஒருவேளை உங்களின் பெயர்கள் மற்ற ரேஷன் அட்டையில் உறுப்பினராக இருந்தால், முதலில் அதிலிருந்து உங்கள் பெயரை நீக்கம் செய்த பின்னரே நீங்கள் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
 • இந்த இணையதளத்தை கிளிக் செய்யுங்கள்

  இந்த இணையதளத்தை கிளிக் செய்யுங்கள்

  • https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தை ஓபன் செய்து லாகின் செய்துகொள்ளுங்கள்.
  • பின்பு, அதில் காணப்படும் மின்னணு அட்டை சேவை என்ற விருப்பத்தின் கீழ் உள்ள புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்து, Name of family head என்ற இடத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உங்களின் பெயரை உள்ளிடுங்கள்.
  • வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னா இது? அடையாளமே தெரியலையே.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னா இது? அடையாளமே தெரியலையே.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

   பதிவேற்றம் செய்ய வேண்டிய புகைப்படம் இந்த அளவில் தான் இருக்க வேண்டும்

   பதிவேற்றம் செய்ய வேண்டிய புகைப்படம் இந்த அளவில் தான் இருக்க வேண்டும்

   • பின்னர் முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், பின்கோடு எண், மொபைல் எண், இமெயில் ஐடி போன்றவற்றை சரியாக உள்ளிடுங்கள்.
   • குடும்பத் தலைவருக்கான புகைப்படத்தை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த புகைப்படம் 5 எம்பி அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
   • அட்டை தேர்வு என்ற இடத்தில் என்ன வகையான அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்யவும்.
   • ஆதார் விபரங்களை அப்லோட் செய்யவது எப்படி?

    ஆதார் விபரங்களை அப்லோட் செய்யவது எப்படி?

    • இறுதியாக ஸ்கேன் செய்து ஆதார் விபரங்களை அப்லோட் செய்து சேவ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
    • அதற்குப் பின்னர் உங்களின் கேஸ் சிலிண்டர் இணைப்பு பற்றிய விவரங்களைப் பதிவிட வேண்டும். உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயரை உள்ளிட்ட வேண்டும்.
    • 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் யாரும் உங்கள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கான பிறப்பு சான்றிதழை நீங்கள்சமர்ப்பிக்க வேண்டும்.
    • மலிவு விலையில் ரெடியாகும் 'ஜியோபுக்' லேப்டாப்.. அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் இது தானா?மலிவு விலையில் ரெடியாகும் 'ஜியோபுக்' லேப்டாப்.. அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் இது தானா?

     இந்த குறிப்பு எண்ணை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க

     இந்த குறிப்பு எண்ணை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க

     • பின்னர், ஒரு முறை நீங்கள் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்து சேவ் கிளிக் செய்யுங்கள்.
     • பின்னர் உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என்ற நோட்டிபிகேஷன் காண்பிக்கப்படும்.
     • திரையில் காண்பிக்கப்படும் குறிப்பு எண்ணை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது.
     • இறுதியாக இதை மட்டும் செய்யுங்கள்

      இறுதியாக இதை மட்டும் செய்யுங்கள்

      • பதிவு செய்யப்பட்ட புதிய அட்டையின் நிலையை தெரிந்துகொள்ள இது பயன்படுத்தப்படும்.
      • இதே இணையத்தில் முகப்பு பக்கத்தில் உள்ள ஆப்ஷன் மூலம் புதிய விண்ணப்பத்தின் நிலை என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
how to apply new ration card online from tomorrow in Tamil : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X