அப்படி போடு.. இனி Google Pay மூலம் கடன் வாங்கலாம்.. எப்படி தெரியுமா? இதோ முழு விவரம்..
கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்ஸ்கள் அனைத்து இடங்களிலும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதுவும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் கியூஆர் கோடு ஸ்கேனர் இல்லாத மளிகைக் கடைகளே இல்லை.
அந்த அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக யுபிஐ பயன்பாடுகள் மூலம் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. இந்த யுபிஐ செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.

அதேபோல் கூகுள் நிறுவனம் சமீபத்தில் கூகுள் பே தளத்தில் சாசெட்(Sachet Loan) கடன்/லோன் எனும் புதிய லோன் பெறும் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது சிறு வர்த்தகங்கள் நிறுவனங்கள், வணிகங்களுக்கு உதவும் வகையில் கூகுள் பே செயலி மூலம் சாசெட் கடன்களை(sachet loans) அதாவது சிறிய அளவிலான தொகை கொண்ட கடன்களை வழங்க உள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், சிறு வணிகர், நிறுவனங்களுக்கு அன்றாட தேவைகளுக்குச் சிறிய தொகைகள் தேவைப்படலாம். இதற்கு வேண்டி வங்கிகளுக்குச் சென்று அந்த கடன்களை வாங்க முடியாது. எனவே தான் அவர்களது உடனடி தேவைகளை அதாவது அன்றாட வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அவர்களுக்கான கடன் வசதியைக் கூகுள் இந்தியா அறிமுகம் செய்தது.

குறிப்பாக சாசெட் (Sachet Loan) கடன்கள் என்பது சிறிய மற்றும் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன்களின் வகையாகும். அவற்றின் காலம் 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நானோ கிரெடிட் மூலம் கடன் பெற விரும்புபவர்கள் விரைவான ஒப்புதல் மற்றும் பணம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கடன் வழங்கும் துறையில் விரிவடைந்து வரும் ஃபைன்டெக் தாக்கத்தால் கடன் செயல்முறை மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வங்கிகளைப் போல கடுமையான டாகுமெண்ட் சரிபார்ப்பு போன்றவை இல்லாமல் விரைவில் கடன் வழங்கும்.
மேலும் இந்த சாசெட் கடன்கள் என்பது என்னவென்றால், கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்களுக்கு ரூ.15,000 மதிப்பிலான தொகையை sachet loans என்ற சிறு கடனாக வழங்கும். கூகுள் பே-இன் இந்த Sachet Loan ஃபெடரல், கோடக் மஹிந்திரா, HDFC வங்கி மற்றும் ICICI ஆகிய நான்கு வங்கிகளுடன் கூகுள் கூட்டுச் சேர்ந்துள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால் இந்த புதிய சேவையைக் கூகுள் பே நிறுவனம் தற்போது 2 நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. சரி இப்போது இந்த லோனை எப்படி வாங்குவது, அதற்கான தகுதிகள், கடன் மீதான வட்டி விகிதங்கள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் Google Pay for Business செயலியை திறக்கவும். இந்த செயலி உங்களிடம் இல்லையென்றால் உடனே பதிவிறக்கம் செய்யவும்.
வழிமுறை-2: அடுத்து google Pay for Business செயலியின் கடன் பகுதிக்குச் சென்று ஆஃபர்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை-3: அதில் உங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகையை உள்ளிட்டு அதன்பின்பு தொடரவும். அடுத்து google pay வைத்துள்ள வங்கி தளத்திற்குச் சென்றதும் கேஒய்சி(KYC) உட்பட சில படிகளை முடித்த பின்னர் உங்களுக்குக் கடன் கிடைக்கும். மேலும் உங்களது CIBIL Score நன்றாக இருப்பின் கண்டிப்பாக உங்களுக்கு இந்த கடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிமுறை-4: தற்போது இந்த சாசெட் கடனுக்கு வட்டி மாதம் ரூ.111 என்று சில தரவுகள் சொல்கின்றன. ஆனாலும் உறுதியான வட்டி விகிதங்கள் விவரம் கிடைக்கவில்லை.
குறிப்பாக இந்த கடன் தொகை வணிகர்கள் தங்களுக்குத் தேவையான சரக்குகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் ஆஃப்லைன் வாயிலாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் கொண்டுவந்துள்ள இந்த புதிய சேவைக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








