Driving Licence Online: வீட்டில் இருந்தே இதையெல்லாம் செய்யலாம்., ரொம்ப சிம்பிள்!

|

இந்தியாவின் முக்கியமான ஆவணங்களில் பிரதான ஒன்று டிரைவிங் லைசென்ஸ் ஆகும். தங்களின் ஆதாரத்தகவலை சமர்பிப்பதற்கும் டிரைவிங் லைசென்ஸ் பயன்படுகிறது.

இதெல்லாம் விட, வாகனம் ஓட்டுவதற்கு சட்டப்பூர்வமாக உங்களை அனுமதிக்கும் ஆவணம் தான் Driving Licence (ஓட்டுநர் உரிமம்). டிரைவிங் லைசென்ஸை ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு யாரையும் அணுக வேண்டிய தேவையில்லை, நீங்களே எளிய முறையில் விண்ணப்பிக்கலாம்.

ஒட்டுநர் உரிமத்தை விண்ணிப்பிக்கும் வழிமுறைகள்

ஒட்டுநர் உரிமத்தை விண்ணிப்பிக்கும் வழிமுறைகள்

வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஒட்டுநர் உரிமத்தை விண்ணிப்பிக்கும் வழிமுறைகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக கற்றல் உரிமத்தை முதற்கட்டமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது LLR க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செயல்முறை ஆன்லைனில் இருந்தாலும் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்கு நேரில் செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

விதிமுறைகள் அறிந்திருத்தல் அவசியம்

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முக்கிய விதிகளில் ஒன்று 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும்.

அதேபோல் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்து அறிந்திருப்பதும் அவசியம்.

18 வயது பூர்த்தி செய்த ஆவணங்கள், முகவரி ஆதாரம் உள்ளிட்ட சரியான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பதும் அவசியம்.

LLRக்கான கட்டணம் ரூ. 230 முதல் வசூலிக்கப்படும்.

டிஜிட்டல் இந்தியா திட்டம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்றே கூறலாம்.

அதன்படி நமது வாகனம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்வதற்கு ஆர்டிஓ(வட்டார போக்குவரத்து அலுவலகம்) செல்லாமலே ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம்.

எல்எல்ஆர்(பழகுனர் உரிமம்), நிரந்தர ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் parivahan.gov.in என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்யலாம்.

இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஓட்டுநர் உரிமத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ.

Step 1: அதிகாரப்பூர்வ அரசாங்க இணையதளத்திற்குச் செல்லவும் https://parivahan.gov.in/parivahan/

Step 2: உள்ளே சென்றதும் மேலே காட்டப்படும் தேர்வுகளில் ​​'Online Services' என்ற தேர்வை கிளிக் செய்யவும்.

Step 3: இந்த தேர்வுக்குள் சென்றதும் Driving License Related Services என்ற விருப்பத்தை கிளிக் செய்யும்.

வழிகாட்டுதல்களை கவனமாகப் படிப்பது அவசியம்

Step 4: இதில் நீங்கள் வசிக்கும் மாநிலத்தைத் தேர்வு செய்யவும்.

Step 5: இதில் "Learner's Licence Application" என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

Step 6: இங்கே பட்டியலிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கவனமாகப் படித்து உங்கள் தனிப்பட்ட விவரங்களை முழுமையாக நிரப்பவும்.

OTP எண் பதிவிடுவது கட்டாயம்

Step 7: Test செய்வதற்கான தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

Step 8: உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும், அதை பதிவிட வேண்டும்.

Step 9: இந்த அனைத்து வழிமுறைகளும் முடிந்த பிறகு, Terms and Conditions என்ற விருப்பத்தை டிக் செய்து Accept செய்து கொள்ளவும்.

ஆன்லைன் மூலம் கட்டணம்

ஆன்லைன் படிவம் பூர்த்தி செய்த பிறகு கட்டணங்களை இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

வங்கி இணைய சேவை, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு உள்ளிட்டவைகள் மூலமாக விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்தலாம்.

வாகனம் ஓட்டிக்காட்டும் தேர்வு

இணையதளம் மூலமாக செலுத்தப்படும் தொகைக்கான ரசீதை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

வாகன பழகுனர் உரிமம் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.

குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், ஆன்லைன் மூலம் பெரும் ஒப்புகை சீட்டு, ஆன்லைனில் பணம் கட்டிய ரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) செல்ல வேண்டும்.

அங்கு "வாகனம் ஓட்டிக்காட்டும் தேர்வில்" கலந்து கொண்டு முறையான கால அவகாசத்தில் ஓட்டுநர் உரிமத்தினை பெறலாம்.

அதேபோல் அதிகாரப்பூர்வ ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளின் உதவியுடன் பயிற்சி எடுத்து இந்த முறைகளை நிறைவு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How To Apply For Driving Licence through Online?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X