குழந்தை மற்றும் சிறுவர்களுக்கு ஆதார் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி?

|

இந்தியாவில் ஆதார் கார்டின் முக்கியத்தும் பெரியவர்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும். மேலும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. பெரியவர்கள் போன்றே குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் ஆதார் மிகவும் முக்கியமான சான்றாக இருக்கிறது.

ஆதார் அடையாள சான்று

ஆதார் அடையாள சான்று

சிறுவர்களுக்கு ஆதார் அடையாள சான்று போன்று இருக்கிறது. இதனை கொண்டு வங்கி கணக்கு மற்றும் பல்வேறு அரசு திட்டங்களில் இணைய பயன்படுத்திக் கொள்ளலாம்.

UIDAI அமைப்பு

UIDAI அமைப்பு

இந்தியாவில் ஆதார் வழங்கும் UIDAI அமைப்பு பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற்றுக் கொள்ள வழி செய்கிறது. இதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. அந்தகவகையில் குழந்தை மற்றும் சிறுவர்களுக்கு ஆதார் கார்டு பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ Z1X.! உடனே முந்துங்கள்.!ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ Z1X.! உடனே முந்துங்கள்.!

ஐந்து வயதிற்கும்

ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி?

ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தை என யாரேனும் ஒருவர் ஆதார் பெற குழந்தையுடன் இருக்க வேண்டும்.

ஆதார் கார்டு நகலை

ஆதார் கார்டினை பெற அருகாமையில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் குழந்தையின் பிறப்பு சான்றிதழை இணைத்து, பெற்றோரின் ஆதார் கார்டு நகலை வழங்க வேண்டும்.

வயது 5 இல் இருந்து 15 ஆகும்

இவ்வாறு செய்யும் போது அனைத்து தரவுகளின் அசல் கையில் கொண்டு செல்ல வேண்டும். இதுபோன்ற சூழலில் குழந்தையின் புகைப்படம் மட்டும் போதுமானது. குழந்தையின் வயது 5 இல் இருந்து 15 ஆகும் போது, அவர்கள் பத்து கைரேகைகள், ஐரிஸ் ஸ்கேன் மற்றும் ஃபேஷியல் ஸ்கேன் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

கிமு 550-330 காலத்தின் பண்டைய மொழியை மொழிபெயர்க்க AI-க்கு கோச்சிங் கிளாஸ்!கிமு 550-330 காலத்தின் பண்டைய மொழியை மொழிபெயர்க்க AI-க்கு கோச்சிங் கிளாஸ்!

ஐந்து முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற்ற விண்ணப்பிப்பது எப்படி?

ஐந்து முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற்ற விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து குழந்தை பயிலும் பள்ளியின் அடையாள சான்று அல்லது பொனஃபைடு சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இதனுடன் முகவரி சான்று, பிறப்பு சான்று உள்ளிட்டவையும் சமர்பிக்க வேண்டும். குழந்தைக்கு பள்ளி அடையாள சான்று இல்லாத பட்சத்தில் பெற்றோர் தங்களின் ஆதார் கார்டு மற்றும் அரசு அதிகாரி கையொப்பம் இட்ட அடையாள சான்றினை சமர்பிக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to apply Aadhaar Card for Childrens : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X