Home
How to

அடடே.. பான் கார்டில் பிழை இருந்தால் ஆன்லைனில் இவ்வளவு சுலபமாக திருத்தலாமா? வாங்க பார்ப்போம்!

இந்தியா முழுவதும் பான்கார்டு ஒரு முக்கிய அரசு ஆவணமாகக் கருதப்படுகிறது. அதாவது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது, அரசாங்க சலுகைகள் பெற எனப் பல்வேறு பணிகளுக்கு இந்த பான் கார்டு கட்டாயம் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இது உங்கள் அடையாளத்தை நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து முக்கிய நிதி பரிவர்த்தனைகளுக்கும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும் அவசியமாகிறது. பின்பு ஆதார் அட்டையில் உள்ள ஆதார் எண் எப்படி உங்களின் அடையாள விபரங்களை வெளிப்படுத்துகிறதோ, அதேபோல் பான் அட்டை உங்களின் நிதி வரலாற்றைக் காண்பிக்கிறது.

அடடே.. பான் கார்டில் பிழை இருந்தால் இவ்வளவு சுலபமாக திருத்தலாமா?

அதேபோல் வங்கி கணக்கு திறக்கவும்,கடனுக்கு விண்ணப்பிக்கவும், வருமான வரித் தாக்கல் செய்யவும் என அனைத்து முக்கிய சேவைகளுக்குப் பயன்படும் இந்த பான் கார்டில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இப்போது பான் கார்டில் பிழை இருந்தால் அதைத் திருத்தம் செய்வது எப்படி என்று சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் பான் கார்டு திருத்தம் செய்யவும் மற்றும் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கவும் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளத்தில் செல்ல வேண்டும். அடுத்து அந்த இணையதள பக்கத்தில் Application Type தேர்ந்தெடுத்து Changes or Correction in Existing PAN card' என்பதைத் தேர்வு செய்யவும்.

வழிமுறை-2: அதன்பின்பு இந்த இணையதளப் பக்கத்தில் பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். பின் நீங்கள் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த உடன் அளிக்கப்படும் டோக்கன் எண்ணைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த டோக்கன் எண் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும். எனவே இதில் நீங்கள் சரியான மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்க வேண்டும்.

வழிமுறை-3: அதேபோல் இப்போது பான் கார்டு பெயர் ஆதாரில் உள்ளது போன்ற தான் அளிக்கப்படுகிறது. எனவே ஆதார் கார்டு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு நீங்கள் திருத்தம் செய்ய வேண்டிய விவரங்களை எல்லாம் அளித்த பிறகு, அடையாள மற்றும் முகவரி ஆவணங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.

குறிப்பாக இந்த வழிமுறைகளைச் சரியாக முடித்த பிறகு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து கட்டணத்தை செலுத்தினால் போதும். பான் கார்டு திருத்தம் செய்யப்பட்டு உங்களின் முகவரிக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடடே.. பான் கார்டில் பிழை இருந்தால் இவ்வளவு சுலபமாக திருத்தலாமா?

அதேபோல் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித் துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் இதற்குக் கால அவகாசமும் வழங்கப்பட்டது. கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு வந்தாலும் நிறையப் பேர் பான் கார்டை ஆதாருடன் இணைக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் கடைசியாக வெளியாகியிருந்த அறிவிப்பில் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. குறிப்பாக வருமான வரி விலக்கு பெறுவதற்காகப் பல பான் கார்டுகளை வைத்துக் கொண்டு சிலர் ஏமாற்றுவதாக வருமான வரித்துறைக்குப் புகார்கள் வந்தது. இதைத் தொடர்ந்து தான் பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்கும் விஷயத்தைக் கையில் எடுத்தது மத்திய அரசு.

Best Mobiles in India

English summary
How To Amend PAN Card Online Easily: Simple Tips! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X