ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்யாமல் நேவிகேஷனல் பட்டன்களை சேர்ப்பது எப்படி?

இதற்கு அஞ்சி ஸ்மார்ட்போனை என்ன செய்வதென்று தெரியவில்லையா? ஸ்மார்ட்போனை ரூட் செய்யாமலேயே அதில் சாஃப்ட் கீ சேர்க்க ஒரு வழிமுறை இருக்கிறது.

|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் கீழ் இருக்கும் மூன்று சிறிய பட்டன்களை கொண்டு பேக் அல்லது ஹோம் ஸ்கிரீனிற்கு செல்லலாம். எனினும், இந்த பயனுள்ள அம்சம் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படவில்லை. இந்த மூன்று பட்டன்களை சேர்க்க ஆன்லனைில் கிடைக்கும் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. எனினும், இவற்றை செய்ய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனிற்கான வாரண்டி தீர்ந்து போகும்.

ஆண்ட்ராய்டை ரூட் செய்யாமல் நேவிகேஷனல் பட்டன்களை சேர்ப்பது எப்படி?

இதற்கு அஞ்சி ஸ்மார்ட்போனை என்ன செய்வதென்று தெரியவில்லையா? ஸ்மார்ட்போனை ரூட் செய்யாமலேயே அதில் சாஃப்ட் கீ சேர்க்க ஒரு வழிமுறை இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலிகளை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு சாதனத்தில் சாஃப்ட் கீ சேர்க்கலாம்.

 பேக் பட்டன் (ரூட் செய்ய வேண்டாம்)

பேக் பட்டன் (ரூட் செய்ய வேண்டாம்)

செயலியை லான்ச் செய்ததும் பாப்-அப் ஒன்று திறக்கும். அதில் செயலி அக்சஸபிலிட்டி பெர்மிஷனை அனுமதிக்கக் கோரும். இதன் பின் ஆக்டிவ் பட்டனை க்ளிக் செய்து திரையில் தோன்ற வேண்டிய பட்டன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த பட்டன்களை க்ளிக் செய்து அவற்றை இடமாற்றம் செய்ய முடியும். இவற்றின் அளவுகளை மாற்றியமைத்து, அவற்றை நீங்கள் விரும்பும் வகையில் வைத்துக் கொள்ள முடியும்.

எளிய கண்ட்ரோல்

எளிய கண்ட்ரோல்

முந்தைய செயலியை போன்றே இந்த செயலியை பயன்படுத்தவும், அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும். செட்டிங்ஸ் சென்று நீங்கள் விரும்பும் வகையில் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து திரையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஐகான்களில் உங்களுக்கு வேண்டியவற்றை க்ளிக் செய்து பயன்படுத்தலாம்.

சாஃப்ட் கீஸ் 2

சாஃப்ட் கீஸ் 2

அக்சஸபிலிட்டி அனுமதி வழங்கிய பின்,செட்டிங்ஸ் ஐகானில் அகலம், உயரம் மற்றும் டிரான்ஸ்பேரென்சி உள்ளிட்டவற்றை நீங்கள் விரும்பும் வகையில் தேர்வு செய்து கொள்ளலாம். இனி ஹோம் பட்டனை க்ளிக் செய்தால் சாஃப்ட் பட்டன்களை திரையின் கீழ் பார்க்க முடியும்.

விர்ச்சுவல் சாஃப்ட் கீஸ்

விர்ச்சுவல் சாஃப்ட் கீஸ்

தேவையான அனுமதிகளை வழங்கியதும், செயலியை இயக்க துவங்கவும். இனி விர்ச்சுவல் சாஃப்ட் கீஸ் அளவு மற்றும் வடிவத்தை தேர்வு செய்ய வேண்டும். இனி கஸ்டமைசேஷன் செட்டிங்களை ஷேர்டு கான்ஃபிக் பகுதியில் இயக்க முடியும். உதாரணத்திற்கு கீபோர்டு திறக்கப்படும் போது சாஃப்ட் கீ பார் மறைந்து போக செய்ய முடியும்.

நேவிகேஷன் பார்

நேவிகேஷன் பார்

நேவிகேஷன் பட்டன்களை சேர்க்க நேவிகேஷன் பார் சிறப்பான செயலியாக இருக்கிறது. இந்த செயலியின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் இதில் பல்வேறு கஸ்டமைசேஷன் அம்சங்கள் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தி நேவிகேஷன் பார் நிறங்களை மாற்றியமைக்க முடியும்.

ஹோம் பட்டன்

ஹோம் பட்டன்

பெயருக்கு ஏற்றார்போோல், இந்த செயலி கொண்டு ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டனை மட்டும் சேர்க்க முடியும். ஸ்மார்ட்போன் உடைந்திருக்கும் சூழலில் இது பயன்தரும் செயலியாகும். நேவிகேஷன் பார் செயலியை போன்று இந்த செயலியிலும் பட்டன் அளவுகளை மாற்றுவது மற்றும் நிறங்களை மாற்ற முடியும்.

அசிஸ்டிவ் டச்

அசிஸ்டிவ் டச்

இந்த செயலியை கொண்டு பிரைட்னஸ் மாற்றுவது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது என பல்வேறு அம்சங்களை இயக்க முடியும். இத்துடன் இதை எங்கு வேண்டுமானாலும் டிராக் செய்து ஹோம் அல்லது பேக் பட்டனாக நேவிகேஷன் பாருக்கு மாற்றாக ஃபுளோட்டிங் பேனலில் வைத்துக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to add soft navigational keys on Android without rooting : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X