Home
How to

mAadhaar ஆப்.. குடும்ப உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமா? இதோ சிம்பிள் டிப்ஸ்.!

ஆதார் என்பது இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். குறிப்பாக கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை அனைத்து இடங்களிலும் தேவைப்படும் ஒரு மிக முக்கியமான அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆதார்.

அதேபோல் இந்த ஆதார் கார்டை விட UIDAI அமைப்பு மூலம் உருவாகப்பட்ட எம்ஆதார் (mAadhaar) மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்துவது மிகவும் மிகவும் நல்லது அதேசமயம் பாதுகாப்பானது. பின்பு இந்த எம்ஆதார் ஆப்பில் குடும்ப உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளலாம்.

mAadhaar ஆப்.. குடும்ப உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமா? சிம்பிள் டிப்ஸ்

குறிப்பாகப் பதிவு செய்யப்பட்ட மொபைலை ஆதாருடன் இணைத்தால் மட்டுமே எம்ஆதார் ஆப்பில் ஆதார் புரோபைலை (Profile) உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ஆப் வைத்திருந்தால், ஆதார் அட்டையை எல்லா இடத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஆதார் மூலம் கிடைக்கும் சேவைகளுக்கும் இந்த ஆப்-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேசமயம் mAadhaar APP ஆதார் எண் வைத்திருப்பவர்களின் சுயவிவரங்களான பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை எளிமையாக அறிய உதவும். பின்பு சில எளிய வழிமுறைகள் மூலம் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை எம்ஆதார் ஆப்பில் சேர்க்கலாம்.

எம்ஆதார் ஆப்பில் ஒருவர் அதிகபட்சம் ஐந்து குடும்ப உறுப்பினர்களை அவர்களது ஆதாரில் சேர்க்கப்பட்ட அதே மொபைல் போன் விவரங்களுடன் இணைக்கலாம். குறிப்பாக ஆதாருடன் இணைக்கப்பட்ட அதே மொபைல் எண்ணுடன் தான் அவர்களது விவரங்களைச் சேர்க்க முடியும். இப்போது இதற்கான வழிமுறைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் எம்ஆதார் ஆப்பை திறந்து கொள்ளுங்கள். அதில் Add Profile என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-2: அடுத்து உங்களது குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை எண்ணை அதில் பதிவிட வேண்டும். பின்பு விவரங்களை சரிபார்த்த பின்னர் விதிகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

வழிமுறை-3: அதன்பின்பு உங்களது குடும்ப உறுப்பினருக்கு ஒரு ஓடிபி அவரது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும். அதை கேட்டுப் பெறுங்கள். அந்த ஓடிபி-ஐ இந்த ஆப்பில் டைப் செய்யுங்கள்.

mAadhaar ஆப்.. குடும்ப உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமா? சிம்பிள் டிப்ஸ்

வழிமுறை-4: குறிப்பாக விவரங்கள் சரிபார்க்கப்பட்ட உடன் உங்கள் குடும்ப உறுப்பினரின் விவரங்கள் உங்கள் ஆப்பில் சேர்க்கப்பட்டுவிடும். பின்பு குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் உங்கள் எம்ஆதார் ஆப்பில் வெற்றிகரமாகச் சேர்ந்துவிட்டால் நீங்கள் அவர்களது ஆதார் விவரங்களை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல் எம்ஆதார் எனப்படும் இந்த ஆப் அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மாரட்போன்களிலும் பயன்படுத்த முடியும். குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் இந்தியாவில் அரசுக்குச் சொந்தமான மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற இந்த ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த ஆதார் முக்கியமானது மற்றும் கட்டாயமானது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to add profiles of family members using mAadhaar app: Here are simple tips :
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X