காண்டாக்டில் சேவ் செய்யாமலே வாட்ஸ்அப் க்ரூப்பில் மற்றவர்களை சேர்ப்பது எப்படி? இதோ நறுக் டிப்ஸ்.!

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் உருவாக்கும் வழிமுறை நம்மில் பலரும் அறிந்த ஒன்று தான். க்ரூப் உருவாக்கப்பட்டதும், காண்டாக்ட் பட்டியலில் இருப்பவர்களை அதில் சேர்க்க வேண்டும்.

|

உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த செயலியில் வாய்ஸ், வீடியோ சாட், க்ரூப் சாட் என பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. இதன் க்ரூப் சாட் அம்சம் நண்பர்கள், குடும்பத்தாருடன் சாட் செய்ய பயன்தரும் ஒன்றாக இருக்கிறது.

 க்ரூப் அட்மின்கள்

க்ரூப் அட்மின்கள்

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் உருவாக்கும் வழிமுறை நம்மில் பலரும் அறிந்த ஒன்று தான். க்ரூப் உருவாக்கப்பட்டதும், காண்டாக்ட் பட்டியலில் இருப்பவர்களை அதில் சேர்க்க வேண்டும். இதற்கு முதலில் க்ரூப் அட்மின்கள் காண்டாக்ட்களை தங்களது மொபைலில் சேமிக்க வேண்டும். காண்டாக்ட்களை சேமிக்காமல், க்ரூப்பில் மற்றவர்களை சேர்த்துக் கொள்ளும் வழி இருந்தால் எப்படி இருக்கும். உண்மையில் இவ்வாறு செய்ய ஒரு வழிமுறை இருக்கிறது. புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் க்ரூப் இன்வைட் லின்க் எனும் அம்சத்தை சேர்த்து இருக்கிறது. இதை பயன்படுத்தி அட்மின்கள் க்ரூப்களுக்கு மற்றவர்களை சேர்க்க முடியும். இவ்வாறு செய்ய குறிப்பிட்ட காண்டாக்ட்டை மொபைலில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை.

புதிய அப்டேட்

புதிய அப்டேட்

1 - இந்த அம்சத்தை பயன்படுத்த ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.


2 - இன்வைட் லின்க் உருவாக்க பயனரிடம் அட்மின் உரிமைகள் இருக்க வேண்டும்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

#1 - வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியை ஹோம் ஸ்கிரீன அல்லது லான்ச்சரில் இருந்து திறக்க வேண்டும்.

#2

#2

- க்ரூப் கான்வர்சேஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

#3

#3

- இனி திரையின் வலதுபுறம் மேல்பக்கம் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.

#4

#4

-இனி க்ரூப் இன்ஃபோ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

#5

#5

- கீழ்புறமாக ஸ்கிரால் செய்து இன்வைட் வியா லின்க் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

#6

#6

- இதில் இன்வைட் வழங்கப்பட்டதை உறுதி செய்யும் குறுந்தகவல் தோன்றும், இதில் Send link via WhatsApp, Copy link, Share link as well as Revoke link போன்ற ஆப்ஷன்கள் இருக்கும்.

#7

#7

- இறுதியில் நீங்கள் க்ரூப்பில் சேர்க்க வேண்டிய நபருக்கு அதனை அனுப்ப வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to add people to WhatsApp groups without saving them on your contacts : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X