Home
How to

Aadhaar இல் போன் நம்பர் மாற்றுவது இவ்வளவு ஈசியா?- சிம்பிள் டிப்ஸ்!

இந்தியாவில் பல்வேறு தேவைகளுக்கும் பிரதான ஆவணமாக ஆதார் கார்ட் இருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்ட் இல் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால்., எப்படி என்று அறிந்துக் கொள்வது மிக அவசியம்.

குறிப்பாக மொபைல் எண் இணைப்பது மற்றும் மாற்றம் செய்வது எப்படி என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். ஆதார் கார்ட் உடன் மொபைல் எண்ணை இணைப்பது என்பதை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. UIDAI தரவுத்தளத்தில் உங்கள் எண்ணை எவ்வாறு இணைப்பது மற்றும் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் என்பது அவசியம்

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் என்பது அவசியம்

ஆதாரில் எந்தவொரு மாற்றத்தை மேற்கொள்வதற்கும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் என்பது மிக அவசியம். குறிப்பிட்ட தகவல்களை நாமே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம். ஆனால் சில முக்கிய தகவல்களை மாற்றுவதற்கு ஆதார் பதிவு மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.

மொபைல் எண் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம்

மொபைல் எண் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம்

இந்தியாவில் பிரதான ஆவணமாக இருக்கும் ஆதார் கார்ட் உடன் ஒவ்வொருவரும் தங்களது 10 இலக்க மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை இந்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.

ஆதார் கார்ட் இல் மாற்றம் செய்ய முணையும் போது தான் பலருக்கும் ஒரு யோசனை வரும்.. ஆதார் உடன் எந்த மொபைல் எண்ணை இணைத்தோம், அந்த சிம் கார்ட் தற்போது பயன்படுத்தவில்லையே என்று.

இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்வதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம் வாங்க.

ஆதார் கார்ட் இல் மொபைல் எண் மாற்றம் செய்வது எப்படி?

ஆதார் கார்ட் இல் மொபைல் எண் மாற்றம் செய்வது எப்படி?

முன்னதாகவே குறிப்பிட்டோம், ஆதார் கார்ட் இல் ஒரு சில விஷயங்களை மாற்றம் செய்வதற்கு அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும் என்று. அதன்படி மொபைல் எண் மாற்றம் தொடர்பான விஷயத்துக்கும் ஆதார் மையம் செல்ல வேண்டும்.

நிரந்தர ஆதார் பதிவு மையம்

உங்கள் அருகிலுள்ள நிரந்தர ஆதார் பதிவு மையத்துக்கு செல்ல வேண்டும்.

அங்கு ஆதார் புதுப்பிப்பு / திருத்தம் என்ற படிவித்தை நிரப்ப வேண்டும்.

உங்கள் படிவத்தை நன்கு சரிபார்த்து ஆதார் நிர்வாகியிடம் சமர்பிக்க வேண்டும்.

இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

புதுப்பிப்பு கோரிக்கை எண் கட்டாயம்

படிவம் சமர்பித்த பிறகு புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) அடங்கிய ஒப்புகை சீட்டை ஆதார் நிர்வாகி உங்களுக்கு வழங்குவார்.

இந்த URN எண்ணை வைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மொபைல் எண் 90 நாட்களுக்குள் UIDAI தரவுத்தளத்தில் புதுப்பிக்கப்படும்.

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை எவ்வாறு இணைப்பது?

ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை எவ்வாறு இணைப்பது?

அதேபோல் உங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.

ஆதார் பதிவு படிவத்தை நிரப்ப வேண்டும்.

நீங்கள் ஆதாருடன் இணைக்க விரும்பும் மொபைல் எண்ணை படிவத்தில் இணைக்கவும்.

பின் படிவத்தை ஆதார் நிர்வாகியிடம் சமர்பிக்கவும்.

ரூ.50 கட்டணம்

நிர்வாகி உங்கள் விவரங்களை பயோமெட்ரிக்ஸ் ஸ்கேனிங் மூலம் உறுதிப்படுத்தி அங்கீகரிப்பார்.

இதற்கும் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.

mAadhaar ஆப் அல்லது UIDAI தரவுத்தளத்தில் உங்கள் அப்டேட் நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

பாதுகாப்பு மிக அவசியம்

பாதுகாப்பு மிக அவசியம்

ஆதார் கார்ட்டை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆதார் பாதுகாப்பு குறித்து ஆதார் அமைப்பு (UIDAI) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்.,

ஆதார் கார்ட் நகலை யாரிடமும் கொடுக்க வேண்டாம். ஆதார் நகலை தவறாக கையாளக் கூடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

அதேபோல் பொது இடங்களில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அப்படி அத்தியாவசிய தேவைக்கு ஆதார் அட்டையை பிரவுசிங் சென்டர் உட்பட பொது இடங்களில் பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில் உடனே அதை டெலிட் செய்யும்படி அறிவுறுத்தி உள்ளது.

கவனமாக ஆதார் கார்ட்டை கையாள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to Add or Change Your Phone Number in Aadhaar Card?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X