SBI YONO ஆப்ஸ் மூலம் எப்படி புதிய Beneficiary-ஐ ஆட் செய்வது? இது ஏன் ரொம்ப யூஸ்ஃபுல் தெரியுமா?

|

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு, நீங்கள் SBI வங்கியின் SBI YONO ஆப்ஸை பயன்படுத்துகிறீர்களா? அப்போ, இந்த ஆப்ஸை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான டிப்ஸ் இது. ஆம், SBI YONO ஆப்ஸ் மூலம் எப்படி ஒரு புதிய பெனிபிஸியாரை உங்கள் கணக்குடன் ஆட் (add beneficiary) செய்து, பணம் அனுப்புவது என்பதைத் தான் இங்குப் பார்க்கப்போகிறோம்.

SBI YONO ஆப்ஸ் மற்றும் SBI YONO LITE ஆப்ஸ்

SBI YONO ஆப்ஸ் மற்றும் SBI YONO LITE ஆப்ஸ்

ஆன்லைன் பேங்கிங் சேவைக்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்ட மொபைல் பயன்பாடுகள் தான் இந்த SBI YONO ஆப்ஸ் மற்றும் SBI YONO LITE ஆப்ஸ் ஆகும். SBI வங்கி தனது பெரும்பாலான சேவைகளை ஆன்லைன் மூலம் வழங்கி வருகிறது என்பதனால், நம் அனைவரும் இந்த ஆப்ஸ் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த SBI YONO ஆப்ஸ் எதற்கெல்லாம் பயன்படுகிறது?

இந்த SBI YONO ஆப்ஸ் எதற்கெல்லாம் பயன்படுகிறது?

இந்த SBI YONO ஆப்ஸின் இரண்டு பயன்பாடுகளும் பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல், பில்களை செலுத்துதல், ரீசார்ஜ் செய்தல், டாப்-அப் செய்தல் போன்ற பல அம்சங்களைச் சேர்த்து பேங்கிங் உடன் வழங்குகின்றது. இந்த ஆப்ஸ், SBI வங்கி பயனர்களின் வங்கி கணக்கைச் சரிபார்க்கவும், மின்னணு முறையில் உருவாக்கப்பட்ட பாஸ்புக்கை வேண்டிய நேரத்தில் கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.

இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?இந்தியாவில் டைனோசர் முட்டை! 2050 இல் டைனோசர் மீண்டும் உயிர் பெறுமா? என்னப்பா சொல்றீங்க?

புதிய பயனாளிகளை எப்படி ஆட் செய்து சேவ் செய்வது?

புதிய பயனாளிகளை எப்படி ஆட் செய்து சேவ் செய்வது?

உங்கள் கணக்கில் ஒரு புதிய பரிவர்த்தனையை நீங்கள் தொடங்க விரும்பினால் அல்லது ஒரு புதிய பயனாளிகளை நீங்கள் இந்த ஆப்ஸ் உடன் சேர்க்க விரும்பினால், கீழே வழங்கப்பட்டுள்ள செயல்முறையை அப்படியே சரியாகப் பின்பற்றுங்கள். SBI YONO ஆப்ஸின் add beneficiary அம்சத்தின் உதவியுடன் நீங்கள் சேமிக்க விரும்பும் பயனாளியின் கணக்கு எண்ணை எளிதாகச் சேமித்து, உடனடியாகப் பணத்தை அனுப்ப இந்த அம்சம் அனுமதிக்கிறது.

SBI YONO ஆப்ஸில் எப்படி புதிய பயனாளியைச் சேர்ப்பது?

SBI YONO ஆப்ஸில் எப்படி புதிய பயனாளியைச் சேர்ப்பது?

முதலில் உங்கள் போனில் உள்ள SBI YONO ஆப்ஸ் சமீபத்திய அப்டேட் உடன் செயல்படுகிறதா என்பதைச் சோதனை செய்துகொள்ளுங்கள்.

  • பிறகு உங்கள் ஸ்மார்ட்போனில் SBI YONO ஆப்ஸை ஓபன் செய்யவும்.
  • இப்போது உங்களின் MPIN விபரங்களை உள்ளிட்டு லாகின் செய்யலாம்
  • அல்லது Username and Password பயன்படுத்தி உள்நுழையலாம்.
  • இப்போது, Yono Pay ' என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
  • இப்போது Bank Account என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • 5 கேமரா..iPhone 13 போல் டிஸ்பிளே..விலை வெறும் ரூ.7,600 மட்டுமே.. இது என்ன போன் தெரியுமா?5 கேமரா..iPhone 13 போல் டிஸ்பிளே..விலை வெறும் ரூ.7,600 மட்டுமே.. இது என்ன போன் தெரியுமா?

    YONO லைட் ஆப்ஸ் பயனர்களின் கவனத்திற்கு

    YONO லைட் ஆப்ஸ் பயனர்களின் கவனத்திற்கு

    YONO லைட் ஆப்ஸ் பயனர்கள் 'Fund Transfer' என்பதைக் கிளிக் செய்யவும்.
    இப்போது 'Add/Manage Beneficiary' என்ற விருப்பத்தைத் தட்டவும்.
    இங்கே, 'SBI Internet Banking Profile Password' உள்ளிட்டு submit என்பதைக் கிளிக் செய்யவும்.
    இப்போது ஒரு பயனாளியைச் சேர்க்க, அவருக்குப் பணம் செலுத்தும் செயல்முறையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    Beneficiary Type விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

    Beneficiary Type விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

    • எனவே, இதைத் தொடங்குவதற்கு, நீங்கள் 'Select Beneficiary Type' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    • இப்போது State Bank of India or Other Bank Account என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தொடரவும்.
    • அடுத்ததாக, Beneficiary கணக்கின் அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.
    • பிறகு, Transfer limit விருப்பத்தில் ஆப்ஸ் உங்களுக்குக் காட்டும் அதிகபட்ச வரம்பை வைத்துக்கொள்ளவும்.
    • இப்போது, Next என்பதை கிளிக் செய்யவும்.
    • Nothing Phone 1 இந்தியாவில் Reliance டிஜிட்டல் வழியாக விற்பனையா? இது சீன போனா? உண்மை இதோ!Nothing Phone 1 இந்தியாவில் Reliance டிஜிட்டல் வழியாக விற்பனையா? இது சீன போனா? உண்மை இதோ!

      எவ்வளவு நேரத்தில் புதிய பயனாளி ஆட் செய்யப்படும்?

      எவ்வளவு நேரத்தில் புதிய பயனாளி ஆட் செய்யப்படும்?

      • இப்போது நீங்கள் இந்த Beneficiary கணக்கிற்கு ரூ.1 என்ற தொகையை அனுப்பத் தயாராகிவிட்டீர்கள்.
      • பணத்தை அனுப்ப இப்போது ஆப்ஸ் உங்களுடைய உறுதிப்படுத்தலைக் கேட்கும்.
      • பிறகு உங்கள் போனிற்கு அனுப்பப்படும் OTP ஐப் சரியாக உள்ளிடவும்.
      • இப்போது, ​​24 மணி நேரத்திற்குள் உங்கள் பயனாளி கணக்கு SBI YONO / SBI YONO LITE ஆப்ஸில் சேர்க்கப்படும்.
      • முக்கிய குறிப்பு இதை கவனிக்க மறக்காதீர்கள்

        முக்கிய குறிப்பு இதை கவனிக்க மறக்காதீர்கள்

        இந்த முறையைப் பின்பற்றி மிக எளிதாக உங்கள் எஸ்பிஐ யோனோ ஆப்ஸில் புதிய Beneficiary-ஐ ஆட் செய்யலாம்.

        முக்கிய குறிப்பு: எஸ்பிஐ யோனோ மற்றும் எஸ்பிஐ யோனோ லைட் ஆப்ஸ் இரண்டும் ஒரே மாதிரியானவை. ஆனால், யோனா லைட் ஆப்ஸ் லோ-எண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கானது. சில அம்சங்கள் மட்டும் லைட் வெர்ஷனில் கிடைக்காது என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். லைட் பயனர்கள் Beneficiary ஆட் செய்ய Fund Transfer பிரிவிற்குள் செல்ல வேண்டும்.

Best Mobiles in India

English summary
How To Add New Beneficiary In SBI YONO App : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X