Just In
- 1 hr ago
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- 1 hr ago
மே 23: அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஒப்போ பேட் ஏர்.!
- 1 hr ago
ஒன்பிளஸ் 9 பயனர்களே: ஒன்பிளஸ் 9 தொடருக்கான புதிய பாதுகாப்பு அப்டேட் வெளியீடு!
- 2 hrs ago
இவ்வளவு தான் வாழ்க்கை- ஒரே ஒரு புகைப்படத்தில் மொத்த வாழ்க்கை தத்துவம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட் வைரல்!
Don't Miss
- Sports
சொதப்பினால் ஒத்துக்கனும்.. ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ருத்துராஜ்..சிஎஸ்கே தோல்வி குறித்து விளக்கம்
- Movies
பாடாய்ப்படுத்தும் அமீர்.. கண்ணீர் விட்டு கதறும் பாவனி.. தப்பிக்க வழியே இல்லையா என கேட்கிறாரே?
- Finance
இனி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி சூடுபிடிக்கும்.. மஹிந்திரா - வோக்ஸ்வேகன் புதிய ஒப்பந்தம்..!
- News
பப்ஜி மதனுக்கு ஜாமீன் கூடாது.. வெளியே போய் மீண்டும் ஆபாச வீடியோக்களை ரிலீஸ் செய்வார்.. போலீஸ் கறார்
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சவால்... இந்தியாவில் பலரும் காத்து கிடந்த கார் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- Lifestyle
பிட்சா தோசை
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீண் டிராஃபிக் அபராதத்தை தவிர்க்க: உடனே டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தை சேவ் செய்யுங்கள்.. எப்படி தெரியுமா?
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பல முக்கியமான மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை நமது இந்திய அரசாங்கம் வழங்கி வருகிறது. குறிப்பாக நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான கட்டாய ஆவணமாகும். இதேபோல், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாகன ஓட்டுனர்களுக்கென்று தனித்தனி அடையாள ஓட்டுநர் உரிமத்தை நமது நாட்டின் அரசாங்கம் வழங்கி வருகிறது. நீங்கள் வாகனம் ஓட்டும் போது, எப்போதும் இந்த ஓட்டுநர் உரிமம் உங்கள் கையில் இருப்பது கட்டாயம்.

காவல்துறை நண்பர்களின் கழுகு பார்வை
ஆனால், சில நேரங்களில் எதோ ஒரு சூழ்நிலையில் நாம் இந்த ஓட்டுநர் உரிமத்தைக் கையில் எடுத்த செல்ல மறந்துவிடுவோம். நமது போதாத நேரமோ என்னவோ, என்று நம் கையில் சரியான ஆவணம் இல்லையோ அந்த நேரத்தில் தான் காவல்துறை நண்பர்களின் கழுகு பார்வையில் சிக்கி அவர் முன் சில காரணங்களைக் கூறி தயங்கி நிற்போம். என்ன தான் நீங்கள் காரணத்தை எடுத்துரைத்துக் கூறினாலும், காவல்துறை தன் கடமையைச் செய்யும். ஓட்டுநர் உரிமத்தைக் காட்டத் தவறிய குற்றத்திற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

வீண் டிராஃபிக் அபராதம் செலுத்தாமல் தப்பிக்க வழி இருக்கிறதா?
இப்படியான சிக்கலைச் சந்தித்து, அபராதம் செலுத்தாமல் தப்பிக்கச் சாமர்த்தியமான வழி ஒன்று இருக்கிறது. வீட்டில் இருந்து நாம் அனைவரும் வெளியில் செல்லும் நேரத்தில் நமது பர்ஸ் அல்லது ஆவணங்கள் இருக்கும் வாலெட்டை எடுத்துச் செல்ல மறந்திருப்போம். ஆனாலும், நம்மில் உள்ள பெரும்பாலானோர் யாருமே நமது மொபைல் போன்களை மறந்துவிட்டுச் சென்றதாக வரலாறு இல்லை. அப்படியே விட்டு சென்றிருந்தாலும், எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் மீண்டும் வந்து, மறந்து விட்டுச் சென்ற போனை எடுத்துச் செல்வோம். இதுவே நிதர்சனம்.

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் பரவாயில்லையா? இது இருந்தால் போதுமா?
வாகனம் ஓட்டிச் செல்லும் போது உங்கள் கைகளில் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால், உங்கள் கையில் உள்ள உங்களுடைய ஸ்மார்ட்போனில் டிஜிலாக்கர் ஆப்ஸ் இருந்து, அதில் உங்கள் ஓட்டுநர் உரிமத்தைச் சேர்த்திருந்தால் வீண் அபராதத்தை நீங்கள் முற்றிலுமாக தவிர்க்கலாம். தெரியாதவர்களுக்கு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இந்திய அரசாங்கம் அறிமுகம் செய்த சேவை தான் டிஜிலாக்கர் வசதி. இது நாட்டின் குடிமக்கள் தங்களுடைய முக்கியமான மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க உதவும் தளமாகும்.

DigiLocker உண்மையில் என்ன செய்யும் தெரியுமா?
உங்களுடைய ஆவணங்களின் அசல் காகிதத்தின் தொந்தரவு இல்லாமல் உங்களுடைய முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக டிஜிட்டல் முறையில் சேமிக்க இந்த டிஜிலாக்கர் அனுமதிக்கிறது. உண்மையை சொல்லப் போனால், இந்த DigiLocker எல்லா இடங்களிலும் உங்கள் காகித ஆவணங்களை எடுத்துச் செல்லும் தேவையை நீக்குகிறது. இதன் மூலம் உங்களுடைய ஆதார் அட்டை, பான் அட்டை விபரங்கள், வாகன ஓட்டுநர் உரிமம் போன்ற பிற அரசு சார்பான ஆவணங்களை இதில் சேமித்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எப்படி டிஜிலாக்கரில் உங்கள் ஓட்டுநர் உரிமத்தைச் சேமிப்பது?
ஒவ்வொருவரும் தங்களுடன் எடுத்துச் செல்லும் பொதுவான ஆவணங்களில் ஒன்று அவர்களின் ஓட்டுநர் உரிமம். இருப்பினும், சில சமயங்களில், சில காரணங்களால் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்லாதது, மிகப்பெரிய டிராபிக் சலான்க்கு உங்களைப் பொறுப்பாக்கிவிடும். ஆனால், டிஜிலாக்கரில் உங்கள் ஓட்டுநர் உரிமம் இருந்தால், அதிகாரியிடம் டிஜிலாக்கரில் இருந்து ஓட்டுநர் உரிமத்தைக் காண்பித்து நீங்கள் எந்த அபராதமும் செலுத்தாமல் அங்கிருந்து விடுபடலாம். சரி, இப்போது எப்படி டிஜிலாக்கரில் உங்கள் ஓட்டுநர் உரிமத்தைச் சேமிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.

DigiLocker சேவையின் MPIN எவ்வளவு முக்கியமானது? அதன் ஏன் மறக்கக்கூடாது?
முதலில் நீங்கள் www.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ DigiLocker இணையதளத்தைப் பார்வையிட வேண்டும். உங்கள் தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்யவும். நீங்கள் OTP (ஒரு முறை கடவுச்சொல்) பெறுவீர்கள், அதை உள்ளிடவும். கணக்கிற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க உங்களை அனுமதிக்கும். நீங்கள் ஒரு MPIN பாஸ்வோர்டையும் இதில் அமைக்கலாம். இது எதிர்காலத்தில் அல்லது உங்கள் ஆவணத்தை மிக விரைவாக ஆதாரமாக்க வேண்டிய சில சூழ்நிலைகளில் வேகமாக உள்நுழைவதை உறுதி செய்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
உங்கள் பணத்திற்கேற்ற மதிப்பு.. BSNL வழங்கும் இந்த 3 மாஸ் திட்டங்கள் பற்றி தெரியுமா?

முதலில் ஆதார் அட்டையை இணைத்து பின்னர் ஓட்டுநர் உரிமம் இணைக்கப்பட வேண்டுமா?
நீங்கள் சேவ் செய்யும் MPIN விபரத்தை எப்போதும் மறக்க வேண்டாம். எளிமையாக உங்களால் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய எண்களை உள்ளிடுவது சிறப்பானது. இப்போது, நீங்கள் உங்கள் கணக்கை உருவாக்கியதும், உங்கள் ஆதார் அட்டையை உங்கள் டிஜிலாக்கர் கணக்குடன் இணைக்கவும். இங்கே, நீங்கள் பயன்பாட்டில் உள்ள 'Pull Partner's Document' பகுதியை அணுக முடியும். இந்தப் பிரிவில், உங்களின் ஓட்டுநர் உரிம எண்ணை நீங்கள் நிரப்பலாம் மற்றும் ஆப்ஸ் பயன்பாட்டிற்கான உரிமத்தை வழங்கும்.

ஓட்டுநர் உரிமத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்யுங்கள்
'Pull Documents' என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் ஆவணத்தை ஆதாரமாகப் பெற விரும்பும் கூட்டாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், உதாரணமாக, இது அனைத்து மாநிலங்களின் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகும். ஆவண வகையில், ஓட்டுநர் உரிமத்தைக் கண்டுபிடித்து அதைத் தட்டவும். உங்கள் பெயர் மற்றும் முகவரி உட்பட தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
WhatsApp டிப்ஸ்: டெலீட் செய்யப்பட்ட சாட்களை எப்படி மீண்டும் பெறுவது? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இந்தியக் குடிமக்கள் அனைவரின் கைகளிலும் டிஜிலாக்கர் இருப்பது அவசியம்
பிறகு, ஆப்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளரிடமிருந்து உங்களுடைய சரியான அதிகாரப்பூர்வ ஆவணத்தைப் பெற்று பயன்பாட்டில் சேமிக்கும். ஒவ்வொரு டிஜிலாக்கர் ஆப்ஸ் பயனருக்கும் தங்களின் ஆவணங்களைச் சேமிக்க 1 ஜிபி இடம் வழங்கப்படுகிறது. அனைத்து அரசுத் துறைகளும் இப்போது டிஜிலாக்கருக்குப் பெறப்பட்ட ஆவணத்தைக் கடைப்பிடித்து, எந்தவொரு அரசாங்க நடைமுறைக்கும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் குடிமக்கள் அனைவரின் கைகளிலும் டிஜிலாக்கர் இருப்பது அவசியம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999