ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயர் சேர்க்கணுமா? வீட்டிலிருந்தே சுலபமாக செய்யலாம்.. இதோ முழு விவரம்..
ஆதார் கார்டு போன்று ரேஷன் கார்டும் மிகவும் முக்கியமான ஆவணமாகும். குறிப்பாக ரேஷன் கார்டு (ration card) ஆனது பல்வேறு ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதோடு மட்டுமின்றி அரசு நலத்திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு அத்தியாவசியமாக உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தற்போது உங்கள் வீட்டு ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை நீங்களே மிகவும் எளிதாக இணைக்க முடியும். இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

திருமணம் அல்லது குழந்தை பிறந்த பிறகு புதிய உறுப்பினர்கள் குடும்பங்களில் இணைகிறார்கள். ஆகவே அவர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் சேர்ப்பது மிகவு அவசியம் ஆகும். அதுவும் உங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்ந்திருந்தால், உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளில் அவர்களின் பெயரை ரேஷன் கார்டில் எளிதாகச் சேர்க்க முடியும்.
குறிப்பாக ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அதாவது வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வசிப்பிடச் சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மொபைல் நம்பர் போன்றவை தேவைப்படும்.
அதேபோல் குடும்பத்துக்குப் புதிதாக வந்துள்ள மருமகளின் பெயரைச் சேர்க்க விரும்பினால் அவருடைய ஆதார் கார்டு, திருமண சான்றிதழ் மற்றும் தந்தையின் ரேஷன் அட்டையில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது என்பதைக் குறிப்பிடும் சான்றிதழ் தேவைப்படும். மேலும் குழந்தையின் பெயரை சேர்க்க விரும்பினால் அக்குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ரேஷன் கார்டு ஆகியவை தேவைப்படும்.
ஆன்லைன் மூலம் பெயரைச் சேர்க்கும் முறை
மேலே குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள் இருந்தால் அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. அதாவது மாநிலத்தின் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்வதன் மூலம் இதை நீங்கள் செய்யலாம். அதுவும் இணையதளத்தில் உங்களது உள்நுழைவு ஐடியை உருவாக்கி, போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். அடுத்து முகப்பு பக்கத்தில் உள்ள புதிய உறுப்பினரைச் சேர்க்கவும் (Add New Member) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின்னர் விண்ணப்பப் படிவத்தில் புதிய உறுப்பினரின் அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் சரியாக நிரப்ப வேண்டும். மேலும் அதில் கோரப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்தவுடன் உங்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும். அதை கொண்டு உங்களது விண்ணப்பத்தை எளிதாகக் கண்காணிக்கலாம். குறிப்பாக சரிபார்ப்பு செயல்முறை முடிந்த பிறகு புதிய ரேஷன் கார்டு தபால் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

நேரடி முறையைத் தேர்ந்தெடுக்கலாம்
அதேசமயம் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்த முடியாதவர்கள் நேரடி முறையைத் தேர்ந்தெடுக்கலாம். இதைச் செய்ய அருகில் உள்ள உணவு வழங்கல் மையத்தில் செல்ல வேண்டும். அங்குப் படிவத்தை நிரப்பி தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். அதன்பின்பு நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, உங்களுக்கு ஒரு ரசீது வழங்கப்படும்.
அதைத்தொடர்ந்து ரேஷன் துறை அதிகாரிகள் உங்கள் ஆவணங்களை நேரில் சரிபார்ப்பார்கள். அனைத்து சரியாக இருந்தால் புதிய உறுப்பினரின் பெயர் ரேஷன் கார்டில் சேர்க்கப்படும்.


Click it and Unblock the Notifications